Nose Picking: மூக்கு நோண்டினால் ‘இந்த’ கொடிய நாேய் வருமா? அதிர்ச்சி தரும் ஆய்வு!
Nose Picking Habit Related With Alzheimer Disease: நம்மில் பலருக்கு மூக்கு நோண்டும் பழக்கம் இருக்கும். ஆனால் இந்த பழக்கத்தால் கண்ணுக்கே தெரியாமல் ஒரு நோய் நமது உடலில் தங்கிவிடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அது என்ன நோய் தெரியுமா?
Nose Picking Habit Related With Alzheimer Disease In Tamil: மூக்கு, உடலின் முக்கியமான பாகங்களுள் ஒன்றாகும். உடலில் சுவாச ஆரோக்கியம் ஒழுங்காக இயங்க உதவியாக இருக்கும் முக்கியமான பாககங்களுள் ஒன்று, மூக்கு. பலருக்கு அடிக்கடி மூக்கு நோண்டும் பழக்கம் இருக்கும். இந்த பழக்கத்தினால் மறதி நோய் வர வாய்ப்புள்ளதாக ஒரு சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உண்மையா? மூக்கில் அடிக்கடி கை வைக்கும் பழக்கத்தில் இருந்து உங்களை விடுவித்து கொள்வது எப்படி? இங்கு படித்து தெரிந்து கொள்வோம்.
மூக்கு நோண்டும் பழக்கம் ஏன் ஏற்படுகிறது?
அலர்ஜி, சளி, தூசு காரணமாக மூக்கில் அழுக்கு தேங்கி விடும். சைனஸ் நோய் பாதிப்பு உள்ள பலருக்கு மூக்கில் அடிக்கடி சளி தங்குவது வாடிக்கையாகி விடும். இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். இதை தவிர்க்க, பலர் மூக்கின் துவாரங்களில் விரல் வைத்து அந்த அழுக்குகளை வெளியேற்றுவர். இவை அல்லாமல் ஒரு சிலருக்கு, மூக்கு நோண்டுவது என்பது ஒரு பழக்கமாகவே மாறியிருக்கும். சிறு வயதில் பதற்றம் அல்லது அது போன்ற சூழ்நிலையில் இருக்கும் போது பலருக்கு மூக்கு நோண்டும் பழக்கம் ஏற்படலாம். சிலர், போர் அடிக்கும் போதெல்லாம் மூக்கு நோண்டும் பழக்கத்தினை வைத்திருப்பர். இந்த பழக்கம் அல்சைமர் எனப்படும் மறதி நோய்க்கு வழி வகுக்கும் என ஒரு மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.
மறதி நோய்க்கும் மூக்கை சுத்தம் செய்யும் பழக்கத்திற்கும் என்ன தொடர்பு?
உலகம் முழுவதும் பலரை அச்சுறுத்தும் நோய் பாதிப்பாக இருக்கிறது, மறதி நோய். இது குறித்து சமீபத்தில் பிரபல மருத்துவ நிறுவனம் ஒன்று ஆராய்ச்சியை மேற்கொண்டது. அதில், மூக்கை அடிக்கடி சுத்தம் செய்யும் பழக்கத்திற்கும், மறதி நோய்க்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மறதி நோய், பீட்டா அமிலாய்டு எனப்படும் புரதத்தினால் ஏற்படுகிறது. அல்சைமர் நோய் பாதிப்பின் தாக்கத்தை தீவிரப்படுத்துவதில் இந்த புரதம் பெரும் பங்கு வகிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அந்த மருத்துவ ஆய்வில், அல்சைமர் நோய் கிருமிகள் மூளை வரை செல்ல, மூக்கினை அடிக்கடி சுத்தம் செய்யும் பழக்கம் உதவுவதாக கூறப்பட்டுள்ளது. Pathogens எனப்படும் இந்த நோய் கிருமியில் பாக்டீரியா, வைரஸ், ஃபங்கை போன்றவையும் அடங்கியிருக்கின்றன. மூக்கை சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் விரலை வைத்து ஆழமாக மூக்கை நோண்டும் போது இந்த நோய் தாக்கும் கிருமிகள் அனைத்தும் மூளை வரை செல்கிறதாம். இதனால், இந்த பழக்கத்திற்கும் மறதி நோய்க்கும் நேரடி தொடர்பு இருப்பதாக அந்த மருத்துவ ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | உணவில் மாற்றம் இல்லாமலேயே ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் பழங்கள்!
மனிதர்கள் மேற்கொள்ளும் மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவம் குறித்த பல விஷயங்களை தெரிந்து கொள்ள உதவும் என்றாலும், இதிலும் தவறுகள் ஏற்படலாம் என்பதும், இதன் முடிவுகளில் பிழையாக வந்திருக்க கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அல்சைமர் வராமல் எப்படி பாதுகாத்துக்கொள்வது?
அல்சைமர் எனும் நோய் பாதிப்பினை நம் வாழ்வியன் முறைகளை மாற்றிக்கொள்வதால் மட்டுமே வராமல் தவிர்க்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதில், மூக்கைனோண்டாமல் இருப்பதும் அடங்கும். அடிக்கடி மூக்கை சுத்தம் செய்வது, உங்கள் நாசியை சுத்தமாக வைத்துக்கொள்ளும் என்றாலும், இதன் பின்விளைவுகள் குறித்து அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. அப்படி, உங்களுக்கு சளி பாதிப்பு ஏற்பட்டால் மூக்கை மெதுவாக சிந்துவது, தூசு இருக்கும் இடங்களில் மூக்கை மூடிக்கொள்வது. ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் மூக்கை சுத்தம் செய்வது போன்ற பழக்கங்களை கடைப்பிடிக்கலாம்.
மேலும் படிக்க | உடல் எடை கன்னாபின்னானு ஏறுதா? கற்றாழை சாறை இப்படி குடிச்சா உடனே குறையும்
(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ