ஆஸ்டியோபோரோசிஸ் முதல் பாலியல் பிரச்சனை வரை... வியக்க வைக்கும் பூசணி விதை..!
Medicinal Properties of Pumpkin Seeds: பூசணி விதையில் எக்கச்சக்க, ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் கொட்டி கிடக்கின்றன. அவற்றின் அருமை நம்மில் பலருக்கு தெரிவதில்லை. சமையலுக்கு பயன்படுத்தும் போது, பூசணிக்காயின் நறுக்கிய உடனேயே, அதன் விதைகளை அகற்றி தூக்கி எறிந்து விடுவோம்.
பூசணி விதையில் எக்கச்சக்க, ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் கொட்டி கிடக்கின்றன. அவற்றின் அருமை நம்மில் பலருக்கு தெரிவதில்லை. சமையலுக்கு பயன்படுத்தும் போது, பூசணிக்காயின் நறுக்கிய உடனேயே, அதன் விதைகளை அகற்றி தூக்கி எறிந்து விடுவோம். ஆனால், அதன் மருத்துவ குணங்களை அறிந்த, அமெரிக்கா ஐரோப்பா, உள்ளிட்ட பல நாடுகள், இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பூசணி விதையில் உள்ள சத்துக்கள்
பூசணி விதையில் புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் ஈ ஆகியவற்றுடன், மாங்கனிஸ், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம் உள்ளிட்ட அத்தியாவசிய தாதுக்கள் அதிகம் உள்ளன. 100 கிராம் பூசணி விதையில், 574 கலோரிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 30 கிராம் என்ற அளவிற்கு புரதம் உள்ளது. மேலும் இதில் இதயத்தை பாதுகாக்கும் ஆரோக்கியமான கொழுப்புகளும் உள்ளது.
பூசணி விதையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
எலும்புகளை வலுப்படுத்தும் பூசணி விதை
பூசணி விதை, எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது. இதில் உள்ள கால்சியம் மெக்னீசியம் பாஸ்பரஸ், எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவி அவற்றை வலிமையாக்குகின்றன. எலும்பு நோய் வராமல் தடுப்பதில், பூசணி விதை சேர்த்த பால் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் மூட்டு வலி, முழங்கால் வீக்கம் போன்ற பிரச்சனைகள் இருந்தும் விடுபடலாம். மேலும் எலும்பு முறிவு ஆஸ்டியோபரோசிஸ் போன்ற நோய்களின் அபாயம் பெருமளவு குறையும்.
ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த பூசணி விதை
பூசணி விதைகளில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், ப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் அழுத்தத்தை எதிர்த்துப் போராடி உடலை இளமையாக வைக்கின்றன. செல்கள் சேதமடைவதையும் தடுக்கின்றன. இதனால் முதுமை நம்மை அண்டாமல் இருக்கும்.
இதயத்தை வலுவாக்கும் பூசணி விதை
பூசணி விதையில் மெக்னீசியம் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதை ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மேலும் இதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதையும் தடுக்க முடியும்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பூசணி விதை
பூசணி விதை நீரழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாக இருக்கும். விதையில் உள்ள ஒமேகா 3 அமிலம், இன்சுலின் சுரப்பை தூண்டி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு பூசணி விதை ஒரு வரப்பிரசாதம் எனலாம்.
பாலியல் மற்றும் தூக்கமின்மை பிரச்சனையை போக்கும் பூசணி விதை
பூசணி விதைகளில் உள்ள கிறிஸ்தோபான் என்னும் அமினோ அமிலம் சரடோனின் என்ற ஹார்மோனை சுரக்க உதவுகிறது. இந்த ஹார்மோன் ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும். மேலும் ஆண்களுக்கு இருக்கும் பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் பூசணி விதை சிறந்த தீர்வை கொடுக்கும். ஆண்களின் பாலியல் ஹார்மோனை தூண்டி, ஆண்மையை அதிகரித்து, விந்தணுக்களின் தரத்தையும் எண்ணிக்கையும் மேம்படுத்தும்.
மேலும் படிக்க | ஈறுகளில் பயங்கர வலியா? ‘இந்த’ வீட்டு வைத்தியங்களை வைத்து சரி செய்து கொள்ளலாம்..
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூசணி விதை
பூசணி விதையில் உள்ள துத்தநாகசத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. துத்தநாக சத்து குறைய மாட்டால், சளி காய்ச்சல் சோர்வு, போன்ற பாதிப்புகள் அதிகரிக்கும். எனவே இதனை தவறாமல் செய்து கொள்வதால், அடிக்கடி நோய்வாய்ப்படாமல் ஆரோக்கியமாக இருக்கலாம். மேலும் செல்களின் வளர்ச்சிக்கும் இது உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகமானால்... இந்த அறிகுறிகள் தோன்றும், அலட்சியப்படுத்தாதீர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ