Fitness: குளிர்காலத்திலும் சுறுசுறுப்பாக இருக்க எளிய குறிப்புகள்

ஆண்டின் வெவ்வேறு பருவங்கள் மனதுக்கும், உடலுக்கும், நமது மனநிலைக்கும் தனித்துவமான பலன்களைத் தருகின்றன. குளிர் நாட்களில் உடற்பயிற்சி செய்வதற்கான உதவிக் குறிப்புகள்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 7, 2021, 11:57 AM IST
  • சீசனுக்கு ஏற்றாற்போல் மனநிலையும் மாறும்
  • குளிர்காலத்திலும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா?
  • குளிர்கால ஆரோக்கிய குறிப்புகள்
Fitness: குளிர்காலத்திலும் சுறுசுறுப்பாக இருக்க எளிய குறிப்புகள் title=

குளிர்காலத்தில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய சோம்பேறித்தனமாக இருக்கும். ஆனால், குளிர்காலத்திலும் உடலை நன்றாக பராமரிக்க உடற்பயிற்சி செய்வது அவசியம்.  

ஆண்டின் வெவ்வேறு பருவங்கள் மனதுக்கும், உடலுக்கும், நமது மனநிலைக்கும் தனித்துவமான பலன்களைத் தருகின்றன. குளிர்காலத்தில் எழுந்திருப்பது மிகவும் கடினமாக இருக்கும். அதிலும் படுக்கையில் இருந்து எழவே மனமில்லாமல் போகும் குளிர் நாட்களில் உடற்பயிற்சி செய்வது சிரமமாக இருக்கும். இருப்பினும், உடல் எடையை குறைத்து, உடலை சிறப்பாக பராமரிக்க சில குறிப்புகள் உங்களுக்காக...

கோடையில் உடற்பயிற்சி செய்வதை விட குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்வதால் அதிக கலோரிகளை எரிக்க முடியும். குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்யும்போது வியர்வை குறைவாக வரும், எளிதில் சோர்வு ஏற்படாது. 

Also Read | Corona AY.4.2 உருமாறிய வைரஸ் தமிழகத்தில் இல்லை - சுகாதாரத்துறை அமைச்சர் 
 
நடைபயிற்சி: குளிரில் உடற்பயிற்சியை விறுவிறுப்பான நடையுடன் தொடங்கினால் நன்றாக இருக்கும். சற்று நேரம் ஜாகிங் செய்யலாம் இவை உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கும் மற்றும் உங்கள் வரவிருக்கும் ஒர்க்அவுட் அமர்வுக்கு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உங்களை தயார்படுத்தும்.

ஜாகிங் அல்லது ஓட்டத்திற்குப் பிறகு நீங்கள் சில நிமிடங்களாவது, கை கால்களை நீட்டவும் அதேபோல உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் சில நிமிடங்களுக்கு கை கால்களை நீட்டுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர், இது உங்கள் தசைகளை வலுவாக்கும்.

சூரிய நமஸ்காரம்: சூரிய நமஸ்காரம் முழுமையான உடல் பயிற்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. எனவே அதை தவறாமல் செய்யவும். சுவாசப் பயிற்சியான பிராணயாமம், மனம் மற்றும் உடல் ஆகிய இரண்டிற்கும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கிறது. குளிர்காலத்தில் பிராணாயாமம் செய்வது, ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சனைகளை குறைக்கும்.

தியானம் செய்வது என்பது, குளிர்காலத்தில் நேர்மறையான ஆற்றலை உருவாக்கி, உடலை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். 

Also Read | சாப்பிட்ட பிறகு நடப்பது செரிமானத்திற்கு உதவுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News