பாலியல் கோளாறு முதல் உடல் பருமன் வரை... பலாப்பழக் கொட்டை செய்யும் மாயங்கள்!
பலாப்பழத்தை சாப்பிட்டு விட்டு கொட்டைகளை பின்னர் தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால், அதில் புரதம், வைட்டமின் ஏ, சி, தியாமின், பொட்டாசியம், கால்சியம், ரிபோஃப்ளேவின், இரும்பு சத்து போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
பலாப்பழம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். இப்பழம் சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். பலாப்பழம் அனைவரும் பிடித்து உண்ணும் பழம் தான். ஆனால் அதன் கொட்டைகளை பின்னர் தூக்கி எறிந்து விடுகிறோம். மற்ற காய்கறிகளை விட பலாப்பழ கொட்டைகளில் புரதத்தின் அளவு அதிகமாக உள்ளது. புரதத்தைத் தவிர, பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, தியாமின், பொட்டாசியம், கால்சியம், ரிபோஃப்ளேவின், இரும்பு, நியாசின் மற்றும் துத்தநாகம் போன்ற பல சத்துக்களும் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி, அவற்றில் நார்ச்சத்தும் உள்ளது. இது உங்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இப்பழத்தின் கொட்டைகளை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோய், பாலியல் பிரச்சனை, உடல் பருமன் என இதனால் கிடைக்கும் ஆரோக்கிய நலன்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
பலாப்பழ கொட்டைகளின் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்:
நீரிழிவு நோய்
பலாப்பழ கொட்டைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இதனை காய வைத்து பொடி செய்து அல்லது வேக வைத்து சமைத்து சாப்பிடலாம்.
பாலியல் இன்பத்தை அதிகரிக்கும்
பலாப்பழ கொட்டைகளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், பாலியல் இன்பத்தைத் தூண்டுகிறது என்று நம்பப்படுகிறது. இந்த கொட்டைகள் பாலியல் தொடர்பான பல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க பாரம்பரிய ஆசிய மருந்துகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என கூறப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
பலாப்பழ விதைகளை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் சி இதில் காணப்படுகிறது மற்றும் வைட்டமின்-சி ஒரு பயனுள்ள ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது, இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.
செரிமானம்
செரிமான பிரச்சனையால் அவதிப்பட்டால், இப்பழக் கொட்டைகளை நிச்சயம் சாப்பிட வேண்டும். குடம் மற்றும் செரிமான பிரச்சனைகளை நீக்குவதுடன் மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்க உதவுகிறது.
உடல் எடை இழப்பு
பலாப்பழ கொட்டைகள் ரெஸ்வெராட்ரோல் என்ற ஆக்ஸிஜனேற்றத்தின் நல்ல மூலமாகும். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடல் பருமனை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் விட்டமின் பி-காம்ப்ளக்ஸ் அதிகம் உள்ளதால், உணவை ஆற்றலாக மாற்றுவதிலும் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இரத்த அழுத்தம்
பலாப்பழ கொட்டையில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. எனவே இதய நோய் இருப்பவர்கள், ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | Weight Loss Tips: மெட்டபாலிஸத்தை அதிகரிக்கணுமா... நல்லா காரசாரமா சாப்பிடுங்க...!
தசைகளை வலுவாக்கும்
புரத உள்ளடக்கம் நிறைந்த இந்த பலாப்பழ கொட்டைகள், தசைகளை வலுவாக்க உதவுகின்றன. உடனடி பலனை பெற, உங்கள் வழக்கமான உணவு பட்டியலில் இதனை சேர்த்துக்கொள்ளுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பலாப்பழக் கொட்டைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்கள் உடலின் புரதச்சத்து அதிகரிக்கிறது.
முதுமையை தடுக்கிறது
பலாப்பழ விதைகளில் காணப்படும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வயதான தோற்றம், சரும சுருக்கங்களுக்கு எதிராக போராடுகிறது. உணவாக எடுத்துக் கொள்வதை தவிர, பொலிவான சருமத்தை பெற, நீங்கள் பலாப்பழ கொட்டைகளை குளிர்ந்த பாலுடன் அரைத்து உங்கள் சருமத்தில் தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | ஒல்லியாக டிரை பண்றீங்களா? கண்டிப்பா இதை மட்டும் செய்யாதீங்க! குண்டாயிடுவீங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ