Protein In Food: நமது தினசரி உணவில் தேவையான அளவு புரதம் இருப்பதை உறுதி செய்வதைப்போல, புரதச்சத்தின் தரத்தையும் பூர்த்தி செய்வதை உறுதி செய்வது முக்கியம். ஆரோக்கியமான உணவின் இன்றியமையாத கூறுகளில் ஒன்று புரதங்கள். தசை பராமரிப்பு, தோல், ஹார்மோன்கள் மற்றும் அனைத்து உடல் திசுக்களிலும் முக்கிய பங்கு வகிப்பதால் புரதங்கள் பொதுவாக உடலின் கட்டுமானத் தொகுதிகள் என்று குறிப்பிடப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான இந்தியர்களுக்கு புரதச்சத்து குறைபாடு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்திய உணவில் உள்ள புரத பற்றாக்குறையில்,தரம் தான் பிரச்சனை, அளவு அல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய உணவுமுறை தானியங்களை மையமாகக் கொண்டது. புரதம் நிறைந்த தானியங்கள், உடலுக்குத் தேவைப்படும் புரதத்தின் அளவைப் பூர்த்தி செய்யக்கூடும் என்றாலும், புரதத்தின் தரம் என்பது இந்தியர்களுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது.


ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசகரும், சூப்பர்ஃபுட்ஸ் பள்ளத்தாக்கு அறிவியல் கவுன்சிலின் உறுப்பினருமான ஷீலா கிருஷ்ணசாமி தரமான புரதம் தொடர்பாக விளக்கம் அளித்தார், "நல்ல ஆரோக்கியத்திற்கான புரதத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்திருந்தாலும், தற்போதைய இந்திய உணவுகளில் புரதத்தின் தரம் இல்லை என்பது பலருக்குத் தெரியாது. கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவை உட்கொள்வது அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களின் தேவையையும் பூர்த்தி செய்யாது. எனவே, தினசரி உணவை புரதத்தின் அளவு மட்டுமல்ல, தரமும் கொண்டு சமநிலைப்படுத்துவது முக்கியம்."


அதாவது, தானியங்களை பருப்புகளுடன் இணைப்பது சைவ உணவில் அத்தியாவசிய அமினோ அமில தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது, அதே நேரத்தில் அசைவ உணவில், முட்டை மற்றும் இறைச்சிகள் மூலம் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் கிடைக்கிறது.


மேலும் படிக்க | Healthy Tips: தினமும் அதிகாலை வெந்நீர், ஆஹா பலன்கள் கிடைக்கும் 


புரதம் பற்றிய தவறான எண்ணங்கள்
இந்தியர்களிடையே உள்ள புரத இடைவெளி பற்றிய சில தவறான எண்ணங்களை நீக்கி, உங்கள் உணவில் புரதத்தின் தரத்தை உயர்த்துவதற்கான உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். உரையாடல் பின்வருமாறு:


புரதம் மிகவும் முக்கியமானது


ஆரோக்கியமான, வலுவான உடலை உருவாக்குதல்


புரதம் என்பது எலும்புகள், தசைகள், குருத்தெலும்பு மற்றும் தோலின் முக்கியமான கட்டுமானத் தொகுதியாகும். கூடுதலாக, நமது முடி மற்றும் நகங்கள் பெரும்பாலும் புரதத்தைக் கொண்டிருக்கின்றன.


சேதத்தை சரிசெய்தல்


நமக்கு காயம் ஏற்பட்டால், திசுக்களை உருவாக்கவும் சரிசெய்யவும், தசையை பராமரிக்கவும், நமது உடல் புரதத்தைப் பயன்படுத்துகிறது.


ஆக்ஸிஜனை வழங்குதல்


இரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் என்ற புரதம் உள்ளது, இது உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் ஒரு கலவை ஆகும். ஹீமோகுளோபின் போதுமான அளவு உற்பத்தி செய்யப்படுவதற்கு புரதம் அவசியம்.


மேலும் படிக்க | நோய்களை ஓட விரட்டும் இந்த ‘மேஜிக்’ மசாலாக்கள் தினசரி உணவில் இருக்கட்டும்!


உணவு செரிமானம்


ஒவ்வொரு நாளும் நாம் உட்கொள்ளும் புரதத்தில் பாதியானது, உணவை ஜீரணிக்க உதவும் நொதிகளின் தொகுப்பிற்கு செல்கிறது.


ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துதல்


ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவதில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக பருவமடையும் போது உயிரணுக்களின் மாற்றம் மற்றும் வளர்ச்சியின் போது ஹார்மோர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.


உணவில் புரதம்
புரதம் பொதுவாக பருப்பு வகைகள், தினை மற்றும் தானியங்கள், பால் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்கள், பருப்புகள், அசைவ உணவுகளான முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றில் காணப்படுகிறது.


நமக்கு எவ்வளவு புரதம் தேவை?
ICMR RDA அறிக்கையின்படி,வயது வந்த ஒருவருக்கு பொதுவாக ஒரு நாளைக்கு 54 கிராம் புரதம் தேவைப்படுகிறது.


இந்தியாவில் NSSO (2011-12) போன்ற மக்கள்தொகை அடிப்படையிலான ஆய்வுகள், இந்தியர்கள் தங்கள் உணவில் தினசரி இந்த அளவை உட்கொள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.


மேலும் படிக்க | கருவுறுதலில் சிக்கல் ஏற்படாமல் இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள் 


தரமற்ற புரதம்


புரதம் 20 அமினோ அமிலங்களால் ஆனது, மேலும் இந்த 20ல் 11ஐ உடல் உற்பத்தி செய்ய முடியும். மீதமுள்ள ஒன்பதும் உணவில் இருந்து வர வேண்டும். மீதமுள்ள இந்த 9 அமினோ அமிலங்கள் அத்தியாவசிய அமினோ அமிலங்கள்.


முழுமையான புரதங்கள் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் வழங்குகின்றன, அவை உடலால் உருவாக்க முடியாது.


பால், முட்டை, இறைச்சி மற்றும் சோயா ஆகியவை முழுமையான புரதம் கொண்ட உணவுகள் ஆகும். பெரும்பாலான தாவர உணவுகளில் (சோயாவைத் தவிர) ஒரு அத்தியாவசிய அமினோ அமிலம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, தானியங்களில் லைசின் குறைபாடு உள்ளது , இதுவொரு அத்தியாவசிய அமினோ அமிலம் ஆகும்.


பருப்புகளில் மெத்தியோனைன் இல்லை. நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியாவில் உள்ள அனைத்து உணவு வகைகளிலும் இந்தியர்கள் தானியங்களை அதிகம் உட்கொள்வதாக தரவு காட்டுகிறது. புரதத்திற்கான RDA பூர்த்தி செய்யப்பட்டாலும், தானியங்கள் முழுமையடையாத புரதங்களாக இருப்பதால், புரதம் தரம் குறைவாக உள்ளது.


மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு மிஞ்சிய ஜீரகம் கல்லீரலை பாதிக்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ