Weight Loss Tips: இன்றைய காலகட்டத்தில் பல பெண்களுக்கு பிசிஓஎஸ் பிரச்சனை உள்ளது. பிசிஓஎஸ் உள்ள பெண்களிடம் எடை அதிகரிப்பு காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலையின்மை. பிசிஓஎஸ் என்பது பெண்களின் உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலையின்மையால் ஏற்படும் ஒரு நிலையாகும். இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிக அளவில் மனநிலை மாற்றங்களும் ஆரோக்கியமற்ற உணவுகள் மீதான ஏக்கமும் இருக்கும். இதனால் பெண்கள் அதிகமாக சாப்பிடுகின்றனர். மேலும், இந்த காலகட்டத்தில், பெண்களுக்கு இன்சுலின் ஹார்மோன்கள் போதுமான அளவு உற்பத்தி ஆவதில்லை. இதன் காரணமாக, மற்ற ஹார்மோன்களின் சமநிலையும் பாதிக்கப்பட்டு, இன்சுலின் எதிர்ப்பு நிலை உருவாகிறது. மோசமான இன்சுலின் உணர்திறன் காரணமாக, எதைச் சாப்பிட்டாலும், அதிலிருந்து கிடைக்கும் ஆற்றலை, நம் உடலில் ஆற்றலுக்குப் பயன்படுத்த முடியாமல், கொழுப்பாக உடலில் தேங்கத் தொடங்குகிறது. இதன் காரணமாக பெண்களிடம் எடை அதிகரிப்பு பிரச்சனை காணப்படுகிறது. ஆனால் பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு எடை அதிகரிப்பதால் கடுமையான அறிகுறிகள் ஏற்படலாம். இதனால் அவர்களின் நிலை மோசமடையலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நல்ல விஷயம் என்னவென்றால், பிசிஓஎஸ் உள்ள பெண்கள் சில ஆரோக்கியமான உணவுகளைச் சேர்த்துக் கொண்டால், அது ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பிசிஓஎஸ் காரணமாக அதிகரித்த எடையைக் கட்டுப்படுத்தவும் (Weight Loss) உதவும். கூடுதலாக, சில ஆரோக்கியமான பானங்களுடன் உங்கள் நாளைத் தொடங்குவது பிசிஓஎஸ் (PCOS) -ஐ குணப்படுத்துவதில் பெரும் உதவியாக இருக்கும். பிசிஓஎஸ் உள்ள பெண்களின் எடையைக் கட்டுப்படுத்த உதவும் 5 காலை பானங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.


பிசிஓஎஸ் உள்ள பெண்கள் உடல் எடையை குறைக்க இந்த 5 காலை பானங்கள் (Best Morning Drink For PCOS Weight Loss): 


1. க்ரீன் ஸ்மூத்தி (Green Smoothie)


ஒரு பிடி கீரை, கோஸ், அரை வெள்ளரி, ஒரு பச்சை ஆப்பிள், ஒரு சிறிய துண்டு இஞ்சி மற்றும் தண்ணீர் ஆகியவற்றை அரைத்து அதன் மேல் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடவும். இந்த ஸ்மூத்தியில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் உள்ளன. இது பிசிஓஎஸ் -ஐ நிர்வகிக்கவும் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.


2. வெந்தய நீர் (Methi Seeds)


ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். வெந்தய விதைகள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், பிசிஓடி உள்ள பெண்களின் மாதவிடாய் சுழற்சியைக் கட்டுப்படுத்தவும் உதவும்.


மேலும் படிக்க | யூரிக் ஆசிட் ஏழரையை கூட்டும் பட்டாணி! ‘இந்த’ பிரச்சனை இருந்தா பச்சை பட்டாணிக்கு நோ தான்


3. மஞ்சள் நீர் (Turmeric Water)


ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை வெந்நீரில் கலக்கவும். மேலும், சிறந்த உறிஞ்சுதலுக்கு ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்க்கவும். அதன் பிறகு இதை குடிக்கவும். மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், பிசிஓடி (PCOD) தொடர்பான வீக்கம் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மையை நிர்வகிக்க உதவும்.


4. ஸ்பியர்மின்ட் டீ (Spearmint Tea)


புதிய அல்லது உலர்ந்த புதினா இலைகளை 5-10 நிமிடங்கள் சூடான நீரில் ஊற வைக்கவும். அதை வடிகட்டி குடிக்கவும். புதினா தேநீர் ஆண்ட்ரோஜன் அளவைக் குறைக்க உதவுகிறது. ஆண்ட்ரோஜன் பிசிஓடி -ஐ அதிகரித்து நிலைமையை மோசமாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 


5. இலவங்கப்பட்டை நீர் (Cinnamon Water)


ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடியை வெந்நீரில் கலக்கவும். நன்றாக கலந்து குடிக்கவும். இலவங்கப்பட்டை இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவும், இது பிசிஓடி உடன் அடிக்கடி தொடர்புடைய இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்துவதற்கு நன்மை பயக்கும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | பாலுடன் ஜோடி சேர்ந்தால் எலும்பை ‘பக்கா’ வலுவாக்கும் உலர் பழங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ