கழுத்தில் உள்ள மருக்கள் பாடாய் பாடுத்துதா? வலி இல்லாமல் இப்படி எளிதாய் நீக்கலாம்
Wart Removal Tips: மருக்களை எப்படியாவது நீக்கி விட வேண்டும் என பலரும் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலரோ அவற்றை தோலிலிருந்து பிடுங்க முயற்சிக்கிறார்கள். எனினும், இப்படி செய்வது மிகத் தவறு.
தோலில் உள்ள மருக்களை அகற்றுவதற்கான குறிப்புகள்: சிலரின் கழுத்தில் மருக்கள் அல்லது ஸ்கின் டேக் எனப்படும் குறிகள் தோன்றுவதை நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம். இவை ஒருவரது தோற்றத்தில், அழகில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. மருக்கள் அளவு பெரியதாகவும், ஸ்கின் டேக்ஸ் சற்று சிறியதாகவும் இருக்கும். இவற்றை எப்படியாவது நீக்கி விட வேண்டும் என பலரும் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலரோ அவற்றை தோலிலிருந்து பிடுங்க முயற்சிக்கிறார்கள்.
எனினும், இப்படி செய்வது மிகத் தவறு. இப்படி செய்வதால், அந்த இடத்திலிருந்து இரத்தம் வெளியேறத் தொடங்குகிறது, கடுமையான வலி ஏற்படுகிறது. கழுத்து மருக்கள் மற்றும் ஸ்கின் டேக்குகளை அகற்ற பல இயற்கையான வழிகள் உள்ளன. இதற்கு நீங்கள் அதிக முயற்சி செய்ய வேண்டியதில்லை. சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் இவற்றை அகற்றலாம்.
மருக்கள் மற்றும் ஸ்கின் டேக்ஸ் ஏன் ஏற்படுகின்றன?
கழுத்தில் மருக்கள் ஏன் ஏற்படுகின்றன? இந்த கேள்விக்கான சரியான பதில்களோ, அவற்றுக்கான உறுதியான சான்றுகளோ இல்லை. எனினும், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக இவை ஏற்படுவதாக நிபுணர்கள் நம்புகிறார்கள். இருப்பினும் இதுவரை எந்த விஞ்ஞானியும் இதை ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கவில்லை. கழுத்தில் ஏற்படும் இந்த தேவையற்ற மருக்களை எப்படி அகற்றலாம் என இங்கே தெரிந்துகொள்ளலாம்.
இதன் மூலம் மருக்களை அகற்றலாம்:
நம் உடலுக்கு உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஆப்பிள் வினிகர் எனப்படும் ஆப்பிள் சைடர் வினிகரின் உதவியால் கழுத்தில் காணப்படும் மருக்களை அகற்றலாம். மருக்களை அகற்ற இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அதன் உதவியுடன், மருக்களை முழுமையாக உலர வைக்கலாம். உலர்ந்த பிறகு இவை பலவீனமடைந்து விழுந்துவிடுகின்றன. சருமமும் சுத்தமாகிறது.
மேலும் படிக்க | தொண்டை எரிகிறதா... இந்த 5 எளிய வழிகள் மூலம் வீட்டிலேயே குணப்படுத்தலாம்!
ஆப்பிள் சைடர் வினிகரை எவ்வாறு பயன்படுத்துவது?
- முதலில், ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
- இப்போது இந்த பாத்திரத்தில் காட்டன் பால்ஸ்களை நனைத்து, அதன் உதவியுடன் ஆப்பிள் சைடர் வினிகரை மருக்கள் மீது தடவவும்.
- இதை தினசரி வழக்கமாக்கி, ஒரு நாளைக்கு 5 முதல் 7 முறை இந்த செயல்முறையை செய்யவும்.
- சில நாட்களில், கழுத்தில் உள்ள குறிகள் மற்றும் மருக்களின் நிறம் கருமையாகி வருவதை நீங்கள் காண்பீர்கள்.
- அவை முதலில் இருண்ட நிறத்தில் மாறும். பின்னர் படிப்படியாக அவை கருப்பு நிறமாக மாறும். பின், மருக்கள் முற்றிலும் காய்ந்து போகும்.
- உலர்ந்த மருக்கள் தாங்களாகவே விழும்.
- மருக்களை நீக்கிய பின், சருமம் முற்றிலும் சுத்தமாகி, கழுத்தின் அழகு அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை 7 நாட்களில் குறைக்க வேண்டுமா? இந்த 4 உணவுகளை சாப்பிடுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ