அதிசய காய் கனிகளில் ஒன்று முருங்கை. முருங்கையை நொறுங்க தின்றால் 3000 வராது என்று கூறுவார்கள் நமது முன்னோர்கள். அதாவது பலவிதமான நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றல் முருங்கைக்கு உண்டு என்பது தான் இதன் பொருள். முருங்கையின் காய் மட்டுமல்ல, அதன், இலை விதை, பூ, வேர், என அனைத்தும் மருத்துவம் குணங்கள் நிறைந்தது என்பதால் இதனை நோய்களை தீர்க்கும் ஆற்றல் கொண்ட பொக்கிஷம் என்றும் ஆயுர்வேத வல்லுநர்கள் அழைத்தார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்னிந்திய சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் முருங்கையில், இரும்பு சத்து கால்சியம், வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, புரதம், நார்ச்சத்து, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், துத்தநாகம், மற்றும் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. முருங்கையில், பாலை விட நான்கு மடங்கு கால்சியம் அதிகம் இருப்பதாகவும், கேரட்டை விட ஏழு மடங்கு அதிக வைட்டமின் ஏ உள்ளதாகவும், ஆரஞ்சில் இருப்பதைவிட, அதிக அளவு வைட்டமின் சி உள்ளதாகவும், இங்கே இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.


ஊட்டச்சத்து மிக்க முருங்கையில்.பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், ஆன்டிவைரல் மற்றும் மன அழுத்த எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. முருங்கையை பிரெஷ்ஷாக சமைத்து சாப்பிடுவதைத் தவிர, முருங்கை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு அதனை தினமும் பயன்படுத்தலாம். இதயம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் முருங்கை அருமருந்து. முருங்கைக்காயில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதன் காரணமாக இரத்த சோகையை குணப்படுத்ததுவதுடன் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.


முருங்கையின் அளப்பரிய நன்மைகள்


எலும்புகளை வஜ்ரம் போல் வலுவாக்கும் முருங்கை


முருங்கை கீரையில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளதால் எலும்புகள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும். முருங்கை கீரையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், மூட்டு வலி, கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற உடல் நல பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. முருங்கையில் உள்ள ஃபிளவனாய்டுகள் உள்ளிட்ட உடல் அழற்ச்சியை போக்கும் கலவைகள் இருப்பதோடு, உடலில் சேரும் யூரிக் அமிலத்தை குறைக்கும் பண்புகள் முருங்கையில் உள்ளதால், கீல்வாத பிரச்சினைகள் நீங்கி மூட்டு வலி குறையும்.


நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் முருங்கை


நரம்பு தளர்ச்சி பிரச்சனையை குணப்படுத்த முருங்கை வேர் மிகவும் உதவும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. முருங்கை வேரை நன்றாக கழுவி சுத்தம் செய்து, நிழலில் உலர்த்தி பொடி செய்து, சிறிதளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சியில் இருந்து விடுதலை பெறலாம் என்கின்றனர் ஆயுர்வேத வல்லுநர்கள். எனினும் இதனை மருந்தாக எடுத்துக் கொள்ளும் முன், ஆயுர்வேத மருத்துவர்களை கண்டிப்பாக கலந்தாலோசிக்க வேண்டும்.


மேலும் படிக்க | கிட்னி - லிவரை காலி செய்யும் வலி நிவாரணிகள்... எச்சரிக்கும் மருத்துவர்கள்


 நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக்கும் முருங்கை


முருங்கை கீரை அல்லது அதன் காய்களை தொடர்ந்து சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. முருங்கை கீரையில் நிறைந்துள்ள பைட்டோநியூட்ரியண்ட்கள், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. தொற்று நோய்களிலிருந்தும் பருவ கால நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முருங்கை உதவும்


ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் முருங்கை


இரும்பு சத்து நிறைந்த முருங்கைக்காயை அல்லது கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு அபரிமிதமான அற்றல் கிடைக்கும். இதனால், பலவீனம் மற்றும் சோர்வு பிரச்சனை நீங்கும். இரும்புச்சத்து நிறைந்த முருங்கை இலைகளும் பலவீனத்தை நீக்க உதவுகிறது.


நீரிழிவு நோயிலிருந்து நிவாரணம் அளிக்கிறது


முருங்கை கீரை மற்றும் காய்களை அடிக்கடி சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. முருங்கையில் குளோரோஜெனிக் அமிலம் உள்ளது, இது உணவு உண்ட பிறகு இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருக்கும்.


இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் முருங்கை


இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட முருங்கை இலைகளை சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் எரிக்கப்பட்டு இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு அபாயத்தை ஏற்படுத்தும். எனவே முருங்கையை அடிக்கடி சாப்பிடுவது உங்களுக்கு நன்மை பயக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உஷார்! புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் இவைதான்.. அலட்சியம் வேண்டாம்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ