High Cholesterol Control Tips: இன்றைய காலகட்டத்தில் பலருக்கு அதிக கொலஸ்ட்ராலால் பிரச்சனை உள்ளது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக இது பெரும்பாலும் ஏற்படுகின்றது. கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பாகும். உடல் செயல்பாட்டிற்கு கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. ஆனால், உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், அதாவது எல்டிஎல் அதிகரித்தால், இதய நோய் அபாயம் அதிகரிக்கின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆரோக்கியமற்ற உணவுகள், எண்ணெய் அதிகமாக உள்ள உணவுகள் ஆகியவற்றால் நரம்புகளில் LDL கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. உணவில் ஆரோக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்தால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ் கூறியுள்ளார். உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க பெரிதும் உதவும் புரதச்சத்து நிறைந்த உணவுகளைப் பற்றி இங்கே காணலாம். 


1. கொழுப்பு மீன்கள்


சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் (Fatty Fish) புரதச்சத்து மட்டுமல்லாமல், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களும் அதிகமாக உள்ளன. ஒமேகா -3 வீக்கம் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கும். இது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். கொழுப்பு நிறைந்த மீன்களை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவை சமப்படுத்தவும், புரத உட்கொள்ளலை அதிகரிக்கவும் உதவுகின்றது.


2. பருப்பு வகைகள்


பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, ராஜ்மா ஆகியவற்றில் புரதச்சத்தும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளன. இவற்றில் உள்ள நார்ச்சத்து, குறிப்பாக கரையக்கூடிய நார்ச்சத்து, இரத்த அடுக்கில் உள்ள கொழுப்பின் உறிஞ்சுதலைக் குறைக்க உதவுகிறது. பருப்பு வகைகளில் (Pulses) நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக உள்ளன. அவை விலங்கு புரதத்திற்கு ஆரோக்கியமான மாற்றாக அமைகின்றன. இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு, ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.


மேலும் படிக்க | ஜிம் வேண்டாம், டயட் வேண்டாம்: சட்டுனு எடை குறைக்க இதை பண்ணுங்க போதும்


3. சோயா


சோயாபீன்ஸில் (Soya) அதிக அளவில் புரதச்சத்து உள்ளது. இது எல்டிஎல் அளவைக் குறைக்கும். சோயா ஒரு சிறந்த தாவர அடிப்படையிலான புரதமாகும். இதில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளது. ஒவ்வொரு நாளும் சுமார் 25 கிராம் சோயா புரதத்தை உட்கொள்வதன் மூலம், கெட்ட கொழுப்பை 4-6% குறைக்கலாம் என்று பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. 


4. உலர் பழங்கள், விதைகள்


பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் சியா விதைகள் போன்ற உலர் பழங்களும் (Dry Fruits) விதைகளும் (Seeds) ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. இந்த உணவுகள் கொழுப்பைக் குறைக்கும் பணியை நன்றாக செய்கின்றன. அவற்றில் நிறைவுறா கொழுப்புகள் உள்ளன. இது நல்ல கொழுப்பை அதிகரித்து எல்டிஎல் -ஐ குறைக்க உதவுகிறது. தினமும் ஒரு கையளவு நட்ஸ் சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கும் என கூறப்படுகின்றது.


5. கினோவா


கினோவாவில் (Quinoa) அனைத்து 9 அத்தியாவசிய அமினோ அமிலங்களும் உள்ளன. இது தாவர அடிப்படையிலான புரதமாகும். இதில் நார்ச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. இது எல்டிஎல் அளவைக் குறைத்து கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது. குயினோவா பெரும்பாலும் அரிசிக்கு மாற்றாகக் காணப்படுகிறது.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | நீரிழிவு நோய் முதல் எடை இழப்பு வரை: அத்திப்பழத்தின் அட்டகாசமான நன்மைகளின் லிஸ்ட் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ