தீவிர சைவ உணவு உண்பவரா? முட்டையைத் தவிர அதிக புரதச்சத்து கொண்ட உணவுகள் இவை
PURE Veg Proteins: முட்டை சைவமா இல்லை அசைவமா? இந்தக் கேள்விக்கு பதில் தெரியாமல், பலர் புரதச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்... அவர்கள் இந்தக் கட்டுரையை அவசியம் படிக்க வேண்டும்
Vegan Protein: உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேவை என்றாலும், உடலை வலுப்படுத்துவதில் புரதச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. உடலுக்கு போதுமான புரதத்தை வழங்கும் உணவுகளை தினசரி அடிப்படையில் புரத உணவை உட்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளில் புரதம் அதிக அளவில் உள்ளது. அசைவத்துடன் ஒப்பிடும்போது, சைவ உணவில் புரதங்கள் குறைவு. அதிலும் புரதத்தின் அவசியத்தை கருதி சைவ உணவுக்காரர்கள் முட்டையை பல விதங்களிலும் உண்கிறார்கள். ஏனென்றால் முட்டையில் அதிக அளவு புரதம் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் நம்புகிறார்கள்.
கோழியில் இருந்து முட்டை வந்ததா, இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்ற, பதிலே கிடைக்காத கேள்வியைப் போலவே, முட்டை சைவமா இல்லை அசைவமா என்ற கேள்விக்கும் இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை. ஆனால், முட்டை உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். புரதச்சத்து அதிகம் உள்ளது என்பதைத் தவிர, நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும் சிறப்பும் இதற்கு உண்டு. எனவே, சைவம் மற்றும் அசைவ உணவு உண்பவர்கள் முட்டையை உண்கின்றனர்.
ஆனால், தீவிர சைவ உணவு உண்பவர்களில் பெரும்பாலானவர்கள் முட்டையை உண்பதில்லை. பலர், நவராத்திரி போன்ற பண்டிகை காலங்களிலும், சிறப்பு நாட்களிலும் முட்டையை விலக்குகின்றனர். எனவே, புரதத்தைப் பெற முட்டையை உட்கொள்ள முடியாதவர்களுக்கு சத்துக் குறைவு ஏற்படும். எனவே, முட்டைக்கு பதிலாக, முட்டையை விட அதிக புரதம் கொண்ட சில சைவ உணவுகளை உண்ண வேண்டிய அவசியம் எழுகிறது.
சைவ புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். எனவே புரதக் குறைபாட்டைப் போக்க உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய சைவ உணவுகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
மேலும் படிக்க | வயசானாலும் வலிமையும் சுறுசுறுப்பும் மாறாம இருக்க... ‘சில’ புரதம் நிறைந்த உணவுகள்!
சைவ புரதம் நிறைந்த உணவுப் பொருட்கள்
பருப்பு வகைகள்
சைவ உணவு உண்பவர்கள் புரதத்தைப் பெற முட்டைகளுக்குப் பதிலாக பீன்ஸ், உளுந்து மற்றும் பல்வேறு வகையான பருப்பு வகைகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக பட்டாணியில் அதிக அளவு புரதம் உள்ளது. அதிலும் தோல் நீக்காத பயறுகள் புரதத்தின் சுரங்கம் என்றே சொல்லலாம். பயறுகளை முளைகட்டி உண்பது, அதிக புரதத்தைக் கொடுக்கும்.
புரதத்திற்கு டோஃபூ
உடலில் புரதச்சத்து குறைபாடு இருந்தால், சோயாவில் இருந்து தயாரிக்கப்படும் டோஃப்புவை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் இதில் புரதச்சத்து அதிகம் உள்ளது. சைவ உணவு உண்பவர்கள் முட்டைக்கு பதிலாக டோஃபுவை பயன்படுத்தலாம்.
சைவ புரதம் காளான்
காளான் தாவர சிறந்த புரதத்தின் நல்ல மூலமாகும். இதில் போதுமான அளவு புரதம் உள்ளது. காளானை பல்வேறு விதங்களில் சமைத்து சாப்பிடலாம். ஆனால், ஒருபோதும் காளானை அப்படியே உண்ணக்கூடாது.
அவகோடா பழம்
புரதசத்து அதிகம் கொண்ட பழங்களில் அவகேடோவை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறந்த தாவர புரதத்தில் முக்கியமான பழம் அவகோடா ஆகும். ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்களைக் கொண்ட அவகேடோ ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க | சைவம் சாப்பிடுபவரா நீங்கள்..? உங்களுக்கேற்ற டயட் டிப்ஸ்-இதோ..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ