Omicron தொற்றின் புதிய அறிகுறி: இவற்றை உட்கொண்டால் தீர்வு காணலாம்
கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதே நேரத்தில், ஓமிக்ரானின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேகமும், அதன் அறிகுறிகளும் மாறி வருகின்றன.
Covid-19: கொரோனா வைரஸ் சுமார் இரண்டு ஆண்டுகளாக உலக மக்களை பாடாய் படுத்தி வருகிறது. தற்போது கோவிட்-19ன் புதிய மாறுபாடான ஓமிக்ரான் மாறுபாடு, உலக மக்களை அச்சத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.
இந்த மாறுபாடு வெளிவரத் தொடங்கிய பிறகு, கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதே நேரத்தில், ஓமிக்ரானின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேகமும், அதன் அறிகுறிகளும் மாறி வருகின்றன.
இதுவரை இருந்தது போல, இப்போது இருமல், காய்ச்சல் அல்லது சோர்வு மட்டுமே ஓமிக்ரானின் அறிகுறிகளாக இல்லை. சமீபத்திய தகவல்களின் படி, வயிற்றுப்போக்கின் அறிகுறிகள் ஓமிக்ரான் நோயாளிகளிடம் காணப்படுகின்றன.
ஓமிக்ரான் மாறுபாட்டால் (Omicron Variant) தாக்கப்பட்ட உடனேயே வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆம், உங்களுக்கு வயிற்றில் கோளாறு மற்றும் வயிற்றுப்போக்கு இருந்தால், நீங்கள் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தொற்றுக்கான அபாயம் இருந்து, உங்களுக்கு வயிற்றுப்போக்கும் இருந்தால், நீங்கள் என்னென்ன பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ALSO READ | Omicron வந்தால் வரும் முதல் அறிகுறி இதுதான்: நிபுணர்களின் எச்சரிக்கை
சுரைக்காய்:
வயிற்றுப்போக்குக்கு சுரைக்காய் ஒரு சிறந்த உணவாக இருக்கும். இதில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இது எளிதில் ஜீரணிக்கக்கூடியது. இதனுடன், இதில் கலோரிகள் குறைவாக உள்ளது மற்றும் இது வயிற்றில் லேசானது.
அதிகமாக தண்ணீர் குடிக்கவும்:
உங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் போது நீரிழப்பு ஏற்படுவதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். ஆகையால் இந்த சமயத்தில் நீங்கள் வழக்கத்தை விட அதிக திரவங்களை குடிக்க வேண்டும். முக்கியமாக, அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். அதனால் உடலில் நீர் (Water) பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும்.
வறுத்த சீரகம்:
வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டால், நீங்கள் வறுத்த சீரகத்தையும் உட்கொள்ளலாம். இதனுடன் வேண்டுமானால் கருப்பு உப்பு சேர்த்து சாப்பிடலாம். அல்லது வெட்டிய பழங்களின் மேல் இட்டும் இதை உட்கொள்ளலாம்.
உலர் இஞ்சி:
வயிற்றுப்போக்கைச் சமாளிப்பதில் உலர் இஞ்சி (Dry Ginger) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே 3 கிராம் உலர் இஞ்சி மற்றும் நாட்டுச் சர்க்கரையை சம அளவு எடுத்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு பிரச்சனை நீங்கும்.
ALSO READ | Magizhchi: மனம் மகிழ வேண்டுமா? இந்த சத்தே மகிழ்ச்சிக்கான ஊட்டச்சத்து!
ALSO READ | Weight loss TIPS: உடல் எடை குறைய உதவும் கற்றாழை, எப்படி சாப்பிடலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR