ஒமிக்ரான் சிகிச்சைக்கு ஆயுஷ்மான் கார்டை பயன்படுத்த முடியுமா
Ayushman Card: பொது மக்களுக்கு இலவச சுகாதார வசதிகளை வழங்குவதற்காக ஆயுஷ்மான் பாரத் கார்டை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
புதுடெல்லி: Ayushman Bharat Golden Card: பொது மக்களுக்கு இலவச சுகாதார வசதிகளை வழங்குவதற்காக ஆயுஷ்மான் பாரத் கோல்ட் கார்டை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில், ஒவ்வொரு கார்டுதாரருக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும். இந்த கார்டின் மூலம் ஏழைத் தொழிலாளர்களும் எளிதில் சிகிச்சை பெறலாம். இந்த கார்டின் கீழ் பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது, நாட்டை உலுக்கி வரும் ஒமிக்ரான் அதிவேகமாக பரவி வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த கார்டு இல் Omicron சிகிச்சை இலவசமா? இல்லையா? என்ற கேள்வி உங்கள் மனதில் இருக்கலாம்.
ஒமிக்ரானுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் (Ayushman Bharat Card) கீழ், நாட்டின் 10 கோடி ஏழை, பிற்படுத்தப்பட்ட மற்றும் நலிந்த பிரிவினருக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. இந்தக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு கிடைக்கும். இந்த கார்டின் கீழ் ஒமிக்ரானின் (Omicron Treatment) சிகிச்சையும் இலவசமாக செய்துக்கொள்ளலாம். இருப்பினும், இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, நீங்கள் சில தகுதிகளைப் பெற்றிருப்பதும் அவசியம். அவை என்ன என்பதை பார்போம்.
ALSO READ | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் அதிரடி உயர்வு
கிராமப்புறங்களில், குடிசை வீடு உள்ளவர்கள், குடும்பத்தில் வயது முதிர்ந்தவர்கள் (16-59 வயது) இல்லாதவர்கள், குடும்பத் தலைவர் ஒரு பெண், குடும்பத்தில் ஊனமுற்றோர் இருப்பவர்கள், குடும்பத்தில் SC / ST யைச் சேர்ந்தவர் அல்லது நபர் நிலமற்றவர் / தினசரி கூலித் தொழிலாளி, ஆதரவற்ற, தொண்டு அல்லது பழங்குடியினர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தின் பலனைப் பெற முடியும்.
ஆயுஷ்மான் பாரத் கோல்டன் கார்டை இப்படி செய்யுங்கள்
* முதலில், உங்களுக்கு அருகிலுள்ள பொது சேவை மையத்திற்குச் செல்லுங்கள்.
* இங்கே மையத்தின் அதிகாரிகள் பட்டியலில் உங்கள் பெயரை சரிபார்ப்பார்கள்.
* ஆயுஷ்மான் யோஜனா பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தால், உங்களுக்கு கோல்டன் கார்டு கிடைக்கும்.
* ஆதார் அட்டை, பான் கார்டு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், ரேஷன் கார்டு புகைப்பட நகல், பாஸ் போர்ட் அளவு புகைப்படம் போன்ற உங்களின் அனைத்து முக்கிய ஆவணங்களையும் மைய அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
* உங்கள் பதிவு ஜன் சேவா கேந்திரா அதிகாரியால் செய்யப்படும்.
* பதிவு செய்த பிறகு, பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை அதிகாரிகள் தருவார்கள்.
* பதிவு செய்த 15 நாட்களுக்குள் உங்கள் ஆயுஷ்மான் கோல்டன் கார்டு உங்களை வந்து சேரும்.
ஆயுஷ்மான் பாரத் கார்டை ஆன்லைனில் பதிவிறக்கவும்
* நீங்களும் ஆயுஷ்மான் பாரத் கார்டைப் பதிவிறக்க விரும்பினால், இதற்கு https://pmjay.gov.in/ க்குச் செல்லவும்.
* இப்போது உங்கள் மின்னஞ்சல் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
* இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கும், அதில் ஆதார் எண்ணை உள்ளிட்டு தொடரவும். அடுத்த பக்கத்தில் உங்கள் கட்டைவிரல் பதிவை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.
* பின்னர் 'அங்கீகரிக்கப்பட்ட பயனாளி' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
* அதன் பின்னர் நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட தங்க அட்டைகளின் பட்டியலைக் காண்பீர்கள்.
* இந்த பட்டியலில் உங்கள் பெயரைக் கண்டுபிடித்து, கன்ஃபார்ம் பிரிண்ட் ஆப்ஷன் ஐ கிளிக் செய்யவும்.
* இப்போது நீங்கள் CSC வாலட்டைப் பார்ப்பீர்கள், அதில் உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
* இப்போது பின்னை இங்கே உள்ளிட்டு முகப்புப் பக்கத்திற்கு வரவும்.
* பதிவிறக்க அட்டையின் விருப்பம் கேண்டிடேட் பெயரில் தோன்றும்.
* இங்கிருந்து உங்கள் ஆயுஷ்மான் கார்டை பதிவிறக்கம் செய்யலாம்.
ALSO READ | 7th Pay Commission முக்கிய அப்டேட்: ரூ. 1,44,200 வரை அரியர் தொகை கிடைக்கும், விவரம் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR