பைல்ஸ் நோயாளிகளே உஷார்! குளிர்காலத்தில் இது அதிகரிக்கும், கட்டுப்படுத்த டிப்ஸ் இதோ
Piles Cure: குளிர்காலத்தில் வெப்பநிலை குறையும் போது, இரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். அதன் தீவிர அறிகுறிகளைத் தடுக்க, பைல்ஸ் நோயாளிகள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டும்.
பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வு: பைல்ஸ் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். இதை 'ஹேமோர்ஹாய்ட்ஸ்' அல்லது பொதுவான மொழியில் 'மூலநோய்' என்று அழைக்கிறோம். இதில் மலக்குடலைச் சுற்றியுள்ள இரத்த நாளங்கள் பெரிதாகி, கட்டிகளுக்கு காரணமாகின்றன. இது கடுமையான வலியை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அது தானாகவே சரியாகிவிடும. எனினும், ஆசனவாயைச் சுற்றி அரிப்பு, சிறுநீர் கழித்தல் மற்றும் மலம் கழித்தலில் தாங்க முடியாத வலி போன்ற கடுமையான அறிகுறிகளை நீங்கள் கண்டால், உடனடி சிகிச்சை தேவை என்பதை அறிந்துகொள்ளுங்கள். குளிர்காலத்தில் மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள்.
பைல்ஸில் இருந்து நிவாரணம் பெறுவது எப்படி?
குளிர்காலத்தில் வெப்பநிலை குறையும் போது, இரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். அதன் தீவிர அறிகுறிகளைத் தடுக்க, பைல்ஸ் நோயாளிகள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் இந்த பிரச்சனையிலிருந்து நிவாரணம் காண்பதற்கான சில வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம்.
நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்
நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது மட்டுமல்ல, குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இது பைல்ஸ் நோயில் உதவுகிறது. மூலநோயில் குடல் இயக்கத்தின் போது இரத்தப்போக்கு ஏற்படலாம் என்பதால் இது அவசியமாகும். மென்மையான குடல் இயக்கங்கள் மூலம் வலி, அசௌகரியம் மற்றும் இரத்தப்போக்கு குறைக்கப்படுகின்றன. இதற்கு தினசரி உணவில் நார்ச்சத்து சேர்க்க வேண்டியது மிக அவசியமாகும். நார்ச்சத்துள்ள உணவு, முழு தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உனவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இது தவிர, அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
மேலும் படிக்க | என்ன செஞ்சாலும் உடல் எடை குறையலையா... இந்த ‘மேஜிக்’ ஜூஸை ட்ரை பண்ணுங்க!
காரமான உணவைத் தவிர்க்கவும்
நீங்கள் பைல்ஸ் நோயாளியாக இருந்தால், காரமான உணவு உங்கள் மிகப்பெரிய எதிரி என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது செரிமானத்தைக் கெடுப்பது மட்டுமல்லாமல், குடல் இயக்கத்தில் சிக்கல்களையும் உருவாக்குகிறது. குறிப்பாக சிவப்பு மிளகாய் பொடியை முடிந்தவரை தவிர்க்கவும், ஏனெனில் அது நமது குடலில் ஒட்டிக்கொள்வதால் எரிச்சல் அதிகரிக்கிறது. காரமான மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை எவ்வளவு குறைவாக உணவில் சேர்த்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு பைல்ஸ் பிரச்சனை குறையும்.
தேவை என உணரும் போது உடனடியாக கழிவறைக்குச் செல்லுங்கள்
பல நேரங்களில் நாம் சில வேலைகளில் பிஸியாக இருக்கும்போது அல்லது பயணத்தின் போது சரியான நேரத்தில் சிறுநீர் கழிக்கவும் மலம் கழிக்கவும் முடிவதில்லை. சில நேரம் நாமே சில காரணங்களால் இவற்றை தாமதிக்கிறோம். இது மிகவும் மோசமான பழக்கமாகும். இயற்கையின் அழைப்பை நிறுத்துவது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக பைல்ஸ் உள்ளவர்களுக்கு, அவர்களின் மலக்குடல் தசைகள் தளர்ந்து, அசௌகரியத்தை அதிகரிக்கும். ஆகையால் இப்படி செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ