சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க... குறைந்த கிளைசிமிக் குறியீடு கொண்ட சில உணவுகள்

Diabetes Control Tips: நீரிழிவு என்பது வாழ்க்கை முறை சார்ந்த ஒரு நோய். இதனை குணப்படுத்த முடியாது என்றாலும், சிறந்த உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை கடைபிடிப்பதன் மூலம் சிறப்பாக கட்டுப்படுத்த முடியும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 17, 2024, 12:41 PM IST
  • நீரிழிவு நோயாளிகள் தாங்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு உணவையும் கவனத்துடன் உட்கொள்ள வேண்டும்.
  • பரபரப்பான வாழ்க்கையில், பெரும்பாலானோர் டயட்டில் கவனம் செலுத்துவதில்லை.
  • குறைவான கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது நன்மை பயக்கும்.
சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க... குறைந்த கிளைசிமிக் குறியீடு கொண்ட சில உணவுகள் title=

Diabetes Control Tips: நீரிழிவு என்பது வாழ்க்கை முறை சார்ந்த ஒரு நோய். இதனை குணப்படுத்த முடியாது என்றாலும், சிறந்த உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை கடைபிடிப்பதன் மூலம் சிறப்பாக கட்டுப்படுத்த முடியும். ஆனால் இந்த பரபரப்பான வாழ்க்கையில், பெரும்பாலானோர் டயட்டில் கவனம் செலுத்துவதில்லை. நீரிழிவு நோயாளிகள் காலை உணவு முதல் இரவு உணவு வரை தாங்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு உணவையும் கவனத்துடன் உட்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் காலை உணவாக எண்ணெய் பதார்த்தங்களையும் ஹெவியான உணவுகளையும் உட்கொள்கிறார்கள். வேறு சிலர் காலை உணவில் சர்க்கரை அதிகம் உள்ள பழங்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை உட்கொள்கிறார்கள். நீரிழிவு நோயாளியாக இருந்தால், குறைவான கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது நன்மை பயக்கும். குறைவான கிளைசிமிக் குறியீடு கொண்ட உணவுகள், சர்க்கரை அளவினை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் கொண்டது.

முழு தானியங்கள்

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது என்பதால், நார்ச்சத்து நிறைந்த உணவு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முழு தானியங்களில் ஓட்ஸ், கோதுமை, பார்லி மற்றும் கினோவா ஆகியவை அடங்கும். இவற்றை சமைப்பதும் எளிது. அவை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

தயிர்

ப்ரோபயோடிக் உணவான தயிர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சிறந்த உணவு. இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இதற்கு காலை உணவுடன் தயிரை உட்கொள்ளலாம். உங்களுக்கு பிடித்த வகையில், பச்சடியாகவோ அல்லது ராய்தாவாகவோ தயாரித்து உண்ணலாம். இது குடல் ஆரோக்கியத்தை சிறப்பக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

மேலும் படிக்க | Brain Health: மூளை மந்தமாக்கும்.... இந்த ஆபத்தான பழக்கங்கள் வேண்டாமே...

வெண்டைக்காய்

ஃபிளாவனாய்டுகளின் நல்ல ஆதாரமாகக் கருதப்படும் வெண்டைக்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தை போன்றது. இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஆகியவை, இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் இரத்த நாளங்கள் (இருதய நாளங்கள்) சிறப்பாக செயல்பட உதவுகின்றன. இதன் காரணமாக மாரடைப்பு அபாயம் குறைகிறது. மிக குறைந்த கிளைசிமிக் குறியீடு கொண்ட வெண்டைக்காய், இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது.

விதைகள்

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் என்னும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த விதைகள் ஆரோக்கியமான உணவாகக் கருதப்படுகிறது. பூசணி விதைகள், ஆளிவிதைகள் மற்றும் சியா விதைகள் இதில் அடங்கும். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க காலை உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த விதைகளை தாராளமாக உட்கொள்ளலாம்.

ஆப்பிள்

ஆப்பிள் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட பழம். இதில் பிரக்டோஸ், பாலிஃபீனால்கள் மற்றும் அந்தோசயினின்கள் ஏராளமாக காணப்படுவதால், சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. ஆப்பிள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதே சமயத்தில், எலும்புகள், பற்கள், ஈறுகள் அகியவற்றை வலுப்படுத்துவதோடு, செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளதன் காரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ஆரஞ்சு பழத்தில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இதன் காரணமாக நீரிழிவு நோயாளிகள் எவ்வளவு சாப்பிட்டாலும் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆரஞ்சு உடல் எடையை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது. 

இலவங்கப்பட்டை

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும்இலவங்கப்பட்டையில், ஆண்டிபயாடிக், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் ஏராளமாக உள்ளன. இதனுடன், கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது. நீங்கள் இலவங்கப்பட்டை தேநீர் குடிக்கலாம் அல்லது மசாலாவாக பயன்படுத்தலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பருமன் குறைய... செரிமானம் சிறப்பாக இருக்க... நார்சத்து நிறைந்த சில சூப்பர் உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News