இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்ற செய்தி உலகில் அனைவருக்கும் பீதியை கிளப்பியுள்ளது. எனினும், அரசு எச்சரிக்கையாக உள்ளது எனவே பீதியடைய வேண்டாம் என மத்திய சுகாதார துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரிட்டனில், கொரோனா வைரஸின் புதிய  பிறழ்வு கண்டறியப்பட்டது  பற்றி கூறிய மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்(Dr.Harsh Vardhan), அரசு எச்சரிக்கையாக இருப்பதாகவும், மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.


6 வது இந்தியா சர்வதேச அறிவியல் விழா -2020 (IISF 2020) தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் ஹர்ஷ் வர்தன் அரசு எச்சரிக்கையாக உள்ளது என தெரிவித்தார்.


"அரசாங்கம்  நிலைமையை முழுமையாக அறிந்திருக்கிறது.  மக்கள் சிறிதும் பீதியடைய தேவை இல்லை, ”என்று அமைச்சர் கூறினார், கடந்த ஒரு வருடத்தில் COVID-19 நிலைமையைக் கையாள முக்கியமாக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்றார்.


ஞாயிற்றுக்கிழமை, மாலை மத்திய சுகாதார அமைச்சகம் இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் புதிய, பிறழ்வு தோன்றுவது குறித்து கவலை தெரிவித்ததோடு, கொரோனா தொடர்பான கூட்டு கண்காணிப்புக் குழுவின் அவசரக் கூட்டத்தை  திங்களன்று  கூட்ட (டிசம்பர் 21, 2020) அழைப்பு விடுத்திருந்தது.


இந்த கூட்டத்தில், கொரோனா வைரஸின் (Corona Virus) புதிய பிறழ்வால் ஏற்படும் சவால்கள் மற்றும் அதன் தாக்கம் குறித்து விவாதிக்கப்படலாம்.


இங்கிலாந்தில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால்,  நான்காம் கட்ட லாக்டவுன் கடுமையான விதிமுறைகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது . மேலும், வைரஸின் சக்திவாய்ந்த புதிய பிறழ்வு “கட்டுப்பாட்டில் இல்லை” என்று பிரிட்டிஷ் அரசாங்கம் எச்சரித்துள்ளதை அடுத்து பல ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்திலிருந்து விமானங்களைத் தடை செய்துள்ளன.


இந்தியாவும் பிரிட்டனுக்கான அனைத்து விமானங்களையும் தற்காலிமாக தடை செய்துள்ளது.


ALSO READ | ஜனவரி மாதம் முதல் COVID தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்: ஹர்ஷ் வர்தன்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR