அகத்தின் அழகைவிட முகத்தின் அழகே பெரும்பாலும் கவனிக்கப்படுகிறது. இதனால் பலர் தங்களது முகங்கள் பொலிவு பெற க்ரீம்கள் போன்ற பொருள்களை பயன்படுத்துவர். இதனால் அவர்களது முகம் பொலிவு பெற்றாலும் சருமத்திற்கு பிரச்னைகள் உருவாகின்றன. அதனைத் தவிர்க்க இயற்கையான வழிகளை பின்பற்றலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எலுமிச்சை:


எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி சருமத்தை பொலிவாக வைத்திருப்பதற்கு உதவும். இதில் இருக்கும் சிட்ரிக் அமிலம் முகத்தில் படர்ந்திருக்கும் கருமையை நீக்கும் திறன் கொண்டது. ஒரு  தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன், சம அளவு தயிர் கலநது முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பொலிவாகும்.


கற்றாழை:


காற்றாழையானது புற ஊதாக்கதிர்களை பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாப்பதோடு சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுக்கும் திறன் கொண்டது. ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல்லுடன் சம அளவு தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பொலிவடையும்.


முட்டைகோஸும், தேனும்:


இரண்டு தேக்கரண்டிகள் முட்டைகோஸ் சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து நீரால் கழுவிவிடலாம். இதன் மூலம் முகத்தில் சுருக்கம் ஏற்படுவதை தடுத்து பொலிவான முகத்தை பெறலாம்.


கசகசாவும், ஜாதிக்காயும்:


கால் தேக்கரண்டி கசகசா, 3 கிராம்பு, அரை ஜாதிக்காய் என இந்த மூன்றையும் சிறிதளவு பால் ஊற்றி அரைக்க வேண்டும். அரைத்து முடித்த பிறகு அந்த அரவையை முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் முகப்பருவால் ஏற்பட்ட வடுக்களின் மீது பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 20 நாட்கள் செய்து வந்தால் முகம் பளபளக்கும்.


கஸ்தூரி மஞ்சள்:


குப்பைமேனி இலை சாறு 2 தேக்கரண்டிகள், கஸ்தூரி மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி, எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி, ரோஜா பன்னீர் அரை தேக்கரண்டி, கற்றாழை சாறு 1 தேக்கரண்டி தேன் கால் தேக்கரண்டி கலந்து முகத்தில் தடவ வேண்டும். 


மேலும் படிக்க | நரைமுடியை எளிதாக கருப்பாக்க இந்த மூலிகை எண்ணெய் கைகொடுக்கும்


20 நிமிடங்கள் ஊறவைத்த பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளி நீங்கி முகம் பொலிவாகும்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe