COVID vaccine: புரதத்தை அடிப்படையாகக் கொண்ட தடுப்பூசியைப் பற்றி தெரியுமா?
கோவிட்-19 வைரஸில் உள்ள ஐந்து புரதங்கள் ரத்த நாளங்களை சேதப்படுத்தி, மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும்
கொரோனா வைரஸ் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கோவிட்-19 நோயை ஏற்படுத்தும் வைரஸில் உள்ள ஐந்து புரதங்கள் ரத்த நாளங்களை சேதப்படுத்தி, மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும் என்பது கவலையளிக்கும் விஷயம்.
கோவிட் தொற்றுநோய் ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து உலகை பாதுகாக்க பல்வேறு பரிசோதனைகளும், ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு புதிய சோதனையில், முற்றிலும் புரதத்தை அடிப்படையாகக் கொண்ட COVID-19 தடுப்பூசியும் பரிசோதனையில் உள்ளது. இந்த பரிசோதனை வெற்றியடைந்தால் கோவிட் நோயை எதிர்கொள்வது மிகவும் சுலபமாகிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தயாரிப்பதற்கு மிகவும் சுலபமான மற்றும் குளிர்பதன வசதியில் வைத்து பாதுக்காக்கும் அவசியம் இல்லாத கோவிட்-19 க்கான புதிய புரத அடிப்படையிலான தடுப்பூசியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனையின் ஆராய்ச்சிக் குழு, இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
வழக்கமாக தற்போது புழக்கத்தில் இருக்கும் கோவிட் தடுப்பூசிகள் குளிர்பதனத்தில் சேமிக்கப்படவேண்டும். அதோடு, அதிநவீன உற்பத்தித் திறன் தேவை என்பதால், கோவிடுக்கான தடுப்பூசிகளை போதுமான அளவு உற்பத்தி செய்வதும் விநியோகிப்பது கடினமாக இருக்கிறது. எனவே புரத அடிப்படையிலான கோவிட் தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
READ ALSO | பெண்களின் மரபணு கோளாறுகளின் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகள்
அதிலும், குறிப்பாக குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த புதிய மருந்து உற்பத்தியின் தாக்கம் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும். ஏனெனில் தடுப்பூசி விரயம் என்பது அதிகமாக இருக்கும் நிலையில், அதற்கான தீர்வாகவும் இந்த புதிய தடுப்பூசி இருக்கும்.
இந்த புதிய தடுப்பூசி வடிவமைப்பு, உலகளாவிய தடுப்பூசி இடைவெளிகளை நிரப்ப உதவும் என்றும் மற்ற நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளுக்குப் பயன்படுத்தலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியதாக PNAS சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய தடுப்பூசியை எலிகளிடம் பரிசோதித்து பார்த்தபோது, SARS-CoV-2, COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் அதன் மாறுபாடுகளுக்கு எதிராக வலுவான நோயெதிர்ப்பை வெளிப்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
தடுப்பூசி வெற்றிகரமாக உறைய வைக்கப்பட்டு உலர்த்தப்பட்டும் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் அவற்றின் திடநிலையை மாற்றியப்போதும் செயல்திறனை இழக்காமல் மீண்டும் தடுப்பூசி மருந்து கட்டமைக்கப்பட்டது.
இந்த புதிய மருந்து, அறை வெப்பநிலையில் குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு நிலையானதாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருக்கும் என்று அவர்கள் கூறினர். இந்த புதிய COVID-19 தடுப்பூசி இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது.
READ ALSO | உயிருக்கே ஆபத்து; மறந்து கூட இந்த உணவோடு இதை சேர்த்து சமைக்காதீங்க
அல்பாகாஸ் (alpacas) என்பதில் இருந்து பெறப்பட்ட ஆன்டிபாடிகள் (antibodies), நானோபாடிகள் (nanobodies) என அழைக்கப்படுகிறது, மேலும் இது மனித உயிரணுக்களுக்குள் நுழைய பயன்படுத்தும் வைரஸின் ஸ்பைக் புரதத்தின் ஒரு பகுதி, என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
"முழு ஸ்பைக் புரதத்தையும் அல்லது வைரஸின் பிற பகுதிகளையும் இணைக்க முடியும்" என்றும், "SARS-CoV-2 வகைகளுக்கான தடுப்பூசியை விரைவாகவும் எளிதாகவும் மாற்றலாம்" என்று ஆய்வை மேற்கொண்டவர்களின் ஒருவரான நோவாலியா பிஷேஷா கூறினார்.
எலிகள் மீதான சோதனைகளில், SARS-CoV-2 க்கு எதிராக தடுப்பூசி-வெளிப்படுத்தப்பட்ட வலுவான நோய் எதிர்ப்பு சக்தி, ஸ்பைக் புரத துண்டுக்கு எதிராக அதிக அளவு நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளை தூண்டுகிறது. இது வலுவான செல்லுலார் நோய் எதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்தியது, மற்ற நோயெதிர்ப்பு பாதுகாப்புகளை அணிதிரட்டும் டி ஹெல்பர் செல்களை தூண்டுவதாக, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ALSO READ | குளிர்காலத்திலும் சுறுசுறுப்பாக இருக்க எளிய குறிப்புகள்
தடுப்பூசி ஒரு புரோட்டீன் என்பதால், ஃபைசர்/பயோடெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் போன்ற மெசஞ்சர் ஆர்என்ஏ (messenger RNA) வைக் காட்டிலும், இது பெரிய அளவிலான உற்பத்திக்கு மிகவும் அதிகமாக உதவுகிறது என்று அவர்கள் கூறினர்.
"எம்ஆர்என்ஏ (mRNA) தடுப்பூசியை உருவாக்குவதற்கு எங்களுக்கு அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவம் தேவையில்லை" என்று ஆய்வு செய்தவர்களில் ஒருவரான திபால்ட் ஹார்மண்ட் கூறினார்.
புதிய தொழில்நுட்பம் உலகெங்கிலும் பல தளங்களில் தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியும். தற்போது ஆய்வாளர்கள் இந்த தடுப்பூசிக்கு காப்புரிமை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளனர். இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டால், கோவிட் தொற்றுநோய்க்கு எதிராக உலக மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கிடைப்பது உறுதி செய்யப்படும்.
ALSO READ | அதிக உடற்பயிற்சி மாரடைப்பை ஏற்படுத்துமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR