மாதுளையை ஜூஸாக குடிப்பதால் இவ்வளவு நன்மைகள்
மாதுளையை ஜூஸாக குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பழங்கள் தினம்தோறும் சாப்பிடுவது என்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. மருத்துவர்கள் கூட பழங்களை அதிகம் சாப்பிடுமாறு அறிவுறுத்துவதைக் கேட்டிருப்போம். பொதுவாக எல்லா பழங்களும் நல்லது என்றாலும், ஒரு சில பழங்கள் மறற பழங்களை விட நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அவற்றில் ஒன்று மாதுளை. இதுவும் மிகவும் சுவையாக இருக்கும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதனை தினம்தோறும் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் உள்ளன. ஒரு சில நன்மைகளை நாம் ஏற்கனவே அறிந்து வைத்திருப்போம். ஆனால், எதையும் அதிகமாக உட்கொள்வது உடலுக்கு நல்லதல்ல.
மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரிந்து வைத்திருக்கும் பலருக்கும், பழமாக சாப்பிடுவதற்கும், ஜூஸாக குடிப்பதற்கும் என்ன வித்தியாசம்? என்ற கேள்வி இருக்கும். அது குறித்த தகவலை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | Bitter Gourd: அளவிற்கு அதிகமான பாகற்காய் கல்லீரலை பாதிக்கும்
1) இதயத்தைத் தூண்டுகிறது
மாதுளை பொட்டாசியத்தின் பொக்கிஷம் என்றே சொல்லலாம். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதயத்தைப் பாதுகாக்க மாதுளை ஜூஸைத் தொடர்ந்து குடியுங்கள்.
2) புற்றுநோய் ஆபத்து குறைவு
மாதுளை சாற்றில் அந்தோசயனின் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இந்த ஆக்ஸிஜனேற்றத்தை உட்கொள்வது சில புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கலாம். எனவே, தினமும் மாதுளை சாறு உட்கொள்வது மூலம் உங்கள் ஆரோக்கியத்தில் பல அதிசயங்களைச் நிகழும்.
3) நீங்கள் நீரேற்றமாக உணர்தல்
முடிந்தவரை உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது முக்கியம். அதாவது உடலுக்கு தேவையான தண்ணீரை ஏதாவதொரு வழியில் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் குடிக்க உங்களுக்கு சங்கடமாக இருந்தால் மாதுளை உள்ளிட்ட பழங்களை ஜூஸாக்கி குடிக்கலாம். இதன்மூலம் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பது மட்டுமல்லாமல், உங்களை நீங்கள் நீரேற்றமாகவும் வைத்திருக்கலாம்.
4) அழற்சி சரியாகும்
மாதுளை சாறு அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. இது வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. மாதுளை சாறு குடிப்பது நாள்பட்ட அழற்சிகளை சரி செய்ய உதவுகிறது.
5) நினைவாற்றலை மேம்படுத்தும்
வயதானவர்கள் நினைவிழப்பது பொதுவான அம்சம். அவர்களுக்கு மாதுளை ஜூஸைக் கொடுத்தால் நினைவாற்றல் மேம்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. புத்துணர்ச்சியாகவும் இருப்பார்கள்.
( பொறுப்பு துறப்பு; இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. Zee எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது)
மேலும் படிக்க | Skin Care Tips: உடனடியாக முகத்தை பொலிவாகும் ஒரு பொக்கிஷம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ