சுலபமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் கற்றாழை ஒரு மருத்துவ தாவரம் ஆகும். கற்றாழை நமது ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும், கூந்தலுக்கும் பலவிதமான நன்மைகளை வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கற்றாழையை பல்வேறு விதங்களில் பயன்படுத்தலாம். கற்றாழையின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி தெரிந்து அதனை பயன்படுத்தினால், ஆரோக்கியத்தை அற்புதமாக மேம்படுத்தலாம்.


கற்றாழையை, சாறு எடுத்து பயன்படுத்துவது ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்துகிறது. கற்றாழையின் சாறு, வைட்டமின் சி நிறைந்தது. 


நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத வைட்டமின் சி, ஒரு இயற்கையான ஆக்ஸிஜனேற்றியாகும். உடல் வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவும் கற்றாழையை ஜூஸாக பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகள் இவை. 


மேலும் படிக்க | 10 நிமிடங்களில் ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும் அற்புத ஜூஸ்


பல ஆயுர்வேத தயாரிப்புகளில் கற்றாழையின் சதையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கற்றாழை சாறு உள்ளது.


கற்றாழை அதன் குணப்படுத்தும் பண்புகளால் ஆயுர்வேதத்தில் ஒரு மருத்துவ தாவரமாக பரவலாக அறியப்படுவதுடன், பல நூற்றாண்டுகளாக  பயன்படுத்தப்படுகிறது.


 இதிலுள்ள அபார அத்தியாவசிய ஊட்டச்சத்து கலவையின் 5 அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்.



மலமிளக்கும் கற்றாழைச் சாறு


மலச்சிக்கல் உள்ளவர்கள் கற்றாழை சாற்றை இயற்கையான மலமிளக்கியாக பயன்படுத்தலாம். தாவரத்தின் வெளிப்புறப் பகுதியில் ஆந்த்ராகுவினோன்கள் எனப்படும் சேர்மங்கள் உள்ளன, மேலும் இவை மலமிளக்கும் தன்மையைக் கொண்டவை. இருப்பினும், இந்த பிரச்சனையிலிருந்து விடுபட, கற்றாழை சாற்றை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுகவும்.


வைட்டமின் சி செறிவுள்ள கற்றாழை


கற்றாழை சாறு வைட்டமின் சி இன் சிறந்த மூலமாகும். இந்த வைட்டமின் ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது, ஏனெனில் இது இயற்கையான ஆக்ஸிஜனேற்றம் மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. வைட்டமின் சி ஒரு நபரின் இருதய நோய் அபாயத்தைக் குறைப்பதில் இருந்து நோயெதிர்ப்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்துவது வரை பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது.


போதுமான வைட்டமின் சி பெறுவது என்பது, தாவர அடிப்படையிலான உணவுகளில் இருந்து இரும்புச்சத்தை உறிஞ்சும் உடலின் திறனை அதிகரிக்கிறது. ஆரஞ்சு, பச்சை மிளகாய், ப்ரோக்கோலி, திராட்சைப்பழம் மற்றும் தக்காளி சாறு போன்ற உணவுகளில் இயற்கையாகவே வைட்டமின் சி உள்ளது.


மேலும் படிக்க | விளாம்பழ ஜூஸ் குடிச்சா நீரிழிவு நோயாளிகளுக்கு பிரச்சனையா


நீர்ச்சத்து அதிகமாக உள்ள கற்றாழை ஜூஸ்


உடலுக்கு தேவையான அளவு நீர்ச்சத்தை பராமரிக்கும் கற்றாழை, ஆரோக்கியத்திற்கு அவசியமானதாகும். அதிலும், இந்த கோடைக்காலத்தில் நீர்ச்சத்து குறைபாடு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், கற்றாழை ஜூஸ் குடிப்பது நன்மை பயக்கும். அதே நேரத்தில், கற்றாழை சாறு சர்க்கரை பானங்கள் மற்றும் பழச்சாறுகளுக்கு குறைந்த கலோரி மாற்றாகவும் இருக்கிறது.  


வயிற்றுப் புண்களைத் தடுக்கும் 
வயிற்றுப் புண்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் படி, கற்றாழை சாறு வயிற்றுப் புண்கள் ஏற்படுவதைக் குறைக்கிறது. அதுமட்டுமல்ல, கற்றாழையை உட்கொள்வதால் செரிமானம் மேம்படுகிறது. கற்றாழை சாற்றில் உள்ள வைட்டமின் சி போன்ற பல அழற்சி எதிர்ப்பு கலவைகள், ஜீரண சக்தியை மேம்படுத்துவதில் பங்களிக்கிறது. 


மேலும் படிக்க | நோய்களின் அபாயத்தைத் தணிக்கும் சூப்பர் ஜூஸ்கள்


இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் கற்றாழை


இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான சில ஆய்வுகள், ப்ரீடியாபயாட்டீஸ் மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளிடையே இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் கற்றாழை 'சில சாத்தியமான நன்மைகளை' கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றன. கற்றாழை சாற்றை குடிப்பது, வெரும் வயிற்றில் இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த உதவியது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.


இருப்பினும், நீரிழிவு நோயில் கற்றாழை சாற்றின் விளைவுகளை உறுதியாக நிறுவுவதற்கு பெரிய ஆய்வுகள் தேவைப்படும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | பாலியல் பிரச்சனைக்கு வயாகரா தேவையில்லை; மாதுளையே போதும்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR