சுகருக்கே டாடா காட்டும் மூலிகை மசாலா.. நீரிழிவு நோயாளிகளுக்கு நோ டென்ஷன்

Diabetes Natural remedy: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, கார்போஹைட்ரேட் இருக்கும் உணவுகளை சாப்பிடுவதை குறைத்து, அதிக புரதம் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். எனினும் சில மூலிகை பொருட்களை சாப்பிட்டாலும் சுகர் அளவை கட்டுபடுத்தலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 11, 2024, 12:41 PM IST
  • சர்க்கரை நோயாளிகளுக்கு பெருஞ்சீரகம் எவ்வளவு நன்மை பயக்கும்?
  • டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
சுகருக்கே டாடா காட்டும் மூலிகை மசாலா.. நீரிழிவு நோயாளிகளுக்கு நோ டென்ஷன் title=

Fennel Seeds Benefits For Diabetes : சர்க்கரை நோய் இருந்தால், இதனால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும், எனவே தான் இதைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகும். ஏனெனில் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அது உங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடலாம். சர்க்கரை நோய் (Blood Sugar Remedy) என்பது வாழ்நாள் முழுவதும் தொடரக் கூடிய கொடிய நோய் ஆகும். தவறான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் பெருஞ்சீரகம் சேர்த்துக் கொள்வது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இந்நிலையில் சர்க்கரை நோயாளிகளுக்கு பெருஞ்சீரகம் எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.

சர்க்கரை நோயாளிகள் பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits of consuming fennel for diabetes patients:

இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்த உதவுகிறது -
நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தால் பெருஞ்சீரகம் (Fennel Seeds) கட்டாயம் சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு பெருஞ்சீரகம் மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இதில் உள்ள தனிமங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். எனவே சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் பெருஞ்சீரகம் சாப்பிடலாம்.

மேலும் படிக்க | உடல் கொழுப்பை எரிக்கும் இலவங்கபட்டை டீ... காலை - இரவு இரு வேளையும் குடிங்க..!!

டைப் 2 நீரிழிவு நோயின் (Type 2 diabetes patients) அபாயத்தைக் குறைக்க உதவுகிறது -
பெருஞ்சீரகத்தில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக இது டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தையும் குறைக்க பெரிய அளவில் உதவுகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பெருஞ்சீரகத்தை இப்படி சாப்பிடுங்கள்-
நீரிழிவு நோயாளிகள் தங்களின் உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடலாம். இது தவிர பெருஞ்சீரகத்தை தண்ணீருடன் சேர்த்தும் குடித்து வரலாம். இதற்கு பெருஞ்சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்துக் கொள்ளவும், பின்னர் மறுநாள் காலையில் இந்த தண்ணீரை குடிக்கலாம், இதனால் நீங்கள் பெரிய அளவில் பயன் பெறுவீர்கள். 

அதேபோல் நீரிழிவு நோயாளிகளுக்கு பெருஞ்சீரகம் தேநீரும் (Fennel Tea) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் கலந்து, சூடாக்கி, வடிகட்டி, குடிக்கவும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஜிம்மில் சேர உகந்த வயது எது? ‘இந்த’ வயசா இருந்தா யோசிக்கவே வேண்டாம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News