தண்ணீரில் ஏன் எண்ணெய் மிதக்கிறது; இரண்டும் சேராததன் காரணம் என்ன...!!!

எண்ணெயும் நீரும் ஏன் ஒன்றிணைவதில்லை, எண்ணெய் ஏன் தண்ணீரில் மிதக்கிறது என்பதன் காரணத்தை அறிந்து கொள்ளலாம்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 26, 2021, 05:25 PM IST
  • நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் மூலக்கூறுகள் எனப்படும் சிறிய துகள்களால் ஆனவை.
  • எண்ணெய் என்பது திரவ வடிவத்தில் ஒரு ஹைட்ரோகார்பன் ஆகும். இது எரியும் தன்மை கொண்டது.
  • இது எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
தண்ணீரில் ஏன் எண்ணெய் மிதக்கிறது; இரண்டும் சேராததன் காரணம் என்ன...!!! title=

நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் மூலக்கூறுகள் எனப்படும் சிறிய துகள்களால் ஆனவை. இரண்டு பொருட்கள் ஒன்றோடு ஒன்று வினைபுரியும் விதம் அந்த பொருள்களை உருவாக்கும் மூலக்கூறுகளைப் பொறுத்தது. எண்ணெய் கைகளை வெறும் தண்ணீரில் கழுவும்போது இன்னும் எண்ணெய் நம் கையில் இருந்து போகவே போகாது என்பதையும் கவனித்திருப்பீர்கள். எண்ணெயும் நீரும் ஏன் ஒன்றிணைவதில்லை, எண்ணெய் ஏன் தண்ணீரில் மிதக்கிறது என்பதன் காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

எண்ணெய் என்றால் என்ன?

எண்ணெய் என்பது திரவ வடிவத்தில் ஒரு ஹைட்ரோகார்பன் ஆகும். இது எரியும் தன்மை கொண்டது. இது எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வீடுகளில் எண்ணெய் சமைப்பதற்கும் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

எண்ணெய்கள் தண்ணீரை விட பெரிய மூலக் கூறுகள் கொண்டவை. எனவே எளிதில் கலக்காது. மறுபுறம் நீரின் மூலக்கூறுகள் துருவ மூலக்கூறுகள் ( Polar Molecules), அதாவது இதன் ஒரு முனையில் நேர்மறையாக சார்ஜ் செய்யப்படுகிறது மற்றும் மறுபுறத்தில் எதிர்மறையாக சார்ஜ் செய்யப்படுகிறது. இதன் விளைவாக.  துருவம் அல்லாத மூலக் கூறுகளைக் (non-polar molecules) கொண்ட எண்ணெய்,  நீருடன் கலப்பதில்லை.

ALSO READ | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்

நீர் மூலக்கூறுகள் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் மற்றும்  ஒரு ஆக்ஸிஜன் அணுக்களால் ஆனவை. ஒத்த மூல கூறுகள் உள்ள பொருட்கள் மட்டுமே  ஒன்றாக கரையும். இதேபோல், துருவம் அல்லாத மூலக்கூறுகள், அதே போன்ற துருவம் அல்லாத மூலக் கூறு உள்ள பொருட்களில் மட்டுமே கரைகின்றன. அதனால் தான், நீங்கள் தண்ணீரையும் எண்ணெயையும்  எவ்வளவு கலந்தாலும்,  இறுதியில் எண்ணெய் மேலே மிதப்பதைக் காணலாம்.

எண்ணெய் ஏன் தண்ணீரில் மிதக்கிறது

எண்ணெய் தண்ணீரை விட அடர்த்தி குறைவானது என்பதால், தண்ணீரின் மேல் மிதக்கத் தொடங்குகிறது. அதாவது ஒரு ஸ்பூன் எண்ணெய் ஒரு ஸ்பூன் தண்ணீரை விட குறைவாக இருக்கும். 

ALSO READ | இறந்த பின் ஐஸ்பெட்டியில் நெடு நேரம் வைக்கப்பட்டவர் ‘குறட்டை’ விட்ட திகில் சம்பவம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News