ஆசனவாய் கடுப்பை போக்கும் இயற்கை மருத்துவம்..! மலச்சிக்கல் - வயிற்றுவலிக்கும் நிவாரணம்
தவறான உணவு முறை பழக்கத்தால் ஏற்படும் ஆசனவாய் கடுப்பு மற்றும் மலச்சிக்கல்களுக்கு சமையலறையில் இருக்கும் பொருட்கள் மூலம் நிவாரணம் பெறலாம்.
தவறான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பலரும் அன்றாடம் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதற்கு உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும் என்றாலும், சில பிரச்சனைகளுக்கு வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்கள் வழியாகவே நிவாரணம் தேடலாம். நோயின் தீவிரத்தை பொறுத்து குணமாக வாய்ப்பு இருக்கிறது.
மண்ணீரல் வீக்கம்
கடுக்காயை உலர்த்தி தூள் செய்து காலை, மாலை பாலில் சிட்டிகையளவு கலந்து சாப்பிட்டு வர சில நாள்களில் மண்ணீரல் வீக்கம் குணமாகும்.
மேலும் படிக்க | அடிவயிற்றில் உள்ள கொழுப்பு குறைக்கணுமா? அப்போ தினமும் இதை மட்டும் சாப்பிட்டுங்கள்
மலச்சிக்கல்
தொடர்ந்து பதநீர் சாப்பிட்டு வர நீண்டகால மலச்சிக்கல் கூட குணமாகும். ஆப்பிள் பழத்தை தோலுடன் சாப்பிட்டு வந்தாலும் மலச்சிக்கல் ஏற்படாது. வாழைப்பழமும் சாப்பிடலாம்.
ஆசனவாய்க் கடுப்பு
அருகம்புல்லையும் சிறு நெருஞ்சி வேரையும் ஒன்றாக இடித்து நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு இரண்டு அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர ஆசனக் கடுப்பு, நீர்க்கடுப்பு குணமாகும்.
குழந்தைக்கு வயிற்று வலி
கொத்துமல்லியை (தனியா) வறுத்து. நீரில் நான்கு மணி நேரம் ஊற வைத்துப் பிறகு அதில் ஓர் அவுன்ஸ் வடிகட்டி உள்ளுக்குக் கொடுக்க குழந்தைகளுக்கு வயிற்று வலி குணமாகும்.
அடிக்கடி மூக்கில் இரத்தம்
கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து சர்க்கரையும் பாலும் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வர மூக்கிலுள்ள ஜவ்வுப் பகுதி நன்கு பலமடைந்து, அடிக்கடி இரத்தம் கொட்டுதல் நின்று விடும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ