Omicron Alert: சர்வதேச அளவில் அதிகரிக்கும் ஒமிக்ரான்! இங்கிலாந்தில் பாதிப்பு தீவிரம்!
கொரோனா வைரஸின் புதிய அவதாரமான ஒமிக்ரான் பாதிப்பு உலக அளவில் அதிகரித்து வரும் நிலையில், இங்கிலாந்தில் பாதிப்பு தீவிரமாகியுள்ளது
தொடர்ந்து இரண்டாவது நாளாக இங்கிலாந்து முழுவதும் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. நேற்று (2021, டிசம்பர் 16 வியாழக்கிழமை) 88,376 நோய்த்தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
ஓமிக்ரான் மாறுபாடு "நம்பமுடியாத அளவிற்கு வேகமாக" உயரக்கூடும் என்று கூறும் இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி, ஆனால் கொரோனொ தடுப்பூசி பூஸ்டர்கள் காரணமாக அதன் பரவலை குறைக்கலாம் என்று கூறுகிறார்.
இங்கிலாந்தில் கொரோனா தடுப்புக்கான மூன்றாவது தடுப்பூசி அதிக அளவில் போடப்பட்டு வருகிறது.
ஓமிக்ரான் மாறுபாடு அதிகரித்து வரும் நிலையில், இங்கிலாந்து ராணி, பாரம்பரிய கிறிஸ்துமஸ் விருதை ரத்து செய்துள்ளார் என்பது அந்நாட்டில் ஒமிக்ரான் பரவலின் மோசமான நிலையை எடுத்து காட்டுகிறது.
புதிய கோவிட்-19 மாறுபாட்டான ஓமிக்ரானின் (Omicron Variant) தீவிரத்தை தீர்மானிக்க வாரங்கள் ஆகும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆரம்பகால அறிகுறிகளை பார்க்கும்போது, இது முந்தைய பிறழ்வை விட மோசமாக இல்லை என்று கூறப்படுகிறது. இருந்தபோதிலும், ஒமிக்ரான் பாதிப்பினால், உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது கவலைகளை அதிகரிக்கின்றன.
அதேபோல் அமெரிக்காவிலும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு அச்சத்தை அதிகரித்துள்ள நிலையில், கடுமையான நோய் மற்றும் மரணத்துடன் கூடிய குளிர்காலத்தை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரித்துள்ளார்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவல் அதிகரித்து வருவதால், தடுப்பூசி (Covid Vaccine) போடப்படாதவர்களுக்கு குளிர்காலத்தில் பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் கவலை தெரிவித்துள்ளார்.
ALSO READ | Omicron அச்சுறுத்தலால் சர்வதேச விமானங்களுக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிப்பு
கொரோனாவிற்கு பின் சரிவு கண்ட உலகப் பொருளாதாரம், மீண்டு வந்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது ஒமிக்ரானின் பரவல் அச்சங்களை அதிகரித்துள்ளன.
இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகள் கண்காணிப்பு அமைப்பான ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சி (European Medicines Agency), ஐந்து முதல் 11 வயதுடையவர்களுக்கான Pfizer-BioNTech தடுப்பூசியை அங்கீகரித்தது.
டென்மார்க் மற்றும் ஆஸ்திரியாவில் இளம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்கிவிட்டன.
இந்தியாவிலும் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துவிட்டது.
கர்நாடகா, டெல்லி மற்றும் குஜராத்தில் 10 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் ஒமிக்ரான் பாதிப்பு 32 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 17 பேருக்கு ஒமிக்ரான் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ALSO READ | இந்தியாவில் Omicron தொற்று! அதிகரிக்கும் அச்சம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR