டீடாக்ஸ் முதல் வெயிட் லாஸ் வரை. வெறும் வயிற்றில் 7-8 கறிவேப்பிலை போதும்
இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக, பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க, நமது முன்னோர்களால் மூலிகை குணம் நிறைந்த கறிவேப்பிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உணவிற்கு சுவையையும் மனத்தையும் கொடுக்கும் கறிவேப்பிலையில் எண்ணற்ற ஆரோக்கிய நலன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக, பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க, நமது முன்னோர்களால் மூலிகை குணம் நிறைந்த கறிவேப்பிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நாம் இதன் அருமையை தெரிந்து கொள்ளாமல், அலட்சியப்படுத்தி, தூக்கி எறிந்து விடுகிறோம். கறிவேப்பிலையில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் ஏ, பி சி டி, ஈ ஆகிய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் ஆண்டி ஆக்சிடென்ட்களும், அமினோ அமிலங்களும், கிளைக்கோசைடுகளும் இரும்புச் சத்தும் நிறைந்துள்ளன.
இரத்த சர்க்கரை அளவு
கறிவேப்பிலையில் காணப்படும் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி எவை இரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது. மேலும் இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், செரிமான செயல்முறையை மெதுவாக நடக்க வைத்து, இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி, நீரழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
உடல் பருமன்
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை எரித்து, நல்ல கொழுப்பை அதிகரித்து, செரிமானத்தை மேம்படுத்தும் ஆற்றல் கறிவேப்பிலைக்கு உண்டு. மேலும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் கறிவேப்பிலை உதவும். இதனால், உடல் பருமனை குறைக்க (Weight Loss Tips) நினைப்பவர்கள், இதனை தூக்கி எறியாமல் தவறாமல் சாப்பிட வேண்டும்.
டீடாக்ஸ் உணவு
கறிவேப்பிலைக்கு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் உண்டு. இதனால் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். மேலும் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் நீங்குவதால் ரத்த ஓட்டம் அதிகரித்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
இதய ஆரோக்கியம்
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, கறிவேப்பிலை உதவும். ஏனெனில் இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இதை ஆரோக்கியத்திற்கு பாதிப்பை விளைவிக்கும் ட்ரை கிளிசரைடு அளவையும் குறைக்கிறது. இதனால் மாரடைப்பு பக்கவாதம் போன்ற, உடல் நல பிரச்சனைகள் ஏற்படும் ஆபத்து பெருமளவு குறையும்.
உடல் வீக்கத்தை போக்கும் ஆற்றல்
கறிவேப்பிலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள், உடலில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்த உதவும் என்று பலவிதமான ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. கறிவேப்பிலை சிறந்த வழி நிவாரணியாக செயல்படும்.
இரத்த சோகையை நீக்கும் கறிவேப்பிலை
கறிவேப்பிலை உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரித்து, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். ஏனெனில் இது இரும்புச் சத்து நிறைந்தது.
கறிவேப்பிலையில் நிறைந்துள்ள சத்துக்கள்
கறிவேப்பிலையில் பலவிதமான வைட்டமின்களுடன், புரதச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளது.
கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளும் முறை
கறிவேப்பிலையை, வெறும் வயிற்றில், மென்று சாப்பிடலாம். சமையலில் சேர்க்கும் கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் சாப்பிடுவதும் பலன் தரும். கறிவேப்பிலை இலைகளை உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொண்டு, அதனை தினமும் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து சாப்பிடலாம். இது தவிர கறிவேப்பிலையை, அரைத்து எலுமிச்சை சாறு உப்பு சேர்த்து அருந்தலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ