Corona JN.1 Variant Case In India: இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. உருமாறிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று (Covid JN.1 Variant) பாதிப்பு நாளுக்கு நாள் நாட்டில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 292 புதிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் தேசிய தலைநகரம் டெல்லியிலும் நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
308 பேருக்கு உருமாறிய ஜேஎன் 1 கொரோனா பாதிப்பு
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் புதிதாக 308 பேருக்கு உருமாறிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க - 2023ல் உலகை அச்சுறுத்திய 4 நோய்த்தொற்றுகள்! 2024 ஆம் ஆண்டிலும் கவனம் தேவை
மத்திய சுகாதார அமைச்சர் ஆலோசனை
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் சுகாதார அமைச்சர், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் முதன்மைச் செயலாளர்களுடன் சுகாதார முன்னேற்பாடு வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அதேநேரத்தில் சுவாச நோய்கள் குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 64 ஆக உயர்வு
தமிழ்நாட்டை பொறுத்த வரை 4 பேருக்கு உருமாறிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க - நிம்மதியான தூக்கத்தின் வில்லன் இந்த உணவுகள், கண்டிப்பா சாப்பிடாதீங்க
ஜேஎன் 1 வகை கொரோனா: கேரளவில் 3 பேர் பலி
அதிக எண்ணிக்கையிலான உருமாறிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு கேரளாவில் பதிவாகியுள்ளன. இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 292 புதிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளன. இதுவரை 3 பேர் உயிரிழந்து உள்ளனர். கேரளா மாநிலத்தில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2014 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு
தேசிய தலைநகர் டெல்லியிலும் கொரோனாவின் உருமாறிய ஜேஎன் 1 வகை தொற்று பரவத் தொடங்கியுள்ளது. ஊடக அறிக்கையின்படி, டெல்லியில் இரண்டு கொரோனா நோயாளிகள் வென்டிலேட்டரில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 3 புதிய கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் டெல்லியில் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
புதிய உருமாறிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அனைத்து உலக நாடுகள் இதை கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளன.
மேலும் படிக்க - பாடாய் படுத்தும் பீரியட்ஸ் வலியா.. இந்த 'மேஜிக்' பானங்களை குடிக்கவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ