உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க, மற்ற ஊட்டச்சத்துக்களுடன் புரதமும் தேவைப்படுகிறது. உடல் பருமன் குறைய புரதம் மிக அவசியம். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் புரதச் சத்து தசைகளையும் எலும்புகளையும் பலப்படுத்தி திசுக்களை  சீர் செய்கிறது. புரத சத்து குறைபாடு இருந்தால், சோர்வு, பலவீனம், முடி உதிர்தல், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, அதிகப்படியான பசி, வறண்ட சருமம் போன்ற அறிகுறிகள் உடலில் தோன்ற ஆரம்பிக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக அசைவ உணவுகள் புரதத்தின் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. ஆனால், பல சைவ உணவுகளும் புரத சத்து நிறைந்தவை.  அதில் முதன்மையானது சோயா உணவுகள். சைவ உணவு உண்பவர்கள் தங்கள் உணவில் சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபு பன்னீரை   சாப்பிடுவதன் மூலம் பலன் அடையலாம்.


டோஃபு  பன்னீர் என்றால் என்ன


டோஃபு சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதன் பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக இது உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. 


டோஃபுவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்


சோயா புரத சத்து நிறைந்த சிறந்த சைவ உணவு. 100 கிராம் சோயாவில் 36 கிராம் புரதம் உள்ளது. பிற பருப்பு வகைகளில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது. புரதம் மட்டுமல்லாது, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற சத்துக்களும் இருப்பதால், சைவ உணவு உண்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.  டோஃபுவில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்களைப் பற்றி பேசுகையில், சுமார் 7 mg சோடியம், 121 mg பொட்டாசியம் மற்றும் 0.3 கிராம் நார்ச்சத்து 100 கிராம் டோஃபுவில் காணப்படுகிறது. இதனுடன், சுமார் 35 சதவீதம் கால்சியம், 30 சதவீதம் இரும்பு, 7 சதவீதம் மெக்னீசியம் ஆகியவை இதில் உள்ளன.


மேலும் படிக்க | சிறுநீரகத்தில் பிரச்சனை இருப்பதை உணர்த்தும்.... சில அறிகுறிகள் இவை தான்... அலட்சியம் செய்யாதீங்க


டோஃபு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


1.  டோஃபுவை தொடர்ந்து உட்கொள்வது இதயத்திற்கு நன்மை பயக்கும். இது தமனிளில் சேர்ந்துள்ள அடைப்பை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.


2. உடல் எடையை கட்டுப்படுத்த டோஃபு பன்னீர் சிறந்த தேர்வு. புரத சத்து நிறைந்துள்ள டோஃபு வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பை கரைக்க உதவுகிறது.


3. புற்றுநோய் போன்ற கொடிய நோய்களைத் தடுப்பதிலும் டோஃபு பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைவதை தடுக்கும் ஆற்றல் கொண்டது.


கொண்டைக்கடலை


சோயா உணவிற்கு அடுத்த படியாக, வெள்ளை கொண்டைக்கடலையும் புரதத்தின் நல்ல மூலமாகும். 100 கிராம் கொண்டைக்கடலையில், 19 கிராம் புரதம் கிடைக்கும். மேலும் இதில் இரும்புச்சத்து, கரையும்  நார்ச்சத்துக்களுடன், மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமங்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | தினம் 2 நிமிடம் போதும்... 30 நாட்களில் தொப்பையை கரைக்கும் பிளாங்க் பயிற்சி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ