Weight Loss Vegetable: உடல் எடையைக் குறைக்கும் கருணைக் கிழங்கு

Food for Health: உருளைக்கிழங்கில் இருப்பதை விட பல மடங்கு சத்துக்கள் கொண்ட கருணைக்கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, ரைபோபிளவின் என பலசத்துகள் அதிகம் உள்ளன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 29, 2022, 08:32 PM IST
  • மூல நோயை குணப்படுத்தும் கருணைக்கிழங்கு
  • பிடிகருணையின் பிடிவாதமான ஆரோக்கிய நன்மை
  • காரம் கருணைக் கிழங்கின் அரிப்புக்கு காரணம் என்ன?
Weight Loss Vegetable: உடல் எடையைக் குறைக்கும் கருணைக் கிழங்கு title=

உணவே மருந்து என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதிலும், நாம் உண்ணும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் தான் நமது உடல் இயக்கத்திற்கும் நலத்திற்கும் அடிப்படையானது. அந்த வகையில், கிழங்கு வகைகளில் கருணை கிழங்கு முக்கியமானது. உருளைக்கிழங்கு அதிகம் பயன்படுத்தப்பட்டாலும், அதில் இருப்பதை விட பல மடங்கு சத்துக்கள் கொண்டது கருணைக்கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துகள் அதிகம் உள்ளன. இந்த சத்துகள் அனைத்தும் உடலின் பல்வேறு வகையான தேவைகளை பூர்த்தி செய்து, உடலின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவுபவை.

கருணைக்கிழகில் இரு வகைகள் உண்டு. காரும் கருணை, காராக் கருணை என்று அழைக்கப்படும் இந்த கிழங்கு வகைகல் இரண்டுமே, சமைத்து உண்ண ஏற்றவை. பிடிகருணை என்று அழைக்கப்படும் காரும் கருணை ஒரு வகை என்றால்,  காராக் கருணை வகையைச் சேர்ந்தது சேனைக்கிழங்கு.

மேலும் படிக்க | ரத்தம் நீர்த்து போக வைட்டமின் கே காரணமா? ஆனால் எலும்பு பலமா இருக்க இதுதானே காரணம்

கருணைகிழங்கு வகைகள் ஏன் அரிப்பு கொடுக்கின்றன?
கருணைக்கிழங்கை சரியான பக்குவத்தில் சமைக்காவிட்டால், உண்ணும்போது நாக்கில் அரிப்பு ஏற்படும். எனவே சமைக்கும் பொழுது கிழங்கை நன்றாக வேக வைக்க வேண்டும் . பின்பு அதன் தோலை உரித்து, சிறிது புளி சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள காரல் நீங்குவதுடன் சாப்பிடும் பொழுது ஏற்படும் அரிப்பும் இருக்காது.

அரிசி கழுவிய நீரில் வேக வைத்தால் காரல், நமைச்சல் மட்டுப்படும் என்றும் சொல்வார்கள். கருணைக்கிழங்கின் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துக்கொண்டு பயன்படுத்தினால், வாரம் ஒரு முறையாவது கண்டிப்பாக சாப்பிடத் தோன்றும்.

செரிமாணத்திற்கு கருணைக் கிழங்கு

ஜீரண மண்டல உறுப்புகளின்  நன்கு வேலை செய்து சீரண சக்தியைத் துரிதப்படுத்தும் கருணைக்கிழங்கு, சீரண மண்டலத்தை வலுவாக்கும். நமது உடலில் ஏற்படும் அதிக  வெப்பத்தால் ஏற்படும் உடல் சூடு தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கும் வல்லமை கொண்டது கருணைக் கிழங்கு.

மேலும் படிக்க | இடுப்பில் வலி ஏற்படுகிறதா? ஜாக்கிரதை கொலஸ்ட்ராலாக இருக்கலாம்

மூலம் மற்றும் மலச்சிக்கலை நீக்கும் கருணைக் கிழங்கு

நமது உடலில்  மூலச்சூடு, எரிச்சல் இருந்தாலும் அதை சரி செய்து, மலச்சிக்கலை சரிசெய்யும் பண்பு கொண்டது கருணைக் கிழங்கு. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் மூல நோய்க்கு கருணைக் கிழங்கு லேகியம் பிரசித்தி பெற்றது.

காய்ச்சல் குணமாகும்

கருணைக்கிழங்கில் இருக்கும் அற்புத நன்மைகள், காய்ச்சலை போக்கும் தன்மை கொண்டவை

வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும் கருணைக் கிழங்கு

 பெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் வெள்ளைப்படுதலை போக்கும் தன்மையைக் கொண்டது கருணைக்கிழங்கு. 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இந்த வைட்டமின் குறைபாட்டால் முடி உதிர்வு கட்டாயம் ஏற்படும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ  

Trending News