Osteoporosis: எலும்பு மெலிதல் நோயிலிருந்து தப்பிக்க கால்ஷியம் மட்டும் போதாது ..!!
ஆஸ்டியோபோரோசிஸ் நோயை முற்றிலுமாகத் தீர்க்க எந்த மருந்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எலும்பு மெலிதல் நோயின் காரணமாக வரும் வலியை, மருந்துகள் மூலம் குறைக்க மட்டுமே முடியும் .
ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) என்பது என்ற எலும்பு மெலிதல் நோய். எலும்புகள் மிகவும் பலவீனமானதகாவும், எளிதில் உடையக் கூடியதாகவும் ஆக்கும் ஒரு வித நோய் ஆகும். லேசான இருமல் அல்லது இடுப்பை சற்று வளைத்தால் கூட முதுகெலும்பு, மணிக்கட்டு போன்ற இடங்களில் எலும்பு முறிவுகளை ஏற்படுத்தும் அளவிற்கு எலும்புகளை பலவீனமாக்குகிறது.
ஆஸ்டியோபோரோசிஸ் 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டாலும், ஆண்களையும் அதிகம் தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நோயை முற்றிலுமாகத் தீர்க்க எந்த மருந்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எலும்பு மெலிதல் நோயின் காரணமாக வரும் வலியை, மருந்துகள் மூலம் குறைக்க மட்டுமே முடியும் .
பலருக்கு கால்ஷியம் (Calciuim) எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த நோயிலிருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், இதிலிருந்து தப்பிக்க பால் அதிகம் அருந்தினால் போதும் என நினைக்கிறார்கள். ஆனால், அதனால் மட்டும் எலும்புகள் வலுவடையாது என்பதை அறிந்து கொள்வது முக்கியம்.
ALSO READ | Health Alert! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்.!!!
உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க கால்சியம் தவிர, பல ஊட்டச்சத்துக்களுக்கும் சமமாக முக்கியத்துவம் உள்ளது. உங்கள் எலும்பு அடர்த்தியை அதிகரிக்க தேவையான கால்சியம் தவிர முக்கியமாக தேவைப்படும் மற்ற 5 சத்துக்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
வைட்டமின் K (Vitamin K)
உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க வைட்டமின் சேர்ப்பது மிகவும் அவசியம். வைட்டமின் கே பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவு பெண்களுக்கு 122 எம்சிஜி மற்றும் ஆண்களுக்கு 138 எம்சிஜி ஆகும். ப்ரோக்கோலி, கீரை, முட்டைக்கோஸ் மற்றும் கீரை ஆகியவை வைட்டமின் கே அதிகம் கிடைக்கும் உணவுகள் ஆகும்.
ALSO READ | அழகான கேசத்திற்கான Keratine சிகிச்சை; அதிக செலவில்லை, பழைய சாதம் போதும்
வைட்டமின் D (Vitamin D)
வைட்டமின் டி, சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மிக முக்கிய ஊட்டச்சத்து. நீங்கள் சாப்பிடும் உணவுகள் உள்ள கால்ஷியம் உடலில் சேர இந்த சத்து மிகவும் முக்கியம். இது இரத்தத்தில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்களை பராமரிக்க உதவுகிறது. சூரிய ஒளியைத் தவிர, கீரை, சோயாபீன் போன்ற உணவுகளிலிருந்தும் இந்த ஊட்டச்சத்துக்களைப் பெறலாம்.
புரத சத்து (Protein)
புரதம் நிறைந்த உணவுகள் எலும்பு மற்றும் தசையை பாதுகாக்கிறது. புரத சத்து எலும்பு தாது அடர்த்தியை அதிகரிக்கும் மற்றும் எலும்பு இழப்பு விகிதத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. புரதத்தை போதுமான அளவு உட்கொள்வது எலும்பு முறிவு மற்றும் எலும்பு இழப்பு அபாயத்தையும் குறைக்கும். .
மெக்னீசியம் (Magnesium)
எலும்பு ஆரோக்கியத்திற்கு மெக்னீசியம் மிகவும் அவசியம், எலும்பு திசுக்களில் சுமார் 60% திச்சுக்களில் மெக்னீசியம் காணப்படுகிறது. குறைந்த அளவு மெக்னீசியம் உட்கொள்வோரை விட அதிக அளவு மெக்னீசியம் உணவை உட்கொள்ளும் மக்களுக்கு எலும்பு அடர்த்தி அதிகம் உள்ளதாக கொண்டிருப்பதாக பல ஆய்வுகள் காட்டுகின்றன. ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்க இது மிகவும்அவசியம். பருப்பு வகைகள், விதைகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற உணவுகளை உட்கொள்வதன் மூலம் உணவில் மெக்னீசியத்தின் அளவை அதிகரிக்க முடியும்.
வைட்டமின் C (Vitamin C)
எலும்பு ஆரோக்கியத்தை பராமரிப்பதில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஊட்டச்சத்துகள் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. எலும்பு வளர்ச்சி, மறுஉருவாக்கம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் வராமல் வைட்டமின் சி மிகவும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு போதுமான சூரிய ஒளி உடலில் படாததும் முக்கிய காரணம். பெண்களுக்கு இந்த நோய் தாக்கும் அபாயம் மிக அதிகம் என்றாலும், அதிக அளவில் மது அருந்துபவர்கள் மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கும் இந்த நோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. அதனை மனதில் கொண்டு, கால்ஷியம் மட்டுமின்றி மேலே குறிப்பிட்ட சத்துக்கள் உள்ள உணவையும் எடுத்துக் கொண்டால், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
ALSO READ | Health Tips: கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம், வியக்கத்தக்க நன்மைகள் உள்ளன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR