பெரும்பாலான மக்களுக்கு மருந்து எடுத்துக் கொள்ள தண்ணீருக்கு பதிலாக ஜூஸ் அருந்தும் வழக்கம் உள்ளது. இருப்பினும், இதைச் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. பழச்சாறுகளுடன் மருந்து உட்கொள்ளக்கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அந்த பழக்கம் இருந்தால் உடனே மாற்றிக் கொள்ளுங்கள். சில சமயங்களில் மருந்தை சாறுடன் சேர்த்து சாப்பிடும்போது மருந்தின் செயல் திறனும் பெரிய அளவில் குறையும் எனவும் கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பழச்சாறுடன் மருந்து உட்கொள்வது சில நேரங்களில் ஒவ்வாமைக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். திராட்சை, ஆரஞ்சு மற்றும் சில சமயங்களில் ஆப்பிள் சாறுடன் மருந்து உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஊறு விளவிக்கும். பழச்சாறு மற்றும் மருந்து கலவை மிகவும் ஆபத்தானது. பழச்சாறு இரத்த ஓட்டத்தில் செல்லும் மருந்துகளின் அளவைக் குறைக்கிறது என்று கூறப்படுகிறது. எனவே, இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பழச் சாறுடன் மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.


மேலும் படிக்க | திருமண வாழ்க்கையை குலைக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு; அறிகுறிகள் இவை தான்!


ஆண்டிபயாடிக் மருந்துகள், புற்றுநோய் மருந்துகள் உட்பட பல மருந்துகளை, ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் திராட்சை சாறுகளுடன் எடுத்துக் கொள்ளும் போது, மருந்தின் செயல்திறன் மிகவும் குறையும் என்று ஒரு ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. மேலும், பழசாற்றுடன் மருந்து சாப்பிட்ட பிறகு, பாதி மருந்து மட்டுமே உடலுக்குள் செல்லும் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. சாறுகள் மருந்தினை உறிஞ்சும் திறனைக் குறைக்கின்றன. எனவே, மருந்துகள் சரியாக உடலில் கிரகித்து கொள்ளப்படாது


எனவே, தண்ணீருடன் மருந்து எடுத்துக் கொள்ளுங்கள். மருந்தை எப்போதும், ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீருடன் எடுத்துக் கொள்ளுங்கள். மருந்தை தண்ணீருடன் எடுத்துக்கொள்வது மிகவும் பாதுகாப்பானது. மருந்தை மிக சிறிதளவு தண்ணீர் சேர்த்து சாப்பிட்டால் உடலில் சரியாக கரையாது. ஆனால் அதிக தண்ணீர் சேர்த்து எடுத்துக் கொண்டால் அவை எளிதில் கரையும். அதே போல் குளிர்ந்த நீருடன் கூட மருந்து உட்கொள்வதையும் நிச்சயம் தவிர்க்கவும். 


( பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE மீடியா இதற்கு பொறுப்பேற்காது)


மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளுக்கு சஞ்சீவினியாகும் மாமர இலைகள்; பயன்படுத்தும் முறை இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ