இந்தியாவில் 23 பேருக்கு Omicron தொற்று! அதிகரிக்கும் அச்சம்
இந்தியா முழுவதும் 23 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதித்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு தகவல் அளித்துள்ளனர்.
புதுடெல்லி: ஒமிக்ரான் பிறழ்வு மற்றும் கோவிட்-19 தொடர்பான பிற சிக்கல்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் விரிவான விளக்கத்தை அளித்துள்ளனர்.
COVID-19 இன் ஓமிக்ரான் பிறழ்வினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்திருப்பதாகவும், அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் சுகாதார அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் வியாழக்கிழமையன்று நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 பேருக்கு பாதித்துள்ள ஒமிக்ரான் (Omicron Variant) , ராஜஸ்தானில் ஒன்பது பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் விளக்கக்காட்சியில் தெரிவித்ததாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. உலகளவில் 2303 பேருக்கு ஓமிக்ரான் வகை தொற்று பாதித்துள்ளது.
ALSO READ | கொரோனாவின் மூன்றாவது அலையில் எச்சரிக்கையாக இருப்பது எப்படி?
ஒமிக்ரான் பிறழ்வு மற்றும் கோவிட்-19 தொடர்பான பிற சிக்கல்கள் (Challenges posed by Omicron variant of COVID-19) குறித்து சுகாதார அதிகாரிகள் விரிவான விளக்கத்தை அளித்தனர். சுகாதாரச் செயலாளர், ஐசிஎம்ஆர் (ICMR) இயக்குநர் ஜெனரல் மற்றும் அமைச்சகத்தைச் சேர்ந்த மற்ற உயர் அதிகாரிகள், ராம் கோபால் யாதவ் தலைமையிலான சுகாதாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு விளக்கம் அளித்தனர்.
கோவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் (booster dose of the COVID-19 vaccine) குறித்த கேள்விக்கு பதிலளித்த அதிகாரிகள், தேவைப்பட்டால், மூன்றாவது டோஸ் எடுக்கலாம், ஆனால் இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவிட்-19 ஐச் சமாளிப்பது என்பது போலீஸ்-திருடன் விளையாட்டு போல் இருக்க வேண்டும். திருட்டு கொடுக்காமல் இருக்க காவல்துறை முன்கூட்டியே திட்டமிட்டு ஆபத்தை தவிர்ப்பது போன்று அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று கூட்டத்தின் போது, உறுப்பினர்கள் பரிந்துரைத்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆதாரங்களின்படி, அவர்களின் விளக்கக்காட்சியின் போது, கொரோனா வைரஸின் பல்வேறு வகைகளுக்கு எதிராக பயனுள்ள தடுப்பூசியின் (Coronavirus Variant) அவசியத்தை அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். சர்வதேச பயணத்திற்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழை 100 க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்றுக்கொள்வதாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
READ ALSO | இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 21 ஆக உயர்வு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR