Health Tips: என்னங்க சொல்றீங்க..!இந்த 5 காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா..?

Health Tips: இங்கே கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால் உடலில் சில பிரச்சனைகள் ஏற்படும் என சில மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 

Written by - Yuvashree | Last Updated : May 17, 2023, 05:49 PM IST
  • துரித உணவுகளை போலவே சில காய்கறிகளும் நமக்கு தீமை பயக்கின்றன.
  • உருளை, பச்சை பட்டானி போன்ற உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
  • எதையும் அளவாக எடுத்துக்கொண்டால் நல்லது.
Health Tips: என்னங்க சொல்றீங்க..!இந்த 5 காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா..? title=

அதிகம் துரித உணவுகளை சாப்பிட்டால் நம் உடலில் ஒருவகையான கெடுதல்கள் ஏற்படுவது போல சில காய்கறிகளை அதிகம் சாப்பிட்டாலும் நமக்கு சில பிரச்சனைகள் ஏற்படும். அப்படி அதிகம் சாப்பிடக்கூடாத காய்கறிகளையும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் தெரிந்து கொள்ளுங்கள். 

ஏன் காய்கறிகளை அதிகம் சாப்பிடக்கூடாது?

நாம், உடலையும் உடல் நலத்தையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அதற்கு டயட் மட்டுமே பயன்படும். அதிகளவில் ஹெல்தியான காய்கறிகளை எடுத்துக்கொள்வதால் நமது ஒட்டு மொத்த உடல் நலனும் பாதிக்கும் என சில மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சமீபத்தில் ஒரு பிரபல நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிகளவு ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்வதனால் கூட நமது உடல் எடை அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது. 

மேலும் படிக்க | இரசாயன முறையில் பழுத்த மாம்பழங்களை அடையாளம் காண இதோ டிப்ஸ்

அதிகம் எடுத்துக்கொள்ள கூடாத காய்கறிகள்:

சில காய்கறிகள் அதிகளவில் எடுத்துக்கொண்டால் நமக்கு உடனடியாக உடல் நலனில் பாதிப்பு ஏற்படும். அப்படி அதிகம் சாப்பிடக்கூடாத காய்கறிகள் இதோ..

உருளைக்கிழங்கு:

அனைவரது இல்லத்திலும் தக்காளி, வெங்காயத்தை அடுத்து அடிக்கடி காணப்படும் காய்கறிகளில் ஒன்று, உருளைக்கிழங்கு. இதை அதிகம் சாப்பிட வேண்டாம் என நம் வீட்டில் உள்ள பெரியவர்களே அடிக்கடி கூற கேட்டிருப்போம். உருளை, வாய்வு தொல்லை மற்றும் செரிமான கோளாறுகளை உடலில் ஏற்படுத்துமாம். இதை அதிகம் உட்கொண்டால், இரத்த அழுத்தம் மற்றும் இன்சுலின் குறைபாட்டை அதிகரித்து விடும் ஆபத்தும் உள்ளது.

பச்சை பட்டாணி:

சப்பாத்தி, பராத்தா அல்லது ஏதேனும் ஒரு பொறியல் செய்தால் நாம் பச்சை பட்டாணியை அதில் சேர்த்துக்கொள்வோம். இது நமது உணவுக்கு சுவை ஊட்டுமே அன்றி உடலிற்கு அவ்வளவாக நன்மை பயக்காது. இதை அதிகம் சாப்பிடுவதால் நமது உடலில் உள்ள கால்சிய சத்து குறைய நேரிடும் என மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். 

பீட்ரூட்:

சமீப காலங்களில் அதிகளவில் சாப்பிடப்படும் காய்கறிகளுள் ஒன்று, பீட்ரூட். ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால் நமது உடல் நலனிற்கும் நன்மை பயக்கும் ஒரு காய்கறிதான் பீட்ரூட். ஆனால் இதையே அதிகம் சாப்பிட்டால் அவ்வளவும் உடலிற்கு தீமை என சில மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். பீட்ரூட்டில் நைட்ரேட் எனப்படும் தன்மை, நம் உடலில் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க நேரிடுமாம். எனவே பீட்ரூட்டை சாப்பிடுகையில் அளவறிந்து சாப்பிடுங்கள். 

சோளம்:

வருத்த சோளம், வேக வைத்த சோளம், ஸ்விட் கார்ன், பேபி கார்ன் என விதவிதமாக சோளத்தை நம் வாழ்வில் எடுத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டோம். ஸ்னாக்ஸ் உணவு பட்டியலில் எப்போது இடம் பிடித்து விட்டன, இந்த சோள வகைகள். இதை சிலர், டயட்டிலும் சேர்த்துக்கொள்கின்றனர். ஆனால் சோளம் உண்மையில் நமது உடல் எடையை அதிகரிக்கத்தான் உதவும் என சில ஹெல்த் கேர் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதில் ஃபைபர் சத்துக்கள் நிறையவே இருந்தாலும் சர்க்கரை மற்றும் கார்போ ஹைட்ரேட்டின் அளவும் அதிகம் இருப்பதாக ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இதை அதிகளவில் சாப்பிடுவதால் உங்களது உடல் எடை அதிகரிக்கவும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக அனுபவப்பட்ட சிலர் கூறுகின்றனர். 

காளிஃப்ளவர்:

ப்ரக்கோலி, கேபேஜ் உள்ளிட்ட காய்கறிகள், சூப் அல்லது க்ரேவிக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில் காலிஃப்ளவரை வருத்தும் சாப்பிடுகிறோம். இது உங்கள் உடலில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரியுமா? இவ்வகையான காய்கறிகள் உடலில் வீக்கத்தையும்  செரிமான கோளாறுகளையும் உண்டாக்குமாம். இதில் உள்ள சர்க்கரையின் அளவுதான் அதற்கு காரணமாக கூறப்படுகிறது. 

“எது பண்ணாலும் ப்ளான் பண்ணி பண்ணனும்”

நடிகர் வடிவேலு கூறிய டையலாக் போல உங்கள் உடல் நலனிற்காக டயட் ப்ளான் உடற்பயிற்சி ப்ளான் என எதை செய்தாலும் ப்ளான் பண்ணி பண்ணுங்கள். காய்கறி டயட் சார்ட் போடுவதற்கு முன்னாள் அதில் மேற்கூறிய காய்கறிகளின் அளவு எவ்வளவு உள்ளது என சரிபாருங்கள். 

மேலும் படிக்க | ’மூலத்தை விரட்டி ஆண்மையை பெருக்கும் அரு மருந்து’ துத்தி இலையின் அற்புத மருத்துவ பலன்கள்

மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை போக்க... இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News