கோவிட்-19 லேட்டஸ்ட் அப்டேட்: இந்தியாவில் 573 பேருக்கு புதிதாக கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வைரஸ் பாதிப்புக்கு இருவர் பலியாகியுள்ளனர். ஒமிக்ரான் வகை கொரோனா வைரறின் துணை-வேறுபாடு JN.1 10 மாநிலங்களில் காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளது கவலைகளை அதிகரித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது, நாட்டில் மொத்தம் 4,565 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இது தொடர்பான அறிவிப்புகளை அவ்வப்போது மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து வருகிறது. அதன்படி, மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை இன்று வெளியிட்ட தகவல்களின்படி,கோவிட் காரணமாக ஹரியானா மற்றும் கர்நாடகாவில் இருந்து தலா ஒரு இறப்பு என இருவர் உயிர்ழந்துள்ளனர்.


தரவுகளின்படி, நாட்டில் இதுவரை JN.1 என்ற கொரோனா வைரஸ் துணை மாறுபாட்டின் மொத்தம் 263 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த புதிய விகாரத்தை ஆர்வத்தின் மாறுபாடாக (VOI) அறிவித்தது, இது தீவிர அறிவியல் ஆய்வுக்கு உட்பட்டது. இந்த மாறுபாடு வயதானவர்களுக்கும், ஏதேனும் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆபத்தானது என்பது கவலையளிக்கிறது.


மேலும் படிக்க | சிறுநீரகத்தை பாதுகாக்க இந்த டயட் உதவும்! தினசரி உணவில் தவிர்க்கக்கூடாதவை


N.1 என்பது ‘பைரோலா’ வகை BA 2.86 வைரஸின் மாறுபாடாகும். நவம்பர் மாதத்தில், JN.1 மாறுபாட்டின் 3 சதவீத வழக்குகள் மட்டுமே இருந்தன. இது டிசம்பரில் 27 சதவீதமாக அதிகரித்துள்ளது. காய்ச்சல் ஏற்பட்டால், மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு காய்ச்சல் குறையவில்லை என்றால், கோவிட் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.


3 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் தொடர்ந்தால், ஆர்டிபிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். தற்போது குளிர்காலத்தில், வைரஸ் பரவல் அதிகரித்திருந்தாலும், பரிசோதனைகள் குறைவாக இருப்பதால் தான், பரவலின் தாக்கம் தெரியவில்லை ஆனால் பாதிப்பு உண்மையில் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இருந்தாலும், இதுவரை புதிய மாறுபாடு உயிருக்கு ஆபத்தானது என்று நிரூபிக்கப்படவில்லை. 


புதிய வகை கொரோனா (Corona JN.1 Variant) பாதித்தால், காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, உடல் வலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் அடங்கும். வழக்கமாக வரும் பருவக்கால காய்ச்சலைப் போலவே இந்த அறிகுறிகளும் இருக்கின்றன. 


மேலும் படிக்க | அற்புத பலன் தரும் குளிர்காலக் கீரை! கடுகுக்கீரை கூட்டு சாப்பிட்டால் நோய்கள் ஓடிப்போகும் 


சீனாவிலிருந்து 2019 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நோய்த் தொற்றால்  லட்சக்கணக்கில் பலியானார்கள். இது உலகளாவிய பெருந்தொற்றாக சர்வதேசங்களையும் முடக்கியது. 


கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், முகக்கவசம், தடுப்பூசி என பல கடுமையான முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இருந்தாலும், குளிர்காலத்தில் மட்டும் வேகமெடுத்து பிறகு மட்டுப்பட்டு வருகிறது கொரோனா என்னும் பெருந்தொற்று.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Immunity: குளிர்காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஹாய் சொல்லும் சூப்பர்ஃபுட் உணவுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ