Home Remedies For Period Pain: மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வலி ஏற்படுவது பொதுவானது. சிலருக்கு இது மிதமான வலியாக இருக்கும், சிலருக்கு தாங்க முடியாத அளவிற்கு தீவிர வலி இருக்கும். சிலர் இந்த மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் பெற வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இவற்றால் சில பக்க விளைவுகளும் ஏற்படக்கூடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாதவிடாய் வலிக்கான வீட்டு வைத்தியங்கள்


மாதவிடாய் வலியை குறைக்க பல வீட்டு வைத்தியங்கள் நமக்கு உதவும். நம் வீட்டின் சமையலறையில் இருக்கும் பல பொருட்களே இந்த வலிக்கு நிவாரணம் அளிக்கும் ஆற்றல் கொண்டவையாக உள்ளன. இப்படிப்பட்ட நிவாரணங்கள் குறித்து IANS -க்கு ஊட்டச்சத்து நிபுணர் அளித்த தகவல்களை பற்றி இங்கே காணலாம்.


'Padman' படம் மூலம் கிடைத்த விழிப்புணர்வு


2018 ஆம் ஆண்டில், பேட்மேன் என்ற பாலிவுட் திரைப்படம் வெளியானது. இதில் அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே மற்றும் சோனம் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். மிக முக்கியமான ஒரு விஷயம் குறித்த விழிப்புணர்வை அளித்ததற்காக இந்த படம் மிகவும் பிரபலமானது. நிஜ கதையை சினிமா வடிவில் கிட்டத்தட்ட அனைத்து வயதினரும் வகுப்பினரும் பார்த்தனர். 


மாதவிடாய் என்பது இன்றைய காலத்தில் மறைக்கப்பட்ட வேண்டிய அல்லது விவாதிக்கப்படக்கூடாத விஷயமாக கருதப்படுவதில்லை. இது மிகவும் நல்ல ஒரு முன்னேற்றமாகும். மாதவிடாய் சுழற்சி (Menstrual Cycle) பற்றி வெளிப்படையாக விவாதிக்கப்படுகிறது. இது அவசியம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். பெண்கள் ஒவ்வொரு மாதமும் இந்த வலியை அனுபவிக்கிறார்கள். ஆகையால் இதை பற்றிய விழிப்புணர்வும் சரியான புரிதலும் மிக அவசியமாகும். 


Period Cramps: மாதவிடாய் பிடிப்புகள் ஏன் ஏற்படுகின்றன?


மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது? சுமார் 28 நாள் சுழற்சியில் ஏற்படும் வலியிலிருந்து விடுபடுவது எப்படி? மாதவிடாய் சுழற்சியின் போது, ​​உங்கள் கருப்பையின் உள்ளே இருந்து இரத்தம் மற்றும் திசுக்கள் பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். ஒவ்வொரு மாதமும் நடக்கும் இந்த செயல்பாட்டில், பெரும்பாலான பெண்கள் கடுமையான வலியை அனுபவிக்க வேண்டி வருகிறது. இரத்தப்போக்கு, வலி ஆகியவற்றின் காரணமாக பெண்கள் பல்வேறு வகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். பலர் இந்த நேரத்தில் கடுமையான பலவீனத்தை உணர்கிறார்கள்.


மேலும் படிக்க | சப்பாத்தியை சூப்பர்புட் ஆக மாற்ற.... இந்த பொருட்களை கோதுமை மாவில் சேர்க்கவும்


மாதவிடாய் வலி குறைய உதவும் வீட்டு வைத்தியங்கள்:


ஐஏஎன்எஸ் ஊட்டச்சத்து நிபுணர் ஷில்பா மித்தலிடம் பேசியது. மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் பெற என்ன சாப்பிட வேண்டும் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் ஷில்பா மித்தல், "மாதவிடாய் வலிக்கு என்ன சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும் என்று பல பெண்கள் அடிக்கடி என்னிடம் கேட்கிறார்கள். இவர்களுக்கு சமையலறையில் இருக்கும் பல பொருட்களே நிவாரணம் அளிக்கும்.” என்று கூறினார். 


“பசு நெய் இந்த வலியை நன்றாக குறைக்கும். தயிர், ஜவ்வரிசி கிச்சடி ஆகியவையும் மாதவிடாய் வலிக்கு நிவாரணம் அளிக்கும்.  ஜெவ்வரிசி கஞ்சியையும் இதற்கு உட்கொள்ளலாம். ஜவ்வரிசி கஞ்சி செய்ய, அதை 2 முதல் 3 மணி நேரம் ஊறவைத்து, பின் கொதிக்க வைத்து, அதனுடன் சீரகம், உப்பு மற்றும் எலுமிச்சை சேர்த்து உட்கொள்ளலாம். இதன் மூலம் மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். இது தவிர, நெய் மற்றும் சீரகப் பொடியை ஒன்றாக கலந்து சாப்பிடுவதும் நிவாரணம் தரும்.” என்று ஷில்பா மித்தல் தெரிவித்துள்ளார்.


மாதவிடாய் வருவதற்கு முன் முடிந்தவரை சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ளுமாறு ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைக்கிறார். துரித உணவை தவிர்த்தால் நல்லது என அவர் கூறுகிறார். புரதம் அதிகம் உள்ள உணவுகளையும் உட்கொள்வது நல்லது. 


மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பலவீனத்தை தவிர்க்க, காய்கறிகள் கலந்த பராந்தா, பனீர், பருப்பு வகைகள், பால் மற்றும் தயிர் சாப்பிட ஷில்பா மித்தல் அறிவுறுத்தியுள்ளார். அசைவம் சாப்பிடுபவராக இருந்தால், முட்டை, கோழிக்கறி, மீன் சாப்பிடவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நெய், ஆளிவிதை, பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் சியா விதைகளும் மாதவிடாய் காலத்தில் பலத்தை அதிகரிக்கவும், வலியை குறைக்கவும் இவை சிறந்தவையாக கருதப்படுகின்றன. 


நாம் உன்ணும் உணவும், உண்ணும் முறையும் சரியாக இருந்தால், மாதவிடாய் காலத்து வலியை பெரிய அளவில் கட்டுப்படுத்தலாம். சத்தான ஆரோக்கியமான உணவை 3-4 மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிட வேண்டியது அவசியம். 


பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.


மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை எரித்து... மாரடைப்பை தடுக்கும் ஆற்றல் கொண்ட பழங்கள்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ