Thuthi leaves: ஆண்மையை அதிகரிக்கும் துத்தி இலை! எப்படி சாப்பிடுவது?
Thuthi leaves Benefits: வயிற்றுப்போக்கு முதல் ஆண்மை குறைபாடு, அழற்சியைப் போக்கும், மலக்கட்டு வரை பல பிரச்சனைக்கு துத்தி செடி பயனுள்ளதாக உள்ளது.
துத்தி செடியில் சிறிய மஞ்சள் பூக்கள் கொண்ட இதய வடிவ இலைகள் உள்ளன. இவை 2 மீட்டர் உயரம் வரை வளரு. இந்த துத்தி இலைகளில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. துத்தி மூலிகை பொதுவாக இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி இலை, அழற்சியைப் போக்கும், மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும். பண்டைய காலத்தில் நம் நம் முன்னோர்கள் இவற்றை அதிக அளவில் சாப்பிட்டு வந்துள்ளனர். இதுபோன்ற பல மூலிகைகளில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. துத்தி குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. இவை நமது தோலில் பட்டால் அரிப்பு ஏற்படும்.
மேலும் படிக்க | ஓமவல்லிக்குள் இருக்கும் நல்ல குணங்கள் என்ன? பல நோய்களுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி!
இந்த துத்தி இலைகளை பெரும்பாலும் தமிழ்நாட்டில் சமைத்து அல்லது பச்சையாக சாப்பிட்டு வருகின்றனர். இவற்றில் உள்ள பூ, தண்டு, விதைகள், பழங்கள், இலைகள், வேர்கள் என ஒவ்வொரு பகுதியும் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் களைச் செடியாக வளர்கின்றது. இவை பெரும்பாலும் கடற்கரைக்கு அருகில் மற்றும் சாலையோரங்களில் வளர்க்கப்படுகிறது. இது இந்தியாவின் வெப்பமான மிதமான பகுதிகளில் வளரும். துத்தி உலை மூலத்திற்கு அதிகம் பயன்படுகிறது. இந்த இலையை விளக்கெண்ணைய்யுடன் வதக்கி கொடுக்கலாம். இல்லை என்றால், இந்த இலைகளுடன் பருப்பு சேர்த்து சமையல் செய்து சாப்பிடலாம்.
துத்தி இலைகளின் நன்மைகள்
துத்தி இலைகளை பச்சையாக சாப்பிட்டால் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், ஈறுகளில் இரத்தப்போக்கு இருந்தால் இந்த துத்தி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் வாய் கொப்புளிக்கவும் . வெள்ளை படுதல் குணமாக துத்தி இலைகளை நெய்யில் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். 40-120 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை முற்றிலும் குணமாகும். ரத்த வாந்தி பிரச்சனை இருந்தால் துத்தி இலை சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
துத்தி செடியின் இதர நன்மைகள்
துத்தி செடியின் சாறு மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்தது. மேலும் துத்தி பூக்களை உலர்த்தி, இரவில் மட்டும் குடித்துவர உடல்சூடு குணமாகும். துத்தி இலைகளை வலியுள்ள இடத்தில் ஒற்றடம் கொடுத்தால் உடனே உடல்வலி குணமாகும். மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு விந்து மற்றும் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க துத்திப் பூக்கள் உதவும். ஆண்கள் பலருக்கு விந்து நீர்த்து போய், உயிரணுக்கள் குறைந்து குழந்தை பாக்கியம் ஏற்படாமல் போகிறது. இந்த பிரச்சனைக்கு துத்தி செடி பயனளிக்கிறது. அதே போல இது பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் நரம்புகளை வலுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.
முகப்பரு பிரச்சனை, தோல் வியாதிகள் போன்றவற்றிக்கும் இந்த துத்தி இலைகள் பயன் தருகிறது. ஒரு சிலருக்கு தோலில் படர்தாமரை, கருமேகம் போன்ற தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. இவர்கள் துத்தி விதைகளை பொடி ஆக்கி உடம்பில் தடவினால் கருமேகம், படர்தாமரை நீங்கும். அதே போல அஜீரணம், வயிற்று போக்கு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் துத்தி இலைகளை சாப்பிட்டு வந்தால், அஜீரணத்தால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு குணமாகும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஒல்லி பெல்லி வேணுமா? எடை குறையணுமா? வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க போதும்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ