மாரடைப்பு, பக்கவாதம் பயம் இனி வேண்டாம், உடனே 3 பரிசோதனைகளை செஞ்சுக்கோங்க
Heart health | மாரடைப்பு, பக்கவாத பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்கூட்டியே இந்த 3 பரிசோதனைகளை செய்து கொண்டால் அதில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
Heart health News Tamil | வாழ்க்கை முறை மோசமானதால் இதயநோய், பக்கவாதம் என்பன இப்போது சர்வசாதாரணமாக மக்கள் பாதிக்கும் நோய்களாவிட்டன. இது குறித்து போதுமான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், மோசமான வாழ்க்கை முறையை கைவிடாத முடியாதபடி சிக்குண்டு கிடக்கின்றன. பொருளாதார நெருக்கடி காரணமாக வேலை மீது அக்கறை செலுத்தும் பெரும்பாலான இளம் தலைமுறை உடல் மீது போதிய அக்கறை செலுத்துவதில்லை. தினமும் மூன்று வேளை சாப்பிடும் உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதுவே இதய நோய் மற்றும் பக்கவாதம் பாதிப்பு அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக அடிக்கோடிட்டு காட்டப்படுகின்றன. அதனால், இந்த பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால் உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் முன்று முக்கிய உடல் பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியம்.
இதய ஆரோக்கியத்திற்கான 3 சோதனைகள்
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் எல்டிஎல், எல்பி மற்றும் சிஆர்பி ஆகிய மூன்று சோதனைகளையும் செய்து கொள்வது அவசியம். இந்த மூன்று டெஸ்டுகளும் கொழுப்பு, லிப்போபுரோட்டீன், சி ரியாக்டிவ் புரதம் ஆகியவற்றின் அளவுகளை தெரிந்து கொள்வதற்கானதாகும். இந்த அளவுகளை வைத்து மாரடைப்பு, பக்கவாதம் குறித்த முன்னெச்சரிக்கைகளை மருத்துவர்கள் சொல்லிவிட முடியும். அதனால், தயங்காமல் அருகில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு சென்று இந்த பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | கெட்ட கொழுப்புகள் குறையும்... இந்த 7 சட்னிகளை உணவில் சேருங்கள்!
கொழுப்பு பிரச்சனை
கொழுப்பு பிரச்சனை என்பது மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையோடு நேரடியாக தொடர்பு கொண்டது. உணவு பழக்கம் சரியாக இல்லை என்றால், ஆரோக்கியமான, நார்ச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடாமல் எண்ணெய் கொழுப்புகள் அடங்கிய உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கி சாப்பிடும்போது, பிஸ்கட் உள்ளிட்ட நொறுக்குத்தீனிகளை முழுநேர உணவாக மாற்றிக் கொள்ளும்போது உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரிக்கின்றன. இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு பக்கவாதம் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கு வாழ்க்கையை பறிகொடுத்துவிடுகின்றனர்.
வாழ்க்கை முறை மாற்றம்
இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டும் என்றால், உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால் தினமும் ஆரோக்கியமான உணவுகளை அளவோடு மூன்று வேளையும் சாப்பிடுங்கள். சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். காய்கறி, பழங்கள், கீரைகள் தினமும் உணவில் இருப்பதை உறுதி செய்யுங்கள். சாலையோர உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், நொறுக்குத்தீனிகளை அறவே புறம் தள்ளிவிடுங்கள். உங்கள் உடல் தான் முதன்மையானது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதை மனதில் கொண்டு உடல் நலனில் அக்கறை செலுத்தினால் மாரடைப்பு, பக்கவாத பாதிப்புகளில் இருந்து தற்காத்து மகிழ்ச்சியாக வாழலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நுரையீரல் அழுக்குகளை சுத்தம் செய்வது எப்படி? சரியான ஜூஸ் குடிச்சா போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ