சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்தால்... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்
Jaggery Vs Sugar: சர்க்கரையில் வெறும் கலோரிகள் மட்டுமே உள்ளன. ஆனால் வெல்லத்தில், உடலுக்கு தேவையான வைட்டமின்கள் தாதுக்கள் போன்ற அத்தியாசவசிய ஊட்டச்சத்துக்கள் பல நிரம்பியுள்ளன.
Jaggery Vs Sugar: உணவில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்ப்பதால், கிடைக்கும் நன்மைகளை பெரிய பட்டியலே போடலாம். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் வெறும் கலோரிகள் மட்டுமே உள்ளன. ஆனால் வெல்லத்தில், உடலுக்கு தேவையான வைட்டமின்கள் தாதுக்கள் போன்ற அத்தியாசவசிய ஊட்டச்சத்துக்கள் பல நிரம்பியுள்ளன. சுவையோடு ஆரோக்கியத்தையும் கொடுக்கும் வெல்லத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், உங்கள் உடலில் வியக்கத்தக்க மாற்றத்தை உணருவீர்கள்.
வெல்லம் சர்க்கரை ஒரு ஒப்பீடு
வெல்லம் சர்க்கரையை போல் சுத்திகரிக்கப்படுவதில்லை என்பதால், சத்துக்கள் வெளியேறாமல் இருக்கிறது. வெல்லத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதோடு, கால்சியம், புரதச்சத்து வைட்டமின் பி12 என பல சத்துக்கள் அடங்கியுள்ளன. கொழுப்பு இதில் இல்லை என்பது கூடுதல் சிறப்பு. ஆனால், சர்க்கரையில், கலோரி மட்டுமே உள்ளது. எந்த விதமான ஊட்டச்சத்தும் அதில் இல்லை. எனவே, சர்க்கரையை விட வெல்லம் தான் ஆரோக்கியத்திற்கு (Health Tips) உகந்தது.
சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்ப்பதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள் ( Health Benefits: Jaggery Vs Sugar)
1. வெல்லத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலிக்கு குட்பை சொல்லலாம். இஞ்சியுடன் வெல்லத்தை சேர்ந்து பயன்படுத்துவதால், மூட்டு வலியில் இருந்து நிவாரணம் (Joint Pain Home Remedies) கிடைக்கும். மேலும், இதில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால், எலும்புகள் வலுப் பெறும்.
2. குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வெல்லம் உதவுகிறது. செரிமானம் தொடர்பான எல்லா பிரச்சனைகளுக்கும் வெல்லம் தீர்வை தருகிறது. வயிற்றில் வாயு உருவாகும் பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றில் இருந்து விடுபட, வெல்லத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவது பலன் அளிக்கும்.
3. நுரையீரலில் சிக்கிக் கொண்டிருக்கும், நிக்கோட்டின், கார்பன் துகள்கள் மற்றும் நச்சுக்கள் ஆகியவற்றை நீக்கி, சுவாசப் பிரச்சினைகளுக்கு நிவாரணத்தை கொடுக்கும் ஆற்றல் வெல்லத்திற்கு உண்டு. எனவே சுவாசம் தொடர்பான பிரச்சனை கொண்டவர்கள், புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் வெல்லத்தை கண்டிப்பாக டயட்டில் சேர்த்துக் கொள்ளவும்.
4. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட வெல்லத்தை தினமும் சேர்த்துக் கொள்வதால், பருவ கால நோய்களிலிருந்து தப்பிக்கலாம். அடிக்கடி சளி இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள், வெல்லத்தை தினமும் சாப்பிட்டு வர, நோயில்லாத வாழ்க்கையை வாழலாம்.
மேலும் படிக்க | நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாடு... அறிகுறிகளும்... உணவுகளும்..!!
5. இரும்பு சத்து அதிகம் கொண்ட வெல்லம், இரத்த சோகையை நீக்கி, உடலை வலிமையாக்குகிறது. சோர்வு பலவீனம் இருப்பவர்கள், வெல்லத்தைப் பானகமாக தயாரித்து அருந்துவதால், சோர்வு பலவீனம் உடனடியாக நீங்கி புத்துணர்ச்சி பெறலாம். வெல்லம், சுக்கு, எலுமிச்சை சாறு கலந்த பானகம், ஆற்றலை அள்ளித் தரும் எனர்ஜி ட்ரிங்க்.
6. வெல்லத்தில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால், இதயத்துடிப்பை சீராக்கும் ஆற்றல் கொண்டது. இதயம் தொடர்பான நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட வெல்லத்தை சாப்பிடுவதால், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
7. சரும ஆரோக்கியத்திற்கும் வெல்லம் மிகவும் நன்மை பயக்கும். முதுமையை தடுக்க உதவும் வெல்லம், சருமப் பிரச்சனைகளை போக்கி, சருமத்திற்கு பொலிவை கொடுக்கிறது. மேலும் முகப்பருக்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கம் ஆகியவற்றையும் தடுக்கும் ஆற்றல் வெல்லத்திற்கு உண்டு. எனவே வெல்லத்தை வழக்கமாக உட்கொள்வதால், முதுமை அண்டாமல் தடுத்து நிறுத்தலாம்.
8. நுரையீரல் மட்டுமல்லாது, கல்லீரலை சுத்தம் செய்யும் ஆற்றலும் வெல்லத்திற்கு உண்டு. உடலின் சுத்திகரிப்பு ஃபேக்ட்ரியாக கல்லீரல் விளங்கும் நிலையில், அதில் சேரும் நச்சுக்களையும் அழுக்குகளையும் நீக்கி, ஆரோக்கியமாக வைத்திருக்க வெல்லம் உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரல் ஏற்படாமல் இருக்க... செய்ய வேண்டியதும்.. செய்யக் கூடாததும்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ