எச்சரிக்கை! கல்லீரலை காலி செய்யும் மிக ஆபத்தான ‘சில’ உணவுகள்...!
Foods That Damages Liver: கல்லீரல் பிரச்சனைகளுக்கு மது அருந்துவது தான் மிக முக்கிய காரணம் என்பது உண்மைதான். ஆனால் கல்லீரல் பிரச்சனைகளை உண்டாக்கும் வேறு பல விஷயங்களும் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா..!!
Foods That Damages Liver: கல்லீரல் நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு. இது நம் உடலில் பல முக்கிய செயல்பாடுகளை செய்கிறது. கல்லீரல் என்பது செரிமான அமைப்பின் ஒரு முக்கியமான உறுப்பு ஆகும். உடலில் புரதங்கள், கொலஸ்ட்ரால் மற்றும் பித்த உற்பத்தி முதல் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சேமித்து வைப்பது வரை பல முக்கிய செயல்பாடுகளைச் செய்யும் ஆற்றல் மிக்க உறுப்பு கல்லீரல் ஆகும். இதனால்தான் உடலை முழுமையாக ஆரோக்கியமாக வைத்திருக்க, கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். எனவே, கல்லீரலைப் பற்றி கவனக்குறைவாக இருப்பது அதன் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
கல்லீரல் பிரச்சனைகளுக்கு மது அருந்துவது தான் மிக முக்கிய காரணம் என்பது உண்மைதான். ஆனால் கல்லீரல் பிரச்சனைகளை உண்டாக்கும் வேறு பல விஷயங்களும் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா. இதனால் கல்லீரல் மோசமாக பாதிக்கப்படலாம். இன்று, இந்த கட்டுரையின் மூலம், கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் (Health Tips) அத்தகைய உணவுப் பொருட்களைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். அந்த விஷயங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்...!
கல்லீரலை சேதப்படுத்தும் சில உணவுகள்
1. சிவப்பு இறைச்சி
சிவப்பு இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு நிறைந்துள்ளது. இது நமது கல்லீரலின் வீக்கத்தை அதிகரிக்கிறது. இதனால் நமது கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது நமது இதய ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
2. பதப்படுத்தப்பட்ட உணவு
நீண்டநாள் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பேக் செய்யப்பட்ட உணவுகள் பல வழிகளில் பதப்படுத்தப்படுகின்றன. அத்தகைய உணவு உங்கள் கல்லீரலுக்கும் ஆபத்தாக முடியும். அத்தகைய சூழ்நிலையில், சிப்ஸ், ஸ்நாக்ஸ் போன்ற பேக் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது நமது கல்லீரல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கிறது.
மேலும் படிக்க | இரத்தசோகை ஏற்பட்டால் வெளியும் தெரியும் அறிகுறிகள்! இரும்புச்சத்து குறைந்தா பேராபத்து
3. குளிர்பானங்கள்
குளிர்பானங்களில் மிக அதிக அளவு சர்க்கரை காணப்படுகிறது. இதை குடிப்பதால் நமது எடையும் கூடுகிறது. இந்த பானங்களை தினமும் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளும் வரலாம். உடல் பருமன் அதிகரிப்பது நமது கல்லீரலின் ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கிறது. அதோடு அதில் சேர்க்கப்படும் சோடாவும் கல்லீரலை பாதிக்கும். அட்ஜ்ஹோடு, எலும்புகளில் இருந்து கால்ஷியத்தையும் உறிஞ்சி விடும்.
4. அதிக உப்பு
பலர் தங்கள் உணவில் அதிக அளவு உப்பை உட்கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒருவரா... அது உங்கள் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதிக அளவு உப்பு உட்கொள்வது உங்கள் கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே, உணவில் அதிக உப்பை உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.
5. மைதா மாவில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகள்
கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க, மைதா மாவில் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடாமல் இருப்பது அவசியம். பீட்சா, பாஸ்தா, மோமோஸ் மற்றும் ரொட்டி போன்ற சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகள் நமது கல்லீரலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது தவிர, அதிக அளவு கொழுப்பு உள்ள மற்ற உணவுகள் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும்.
6. ஊட்டசத்து மாத்திரைகள்
இது தவிர அளவிற்கு அதிகமாக மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொள்வதும் நமது கல்லீரலை சேதப்படுத்தும். அதுமட்டுமல்ல, கல்லீரல் செயலிழப்புக்கும் மருந்துகள் காரணமாகிறது. ஆரோக்கியத்திற்கு நல்லது என நாம் எடுத்துக் கொள்ளும் வைட்டமின் மாத்திரைகள் அளவிற்கு அதிகமானால், கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலானவை. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | வயிறு தொடர்பான அனைத்துக் கோளாறுகளையும் போக்கும் மணத்தக்காளிக் கீரையின் அற்புதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ