முகத்தில் தோன்றும் ‘இந்த‘ மாரடைப்பு அறிகுறிகளை ஈஸியா எடுத்துக்காதீங்க.!
Heart Attack Symptoms: முன்பெல்லாம் இதய நோய்கள் மாரடைப்பு ஆகியவை, வயதானவர்களை மட்டுமே தாக்கும். இன்று, இளம் வயதினர் ஏன் பள்ளி மாணவர்கள் கூட மாரடைப்புக்கு ஆளாவது மிகவும் அதிர்ச்சி தரும் விஷயம்.
Heart Attack Symptoms: இன்றைய காலகட்டத்தில், ஆரோக்கியம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக அரிதான விஷயமாக மாறி வருகிறது. முன்பெல்லாம் இதய நோய்கள் மாரடைப்பு ஆகியவை, வயதானவர்களை மட்டுமே தாக்கும். இன்று, இளம் வயதினர் ஏன் பள்ளி மாணவர்கள் கூட மாரடைப்புக்கு ஆளாவது மிகவும் அதிர்ச்சி தரும் விஷயம்.
இதயத்திற்கான ரத்த ஓட்டம் குறையும் போது அல்லது தடை படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு வருவதற்கு முன்னால் உடல் நமக்கு பல அறிகுறிகளை கொடுக்கிறது. ஆனால் அந்த எச்சரிக்கை அறிகுறிகளை நாம் பல சமயங்களில் புரிந்து கொள்வதில்லை. மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க, இந்த அறிகுறிகளை கண்டறிந்து நாம் உடனடியாக மருத்துவரிடம் சென்று விட்டால், நிச்சயம் பாதிப்பு இல்லாமல் தப்பித்து விடலாம்.
மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் மார்பில் வலி மற்றும் சுவாசிப்பதில் சமம் போன்றவற்றைத் தவிர வேறு சில அறிகுறிகள் தோன்றும், இதனை நாம் அலட்சியம் செய்யாமல், உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். முகத்தில் தோன்றும் சில அறிகுறிகளை இங்கே காணலாம்
முகத்தில் வீக்கம் தோன்றுதல்
இதயத்தில் பிரச்சனை இருந்தால், உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இதனால் உடலில் திரவம் ஏதோ ஒரு இடத்தில் குவிய தொடங்கும். அந்த வகையில், எந்த காரணம் இல்லாமல் முகத்தில் வீக்கம் தோன்றினாள் யாருடைய பின் அறிகுறியாக இருக்கலாம். எச்சரிக்கையாக மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்வது நல்லது.
மேலும் படிக்க | உடல் எடையை ஈசியா குறைக்க தினமும் இளநீரை இப்படி குடிங்க போதும்
முகம் நீல நிறம் அல்லது வெளிர் நிறத்தில் இருத்தல்
காரணம் இல்லாமல் முகத்தின் நிறம் திடீரென்று நீல நிறமாகவோ, அல்லது வெளிறி போனது போலவோ இருந்தால், அது மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். இதயம் சரியாக செயல்படாமல், இரத்தம் சில பகுதிகளை சென்று அடையாமல் போகும் போது, சருமத்தின் நிறத்தில் மாற்றம் ஏற்படலாம். எனவே மருத்துவரிடம் சென்று பரிசோதிக் கொடுத்துக் கொள்வது நல்லது.
முகத்தின் இடது பக்கத்தில் வலி ஏற்படுதல்
முகத்தில் இடது பக்கத்தில் வலி அல்லது உணர்வின்மை ஏற்பட்டால் அது மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். இதனை புறக்கணிக்காமல் அணுகி ஆலோசனை செய்வது நல்லது
அதீத சோர்வு
மாரடைப்பு ஏற்படுவதற்கு பத்து நாட்கள் முன்னதாகவே நோயாளிகள் அதிக சோர்வாக உணரலாம் என்கின்றன ஆய்வுகள். இதயத்திற்கு ரத்தம் சரிவர சென்றடையாத நிலையில், உடலுக்குப் போய் இந்திய ஆக்ஸிஜன் கிடைக்காமல் அதீத சோர்வு ஏற்படலாம்.
குமட்டல் மற்றும் அஜீரணம்
இதயம் மட்டும் உடலின் பிற பகுதிகளுக்கு போதுமான அளவு ரத்த ஓட்டம் இல்லாத நிலையில், சாப்பிடும் உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் அசிடிட்டி நெஞ்செரிச்சல் ஏற்படும். சில சமயங்களில் வயிற்றுப் படிப்புகள் ஏப்பம் போன்றவை ஏற்படலாம்.
கண்களை சுற்றி கொலஸ்ட்ரால் குவிதல்
கண்களை சுற்றி கொலஸ்ட்ரால் சேருதல் மருத்துவ மொழியில் சாந்தெலெஸ்மா என்று அழைக்கப்படும். இதன் காரணமாக வெளிர்மஞ்சள் நிலப் பொருட்கள், கண்கள் மற்றும் கண்களை சுற்றி சேரலாம். இது போன்று கண்களுக்கு கீழும் இமைகளை சுற்றியும், கொலஸ்ட்ரால் தேங்குவது மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ