மல்லாட்டை என்றும் அழைக்கப்படும் நிலக்கடலை சுவையானது மட்டுமல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவு. குளிர்காலத்தில் மிகவும் விரும்பி சாப்பிடப்படுகிறது. வேர்க்கடலையில் உள்ள ஏராளமான நன்மைகள், அதை மிகச்சிறந்த உணவாக மாற்றிகிறது. . வேர்க்கடலையில் உள்ள சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. வேர்க்கடலையை அப்படியே பச்சையாக சாப்பிடலாம், வேக வைத்தும் சாப்பிடலாம், வறுத்தும், பொரித்தும், சமைத்தும் சாப்பிடலாம். அதுமட்டுமல்ல, கடலை எண்ணெய் தயாரிக்கவும் வேர்க்கடலை பயன்படுத்தப்படுகிறது. வேர்க்கடலை நமது அன்றாட உணவில் ஏதாவது ஒரு விதத்தில் பயன்பட்டுக் கொண்டே இருக்கும் ஒரு பொருள் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேர்க்கடலையை எப்போது எப்படி சாப்பிடவேண்டும்: 


வேர்க்கடலையை சாப்பிட சிறந்த நேரம் எது? என்ற கேள்விக்கு எப்போது வேண்டுமானாலும் என்ற பதிலே கிடைக்கும். வேர்க்கடலையில் புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் என சத்துக்களின் சுரங்கமே உள்லது. அதிலும், வேர்க்கடலையை ஊறவைத்த பிறகு காலையில் சாப்பிட்டால், அதன் ஊட்டச்சத்து மதிப்பு மேலும் அதிகமாகிறது.


மேலும் படிக்க | ரத்தம் நீர்த்து போக வைட்டமின் கே காரணமா? ஆனால் எலும்பு பலமா இருக்க இதுதானே காரணம்


வேர்க்கடலையில் உள்ள மோனோ-அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன, இதனால் இதய நோய் அபாயம் குறைகிறது.  வேர்க்கடலை கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்காது, ஆனால், வேர்க்கடலையில் அதிக கலோரிகள் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு அதை அளவுடன் உட்கொள்ளவேண்டும்.  


தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது ஆகும்.  வேர்க்கடலையில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகள் இருப்பதால், அது உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாகும் என்பதால் பலர், அதன் நன்மைகளை தவிர்த்துவிடுகின்றனர். வேர்க்கடலையில் உள்ள பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி போன்றவை உடலுக்கு மிகவும் நல்லது. 


எனவே, தினசரி ஒரு கைப்பிடி வேர்க்கடலை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வேர்க்கடலையில் உள்ள ஊட்டச்சத்துக்களால், சருமப் பிரச்சனைகள் குறையும். உடலில் உள்ள செரிமான உறுப்புகள் நன்றாக வேலை செய்யவும், இதய ஆரோக்கியத்திற்கு நன்மையைக் கொடுக்கவும் தினசரி ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலையை உண்பது நல்லது. 


மேலும் படிக்க | Weight Loss Vegetable: உடல் எடையைக் குறைக்கும் கருணைக் கிழங்கு


இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் வேர்க்கடலை, பசி எடுப்பதை தள்ளிப்போடும் என்பதால், உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. அதுமட்டுமல்ல, வேர்க்கடலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் இது சர்க்கரை நோயின் தாக்கத்தை குறைப்பது மட்டுமின்றி கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | இந்த வைட்டமின் குறைபாட்டால் முடி உதிர்வு கட்டாயம் ஏற்படும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ