வெறும் வயிற்றில் பப்பாளி தண்ணீர் குடிச்சு பாருங்க! ஆரோக்கியத்தை அள்ளித்தரும் டீடாக்ஸ் நீர்
Papaya seeds Benefits: பப்பாளியின் விதைகளை ஊறவைத்து அந்த நீரை குடித்து வந்தால், அது ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு அதிசயங்களைச் செய்யும் அற்புதமான டீடாக்ஸ் பானமாக மாறுகிறது
காலையில் நாம் உண்ணும் உணவு தான் ஒரு நாளில் நமது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கிறது. காலை உணவு என்பது நாம் தூங்கி எழுந்த சில மணி நேரத்திற்கு பிறகு உண்பது. காலையில் எழுந்த உடன் வெறும் தண்ணீர் குடித்த பிறகு நமது வயிற்றுக்குள் செல்லும் பானம் சத்தானதாக இருக்க வேண்டும். அது நமது சுறுசுறுப்பான செயல்பாடுகளுக்கு காரணமாக இருக்கும். வீட்டில் தயாரிக்கப்பட்ட காலை பானங்கள் அதிக நன்மைகள் பயக்கின்றன.
அது காபி, தேநீர் என பால் சேர்க்கப்பட்ட அல்லது சேர்க்கப்படாத பானங்களாக இருந்தாலும் சரி, வெந்தய நீர், வேப்பிலை, நெல்லிக்காய் என வேறு ஆரோக்கிய பானமாக இருந்தாலும் சரி, அவற்றுக்கு என தனித்துவமான பலன்கள் உள்ளன. அதேபோல பப்பாளியின் விதைகளும் காலையில் வெறும் வயிற்றில் உண்டால் நல்ல பலன்களைத் தர வல்லது.
இந்தக் கட்டுரையில், வெற்று வயிற்றில் காலையில் குடிக்கும் டிடாக்ஸ் பானங்களில் ஒன்றைப் பார்ப்போம், இதை நீங்கள் உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்து பழக்கமாக்கிக் கொண்டால், ஆரோக்கியமான, சுறுசுறுபான உடலைப் பெறலாம். அந்த நாள் நல்ல நாளாக முடியும்.
பப்பாளி விதைகள்
அண்மையில் சில ஆண்டுகளாக இயற்கை வைத்தியம் மற்றும் மாற்று சுகாதார நடைமுறைகளில் மக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. அதில் பப்பாளி விதையை தண்ணீரில் ஊறவைத்து பருகுவது என்பது ஒரு முக்கியமான விஷயமாக மாறியுள்ளது. பப்பாளி சுவையானது மட்டுமல்ல, பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | இந்த பழங்களை தோலுடன் சாப்பிட்டால் நீரிழிவு நோயில் நிவாரணம் கிடைக்கும்
பப்பாளியின் விதைகளை ஊறவைத்து அந்த நீரை குடித்து வந்தால், அது உங்களுடைய ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு அதிசயங்களைச் செய்யும் அற்புதமான டீடாக்ஸ் பானமாக மாறுகிறது.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பப்பாளி விதை நீர்
பப்பாளி விதை தண்ணீரை வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது அதன் அதிக நார்ச்சத்து மற்றும் என்சைம் உள்ளடக்கம் காரணமாக செரிமானம் இயற்கையாக நடைபெறும். குடல் இயக்கத்தை சீராக்கவும், மலச்சிக்கல் பிரச்சனைகளை தடுக்கவும் பப்பாளி விதை நீர் உதவுகிறது. இதேபோல், பப்பாளி பழத்தின் விதைகளை மென்று உண்பதும் செரிமான ஆரோக்கிய பிரச்சினைகளை குணப்படுத்த உதவும்.
சிறந்த காலை டிடாக்ஸ் பானம்
பப்பாளி விதை நீரில் இருக்கும் பப்பேன் போன்ற நொதிகள், உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவதில் திறம்பட உதவும். இந்த இயற்கையான நச்சு நீக்கம் செயல்முறை கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது மற்றும் ஒட்டுமொத்த உடல் சுத்திகரிப்புக்கு உதவுகிறது. எனவே, கல்லீரல் பிரச்சினைகள் உள்ளவர்கள் ஒரு கிளாஸ் பப்பாளி விதை தண்ணீருடன் தங்கள் நாளைத் தொடங்குவது நல்லது.
இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
நோய் எதிர்ப்பு சக்தி பிரச்சினைகள் இருந்தால், காலை உணவில் ஊறவைத்த பப்பாளி விதையின் தண்ணீரை சேர்த்து பாருங்கள். பப்பாளி விதை நீர், வைட்டமின் சி உள்ளிட்ட ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஒரு இயற்கை பானமாகும். இந்த பானத்தை வெறும் வயிற்றில் வழக்கமாக உட்கொள்வது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, தொற்று மற்றும் நோய்களை திறம்பட எதிர்த்துப் போராடும்.
எடை இழப்பை ஊக்குவிக்கிறது
அதிகாலையில் பப்பாளி விதைகள் ஊறவைத்த தண்ணீரைக் குடித்து வந்தால், கடகடவென உடல் எடை குறையும். பப்பாளி பழத்தின் விதையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது, மேலும் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற விருப்பமும் எழாது. கூடுதலாக, இது ஒரு சிறந்த டிடாக்ஸ் பானமாக இருப்பதால் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்தும் ஒரு பானமாக மாறுகிறது.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பப்பாளி விதை
பப்பாளி விதை நீரை தவறாமல் உட்கொள்வது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதாக நம்பப்படுகிறது, இதனால் இதய நோய் அபாயம் குறைகிறது மற்றும் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.
பப்பாளி விதை நீர் தயாரிப்பது எப்படி?
பழுத்த பப்பாளியில் இருந்து விதைகளை எடுத்து, அவற்றை நன்கு கழுவி, தண்ணீரில் சேர்த்து ஊற வைக்கவும். காலையில், தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.
(பொறுப்புத் துறப்பு: உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், மருத்துவரை அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு உடலுக்கும் வெவ்வேறு தேவைகள் உள்ளன. நீங்கள் சொந்தமாக எதையும் திட்டமிடுவதற்கு முன், உங்கள் உடலின் தன்மையை புரிந்துக் கொண்டு முயற்சிக்கவும். உணவியல் நிபுணர் இதற்கு சரியான ஆலோசனை சொல்ல முடியும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ