புதுடெல்லி: வாய் விட்டு சிரித்தால் வாய் விட்டு போகும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். சிரிப்பதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லது படித்திருக்கிறோம். அது உண்மையும் கூட. அதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால் அழுவதாலும் பல நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், அழுவதும் ஒரு மனிதனுக்கும் மிகவும் முக்கியமானது, இது அவரது மனதை அமைதிபடுத்துவதோடு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. வாய் விட்டு சிரித்தால் வாய் விட்டு போகும் என்று கூறியுள்ள நம் முன்னோர்கள், கவலைகளை சுவற்றிடமாவது சொல்லி அழு எனவும் கூறியிருக்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டும்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருவருக்கு அதிக மன அழுத்தம் இருக்கும்போது, ​​அவரது உடலில் பல நச்சுகள் உருவாகின்றன. இந்த நச்சுகள் உடலில் இருந்து வெளியே வரவில்லை என்றால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அழுவதன் மூலம், இந்த நச்சுகள் உடலில் இருந்து மெதுவாக வெளியேற்றப்பட்டு, மனிதனின் மன அழுத்தமும் குறைகிறது.


ALSO READ | Health Tip: மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத உணவுகள் எது தெரியுமா?


அழுத பிறகு தூக்கம் நன்றாக வருகிறது என்று ஆய்வு ஒன்றில் கண்பிடிக்கப்பட்டுள்ளது. உண்மையில், அழுவது ஒருவரின் மனதை அமைதிப்படுத்துகிறது, அதனால் அவருக்கு நல்ல தூக்கம் கிடைக்கிறது. பெரும்பாலும் அழுதபின்னர் குழந்தைகள் நன்றாக தூங்குவதை பார்க்க முடியும். 


ஒருவருக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்தால், மனம் கனப்பதை போன்று, மனது மிகவும் பாரமாக இருப்பதை போல உணருகிறார். அப்போது, அந்த நபர வாய் விட்டு அழுதால், மனது இலேசாகிறது. அவனது மன அழுத்தமும் நீங்குகிறது. கூடுதலாக, இது உங்கள் உடலில் ஆக்ஸிடாஸின் மற்றும் எண்டோர்பின்ஸ் என்ற ரசாயனத்தையும் வெளியிடுகிறது, இது ஒரு மனிதனின் மனநிலையை உற்சாகப்படுத்துகிறது.


மாசு அதிகரித்துள்ளதாலும், கணிணி மொபைல் போன்றவற்றை அதிக பயன்படுத்துவதாலும்,  கண்கள் மிகவும் பாதிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் நன்றாக அழும் போது, கண்களில் இருந்து மாசுக்கள் நீங்கி கண்கள் தெளிவாகின்றன. மேலும், கண்களில் ஈரப்பதம் ஏற்படுகிறது.  இது நம் கண்களுக்கு மிகவும் அவசியம்.


எனவே மனபாரத்தை போக்கி, கண்களை தூய்மையாக வைத்திருக்க அவ்வப்போது அழுவதும் அவசியம்.


ALSO READ | அஸ்வகந்தா சிலருக்கு விஷமாகலாம்.. எச்சரிக்கை தேவை..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR