Omicron புதிய அறிகுறிகள்: குணமடைந்தாலும் விடாது துரத்தும் பிரச்சனைகள்
ஓமிக்ரான் காரணமாக, பலர் பல கடுமையான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடலாம். முந்தைய வகைகளில் காணப்படாத சில அறிகுறிகள் இந்த மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படுகின்றன.
கோவிட்-19: கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு உலகின் பெரும்பகுதி மக்களை பாடாய் படுத்தி வருகிறது. மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படும் டெல்டா மாறுபாட்டுக்கு ஈடாக ஓமிக்ரான் மாறுபாடு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், கடந்த சில நாட்களாக, தினசரி நோய்த்தொற்றின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இருப்பினும், ஓமிக்ரானின் அறிகுறிகள் லேசானவையாக உள்ளதாக நம்பப்படுகிறது. எனினும் மக்கள் இது குறித்து அலட்சியமாக இருக்க வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஓமிக்ரான் (Omicron) காரணமாக, பலர் பல கடுமையான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடலாம். முந்தைய வகைகளில் காணப்படாத சில அறிகுறிகள் இந்த மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், நோயாளிகள் குணமடைந்த பிறகும் அவர்களிடம் காணப்பட்ட ஓமிக்ரானின் அறிகுறிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஓமிக்ரான் மாறுபாடு: முதுகுவலி
ஓமிக்ரான் மாறுபாட்டிலிருந்து மீண்டவர்களிடமும் நீண்ட கால முதுகுவலி காணப்படுகிறது. இந்த புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களில் தசை வலி பிரச்சனையும் காணப்படுகிறது. சிலர் முதுகு மற்றும் இடுப்பில் வலி இருப்பதாகவும் புகார் கூறுகின்றனர். இது நீண்ட காலத்துக்கு நீடிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ALSO READ | Omciron முக்கிய அறிகுறி: ஆண்கள், பெண்களின் பாதிப்பு முறை வெவ்வேறு விதமாக உள்ளதா?
ஓமிக்ரான் மாறுபாட்டில் பல்வேறு வகையான அறிகுறிகள் காணப்படுகின்றன:
இந்த மாறுபாட்டில், இரவில் வியர்வை, தொண்டை வலி மற்றும் முதுகு மற்றும் இடுப்பு வலி போன்ற அதிக பிரச்சனைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர்.
ஓமிக்ரான் மாறுபாட்டை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள்:
கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாட்டை இலகுவாக எடுத்துக் கொள்ள வெண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அதன் அறிகுறிகளை சாதாரண ஜுரம், ஜலதோஷமாக கருதும் தவறை செய்ய வேண்டாம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஓமிக்ரான் அறிகுறிகளைக் (Omicron Symptoms) கண்டால், உடனடியாக கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்வது அவசியமாகும்.
ALSO READ | குழந்தைகளில் காணப்படும் 'இந்த' ஒமிக்ரான் அறிகுறிகளை அலட்சியபடுத்த வேண்டாம்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR