உலக நாடுகளில் குரங்கு அம்மை பரவல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முழு வீச்சில் மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது சண்டிபுரா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு,  சண்டிபுரா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது எனவும், மக்கள் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் (WHO)எச்சரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சண்டிபுரா வைரஸால் ஏற்படும் கடுமையான மூளையழற்சி நோய்க்கு அறிகுறி (AES) பாதிப்புகள் இந்த ஆண்டு வேகமாக அதிகரித்து, பலர் உயிரிழந்துள்ளனர். இந்தியா முழுவதும் 42 மாவட்டங்களில் இந்த தொற்று பரவல் காணப்பட்டது. பாதிக்கப்பட்ட 245 பேரில் 63 பேருக்கு சண்டிபுரா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பெரும்பாலும் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படும் நிலையில், கடுமையான காய்ச்சல் அல்லது நரம்பு மண்டல பாதிப்பு இருந்தால் மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும். இந்த வைரஸ் பாதித்தால் காய்ச்சல், வாந்தி, நரம்பியல் பாதிப்பு, மூளைக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். 


பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் உயிரிழக்கின்றனர் என்பதால், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக  சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சண்டிபுரா வைரஸ் ராப்டோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்தது இது நாட்டின் மேற்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில், குறிப்பாக பருவமழையின் போது பரவல் உண்டாகிறது. இது 'மணல் ஈக்கள்' மற்றும் 'உண்ணி' போன்ற நோய் பரப்பும் பூச்சிகளால் பரவுகிறது.


சண்டிபுரா வைரஸ் என்றால் என்ன?


சண்டிபுரா வைரஸ் என்பது மூளை மற்றும் முள்ளந்தண்டு வடத்தை பாதிக்கும் ஒரு வகை வைரஸ் ஆகும். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால், காய்ச்சல், தலைவலி, வாந்தி, வலிப்பு மற்றும் சுயநினைவு இழப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும். சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தாக முடியும்


சண்டிபுரா வைரஸ் தொற்று பரவலுக்கான காரணம்


காலநிலை மாற்றம், கொசுக்கள் பலகி பெருகுவதற்கான சாதகமான சூழல், மக்களிடையே தொற்று நோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாமை உள்ளிட்ட பல காரணங்கள் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.


சண்டிபுரா வைரஸ் தொற்று வர்மாக தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை


1. கொசுக் கடியில் இருந்து பாதுகாக்க கொசு வலைகளைப் பயன்படுத்துதல்


2. உடலை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடை அணிதல்


3. வீட்டைச் சுற்றிலும், சுற்றுபுறத்திலும்  தூய்மையைப் பேணுதல்


4. பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து விலகி இருத்தல்