முட்டை வெள்ளை கருவால் சருமத்திற்கு உருவாகும் நன்மைகள் - முழு விவரம்

முட்டையின் வெள்ளை கருவால் சருமத்திற்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவை குறித்த விவரம்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 21, 2022, 06:32 PM IST
  • முட்டை வெள்ளைக்கரு சருமத்திற்கு நன்மை கொடுக்கின்றன
  • எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையை போக்க உதவுகின்றன
  • கருப்பு திட்டு புள்ளிகளுக்கும் தீர்வு கொடுக்கின்றன
முட்டை வெள்ளை கருவால் சருமத்திற்கு உருவாகும் நன்மைகள் - முழு விவரம் title=

முட்டையின் மஞ்சள் கரு, வெள்ளை கரு ஆகியவை உடல்நலத்துக்கு ஆரோக்கியத்திற்கு கொடுக்கக்கூடியவை. புரத சத்துக்கள் அதிகம் இருப்பதால் முட்டையை பலர் உணவு பொருள்களில் சேர்த்துக்கொள்வார்கள். முட்டையின் வெள்ளை கருவை உண்பதோடு மட்டுமின்றி சருமத்தில் தடவினால் சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். வெள்ளை கருவில் புரதம் மற்றும் அல்புமின் உள்ளிட்ட வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை சரும சுருக்கம், எண்ணெய் பிசுபிசுப்புதன்மை, முகப்பரு போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். சரும பொலிவை தக்க வைத்துக்கொள்ளவும் துணை புரியும். 

சருமம் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மை கொண்டிருந்தால் முகப்பரு, கரும்புள்ளிகள் எட்டிப்பார்க்கும். முட்டையின் வெள்ளைக்கருவிற்கு எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் ஆற்றல் இருக்கிறது. முதலில் வெது வெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். அதன் பிறகு முட்டையின் வெள்ளைக்கருவை தடவி மசாஜ் செய்ய வேண்டும். நன்கு உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். பின்பு மென்மையான துண்டு கொண்டு முகத்தை துடைக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்துவந்தால் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மை நீங்கிவிடும். 

மேலும் படிக்க | பூண்டு நீர் - ஆரோக்கிய நன்மைகள்: தினமும் குடித்தால் கிடைக்கும் ஏகப்பட பலன்கள்

சிலருடைய முகத்தில் தேவையற்ற ரோமங்கள் முளைத்து சரும அழகை சீர்குலைக்கும். அதனை அவ்வப்போது அப்புறப்படுத்துவதும் சிரமமான காரியம்தான். அத்தகைய சிரமத்திற்கு ஆளாகுபவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை பயன்படுத்தலாம். முட்டையின் வெள்ளைக்கருவை நெற்றி, கன்னம், உதட்டின் மேல் பகுதி என முகம் முழுவதும் நன்றாக தடவ வேண்டும். முட்டைக்கரு நன்கு உலர்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால் தேவையற்ற ரோமங்கள் சருமங்களில் முளைக்காது. 

சிலருடைய சருமத்தில் கருப்பு திட்டு போன்ற புள்ளிகள் தென்படும். அதனால் சரும அழகு பாதிப்புக்குள்ளாகும். முட்டையின் வெள்ளைக்கருவுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும். பின்னர் கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் அந்த பாதிப்பு நீங்கிவிடும்.

மேலும் படிக்க | உடல் எடை அதிகரிக்காமல் இருக்க தக்காளி தெரஃபி! எடையை கட்டுப்படுத்தும் ஆரோக்கிய பழம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News