Biotin deficiency: உடல் சீராக இயங்க பல்வேறு வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் தேவைப்படுகிறது. வைட்டமின் பி12 போலவே பயோட்டினும் உடலுக்கு மிகவும் முக்கியமானது. உடலில் பயோட்டின் குறைபாடு தோல் மற்றும் முடி தொடர்பான பிரச்சனைகளை அதிகப்படுத்தும். உங்களுக்கு அதிகம் முடி உதிர்வு பிரச்சனை இருந்தால் உடலில் உடலில் பயோட்டின் குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம். இது முடியின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுகிறது. மேலும் உடல் செயல்பாடுகளையும் அதிகம் பாதிக்கிறது. பல்வேறு மருத்துவர்களும் பயோட்டின் உடலுக்கு மிகவும் முக்கியமானது என்று கூறுகின்றனர். உங்கள் உடலில் பயோட்டின் குறைபாடு ஏற்பட்டால் எப்படி சரி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Blood Sugar Control Tips: சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... இந்த சூப்பர் மசாலாவை ட்ரை பண்ணுங்க..!!


வைட்டமின் H என்றும் அழைக்கப்படும் இந்த பயோட்டின் நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். இதன் காரணமாக பயோட்டின் குறைந்தால் உடல் சீராக இயங்க முடிவதில்லை. பயோட்டின் குறைபாடு ஏற்பட்டால் முதலில் முடியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதன் பிறகு தோல் மற்றும் நகங்களிலும் இதன் தாக்கம் அதிகரிக்கிறது. உடலில் பயோட்டின் சரியாக இருந்தால் சருமத்தில் கொலாஜன் உருவாக உதவுகிறது. இதன் காரணமாக சருமம் நீண்ட நாட்கள் இளமையாக இருக்கும்.


பயோட்டின் குறைபாடு: அறிகுறிகள் என்ன?


உங்கள் உடலில் பயோட்டின் குறைபாடு ஏற்பட்டால் முதலில் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும். பிறகு தோலில் தடிப்புகள், தலை, புருவம், கண் இமைகள் ஆகியவற்றில் முடி உதிர்வு ஏற்படும். மேலும் கண்கள், வாய் மற்றும் மூக்கைச் சுற்றியுள்ள தோலில் எரிச்சல் போன்றவை ஏற்படும். உடலில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பயோட்டின் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு பயோட்டின் மிகவும் முக்கியம். உடலில் சர்க்கரையை கட்டுப்படுத்தி இன்சுலின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. 


பயோட்டின் குறைபாட்டை சரி செய்ய


மருத்துவர்களின் கூற்றுப்படி தினமும் 2.5 மில்லிகிராம் பயோட்டின் உடலுக்கு தேவைப்படுகிறது. தினசரி சில ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இந்த குறைபாட்டை சரி செய்ய முடியும். முட்டையில் பி வைட்டமின்கள், புரதம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. இது பயோட்டின் குறைபாட்டை சரி செய்ய உதவுகிறது. பருப்பு கொட்டைகள் மற்றும் விதைகளில் நார்ச்சத்து, நல்ல கொழுப்பு மற்றும் புரதம் அதிகம் உள்ளது. இவை அதிக அளவு பயோட்டினை வழங்குகின்றன. நீங்கள் அசைவ உணவை சாப்பிடுபவராக இருந்தால் ஆட்டு கோடல் போன்றவற்றை சாப்பிடலாம். இதில் பயோட்டின் அதிகமாக உள்ளது. சைவத்தில் இனிப்பு உருளைக்கிழங்கு, காளான், வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடலாம். இவற்றில் அதிக வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து நிரம்பு உள்ளது.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஒரு கிளாஸ் தண்ணீரில் இந்த விதையை வெறும் வயிற்றில் குடியுங்கள்! அப்புறம் மாற்றத்தை நீங்களே தெரிஞ்சிப்பீங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ