உடல் எடை குறைய...காலை உணவில் புரதம் நிறைந்த இவற்றை சாப்பிட்டால் போதும்!!

Weight Loss Breakfast: உடல் எடையை குறைக்கவும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும், காலை உணவில் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 18, 2023, 12:10 PM IST
  • அவல் சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டிலும் சிறந்தது.
  • இதில் குறைந்த கலோரி உணவான ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் உள்ளது.
  • உங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், தினமும் காலை உணவில் அவல் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
உடல் எடை குறைய...காலை உணவில் புரதம் நிறைந்த இவற்றை சாப்பிட்டால் போதும்!! title=

எடை இழப்பு குறிப்புகள்: உடல் எடை அதிகரிப்பது நம்மில் பலருக்கு உள்ள மாபெரும் பிரச்சனையாக உள்ளது. இதை எப்படி கட்டுப்படுத்துவது? உணவில் எந்த விதமான மாற்றங்களை செய்வது? இப்படி பல கேள்விகள் நம் மனதில் இருந்துகொண்டே இருக்கின்றன. ஆரோக்கியமான உணவுமுறை உடல் எடையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. ஆனால் ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவது பலருக்கு மிக கடினமாக இருக்கிறது. ஏனெனில் பலரால் உணவை கட்டுப்படுத்த முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு உடல் எடையை குறைப்பது ஒரு சவாலாகவே தெரிகிறது. எனினும் சில எளிய வழிமிறைகளின் மூலம் நம் உடல் எடையை எளிதாக கட்டுப்படுத்தலாம். அவற்றில் ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.

புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகள்: 

காலை உணவே மிக முக்கியமான உணவாகும். ஏனெனில் இது நாள் முழுவதும் உடலில் ஆற்றலைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. நாம் உண்ணும் காலை உணவு சரியாக இல்லை என்றால், நாம் அதை உட்கொண்டு சிறிது நேரத்திற்கெல்லாம் நமக்கு மீண்டும் பசி எடுக்கத் தொடங்கிவிடும். பசியின் காரணமாக நாம் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளத் தொடங்குவோம். 

ஆகையால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். காலை உணவில் புரோட்டீன் நிறைந்த பொருட்களை உட்கொள்ள வேண்டும். இவற்றை உட்கொள்வதன் மூலம் பசியைக் கட்டுப்படுத்தலாம். உடல் எடையை குறைக்கவும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும், காலை உணவில் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

காலை உணவில் இவற்றை சாப்பிடுவது நன்மை பயக்கும்

பயத்தம்பருப்பு கஞ்சி

பயத்தம்பருப்பில் பல வகையான புரதங்கள் நிறைந்துள்ளன. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க இது பெரிதும் உதவுகிறது. இதனுடன் காய்கறிகளை சேர்த்து தால் செய்தும் சாப்பிடலாம். மேலும் இதை அரிசியுடன் சேர்த்து அரைத்து அடையாகவும் உட்கொள்ளலாம். 

ஓட்ஸ் கஞ்சி

ஓட்ஸில் புரதம் நிறைந்துள்ளது. ஓட்ஸ் எளிதில் ஜீரணமாகும். இதை சாப்பிட்ட பிறகு மீண்டும் மீண்டும் பசி எடுப்பதில்லை. நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வுடன் இருக்கும். ஆகையால் காலை உணவில் ஓட்ஸ் சாப்பிடுவதன் மூலம் உங்கள் எடையை எளிதாகக் குறைக்கலாம்.

மேலும் படிக்க | தொங்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்போ இந்த கருப்பு உணவுகளை ட்ரை பண்ணுங்கள்

அவல்

அவல் சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டிலும் சிறந்தது. ஏனெனில் இதில் குறைந்த கலோரி உணவான ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே, உங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், தினமும் காலை உணவில் அவல் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அவல் கொண்டு உப்புமா செய்யும்போது, ​​அதில் அதிக காய்கறிகளைப் பயன்படுத்தினால் உங்கள் காலை உணவு இன்னும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். 

உப்புமா

ரவை மற்றும் காய்கறிகள் கொண்டு செய்யப்படும் உப்புமா ஒரு சிறந்த காலை உணவாக கருதப்படுகின்றது. இது எளிதில் ஜீரணமாகும். இது ஒரு லேசான புரத காலை உணவாகும். இது எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். காலை உணவாக செய்யும்போது இதை, சில நிமிடங்களில் தயார் செய்துவிடலாம். எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதையும் காலை உணவில் ட்ரை செய்யலாம். 

முளை கட்டிய பயறுகள்

முளைத்த பயறுகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பல பண்புகள் நிறைந்துள்ளன. ஆகையால் இவற்றை உட்கொள்வதால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். காலை உணவில் லேசாக, ஆனால் ஆரோக்கியமாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் முளை கட்டிய தானிய சாட் சாப்பிடலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சைவம் சாப்பிடுபவரா நீங்கள்..? உங்களுக்கேற்ற டயட் டிப்ஸ்-இதோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News