உங்களுக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு உள்ளதா? அப்படியானால் உங்கள் கனவை நிறைவேற்ற உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு உள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவ  நுழைவு தேர்வுக்கான கோச்சிங்கில் மிக சிறந்து விளங்கும் இந்திய உயிரியல் கழகம் ஆன்லைன் கோச்சிங் வசதியை வழங்க உள்ளது.


மகாராஷ்டிராவில் உள்ள இந்திய உயிரியல் கழகம் (IIB), மருத்துவ நுழைவு தேர்வுக்கு தயார் செய்வதில் மிகவும் புகழ்பெற்றது. இந்த கழகம் NEET மற்றும் AIIMS நுழைவு தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்கிறது


1999 ஆம் ஆண்டு முதல், மாணவர்கள் தங்கள் மருத்துவ கனவை நிறைவேற்ற உதவி வருகிறது. இந்த உயிரியல் கழகத்தில் (Indian Institute of Biology) 15 ஆண்டுக்கும் மேல் பேராசிரியராக பணியாற்றி வரும் அனுபவமுள்ளவர்கள் மூலம் கோச்சிங்  வழங்கப்படுகிறது.


ALSO READ | கொரோனாவால் உலக மக்கள் தொகை அதிகரிக்கும் என்ற ஆச்சரியத் தகவல்!!


 


மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு கண்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் கனவுகளை நிறைவேற்ற இந்த இந்திய உயிரியல் கழகம் உதவியுள்ளது. குறைவான கால அளவில் அதிக அளவிலான பாடங்களை, புதுமையான வகையில் கற்பிக்கும் உத்தியை கடைபிடிப்பதில் இந்த இந்திய உயிரியல் கழகம் மிகவும் பெயர் பெற்றது.


மேலும், மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் விஷயங்கள், அவர்களின் வாழ்நாள் முழுவதும் பயன்படுவதாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்திய உயிரியல் கழகம் (IIB) தொடர்ந்து பணியாற்றி வருகிறது. மேலும் இதில் பணியாற்றும் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் போது, ஒரு நட்பான சூழ்நிலையை உருவாக்குகின்றனர். இதனால் மாணவர்கள் தயக்கமின்றி கற்க முடிகிறது.


மேலும் சிறந்த மாணவர்களுக்கு சலுகைகளையும் இந்த இந்திய உயிரியல் கழகம் வழங்குகிறது.


இந்த உயிரியல் கழகத்தில் ஆண்டு தோறும் சுமார் ஆயிரம் மாணவர்களுக்கு இலவசமாக கோச்சிங் வழங்கப்படுகிறது


பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள், விவசாயிகளின் குழந்தைகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்களின் குழந்தைகள், வறட்சியினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு இங்கு இலவச கோச்சிங் வழங்கப்படுகிறது.


மகாராஷ்டிராவின் நாண்டட் (Nanded) மற்றும் லட்டூர் (Latur) ஆகிய பகுதிகளில் உள்ள இதன் கேம்ப்ஸில் மட்டுமே இந்த மருத்துவ படிப்பிற்கான கோச்சிங் வழங்கப்பட்டது. தற்போது ஆன்லைன் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது.


ALSO READ | வாட்ஸ் ஆப் இமெயிலில் கூட சம்மன் வரும்.. இனி எங்கே போனாலும் தப்பிக்க முடியாது..!!


கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


1999ஆம் ஆண்டு சிறிய அமைப்பாக தொடங்கப்பட்ட இந்திய உயிரியல் கழகம் தொடர்ந்து மாணவர்கள் கல்வியில் சிறந்த சேவை செய்து வருகிறது. மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பத்தில் தனக்கென்று தனிப்பட்ட பாணியை கடைபிடிக்கும் இந்திய உயிரியல் கழகம் மாணவர்களிடையே மிகவும் பிரபலமான கல்வி அமைப்பாக உள்ளது என அந்த இந்திய உயிரியல் கழகத்தின் இயக்குனர் தர்ஷித் பாட்டில் தெரிவித்தார்.