தொப்பையை கரைத்து உடல் எடையை குறைக்கும் 'ஹெல்தி ஸ்னாக்ஸ்': ஒல்லியாக ஒரு ருசியான வழி

Weight Loss Tips: ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க, அதை பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். குறிப்பாக உணவு பழக்கத்தில் சீரான சமநிலையை பராமரிகக் வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 26, 2023, 06:49 AM IST
  • ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க, அதை பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
  • குறிப்பாக உங்கள் உணவு பழக்கத்தில் சீரான சமநிலையை பராமரிகக் வேண்டும்.
  • அவ்வப்போது நமக்கு வரும் பசிக்காக நாம் உட்கொள்ளும் தின்பண்டங்களால் நமது உடல் எடை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளாது.
தொப்பையை கரைத்து உடல் எடையை குறைக்கும் 'ஹெல்தி ஸ்னாக்ஸ்': ஒல்லியாக ஒரு ருசியான வழி

Weight Loss Tips: உடல் எடையை குறைக்க நாம் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். குறிப்பாக தொப்பை வந்துவிட்டால், அதை சரி செய்வது மிக கடினமாகிவிடுகிறது. உடல் எடையை குறைக்க நமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது மிக அவசியமாகும். எடை அதிகரிப்பதற்கு உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு. 

Add Zee News as a Preferred Source

ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க, அதை பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். குறிப்பாக உங்கள் உணவு பழக்கத்தில் சீரான சமநிலையை பராமரிகக் வேண்டும். குறிப்பாக அவ்வப்போது நமக்கு வரும் பசிக்காக நாம் உட்கொள்ளும் தின்பண்டங்களால் நமது உடல் எடை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளாது. ஆனால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உட்கொள்ளக்கூடுய சில ஆரோக்கியமான தின்பண்டங்களும் உள்ளன. முக்கிய உணவுகளுடன், இந்த ஆரோக்கியமான தின்பண்டங்களும், அதாவது ஸ்னாக்ஸும் (Snacks) உங்கள் எடை இழப்பு பயணத்திற்கு பங்களிக்கின்றன. புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான தின்பண்டங்களை சாப்பிடுவது, உணவில் ஊட்டச்சத்துக்களை சேர்ப்பதைத் தவிர எடையைக் குறைக்க உதவும். புரதம் மற்றும் நார்ச்சத்து உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் வைத்து பசியைத் தடுக்கிறது.

உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்

1. பழங்கள்

எடை குறைப்பின் (Weight Loss) போது தின்பண்டங்கள் என்று வரும்போது, பழங்களையும் தேர்வு செய்யவும். பழங்களிலும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது உடலுக்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை சேர்ப்பதைத் தவிர, உங்கள் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.

2. வேகவைத்த / சமைத்த சர்க்கரைவள்ளி கிழங்கு

உருளைக்கிழங்கு குடும்பத்தைச் சேர்ந்தது என்றாலும், எடையைக் குறைக்கும் விஷயத்தில், இனிப்பு உருளைக்கிழங்கு ஒரு வரப்பிரசாதம். வேகவைத்த அல்லது சமைத்த சர்க்கரைவள்ளி கிழங்கில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. மேலும் இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதில் இருக்கும் மாவுச்சத்து உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும்.

3. முளைகள் காய்கறி சாலட்

முளைகள் மற்றும் காய்கறி சாலட் ஒன்றாக எடை இழப்புக்கு ஒரு சிறந்த கலவையாகும். இதில் புரதங்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது உங்கள் வயிற்றை நிரம்பிய உணர்வுடன் வைத்திருப்பதைத் தவிர, வறுத்த பொருட்களைத் தேவையில்லாமல் உட்கொள்வதையும் தவிர்க்கும். இது தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைக்க உதவும். 

மேலும் படிக்க | தீராத மலச்சிக்கலையும் தீர்த்து வைக்கும் சிறந்த ‘வெற்றிலை’ வைத்தியம்!

4. நட்ஸ்

நட்சில் சீரான அளவு புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. பசியை போக்க, ஒரு பழம் மற்றும் நட்ஸை சாப்பிடுங்கள். உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் ஆகியவற்றின் கலவையானது உங்கள் உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அதிகமாக்கும். 

5. முட்டையின் வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் நிறைந்துள்ளது. ஒரு சிறந்த சிற்றுண்டியான இது உங்களை எப்போதும் நிறைவான உணர்வுடன்  வைத்திருக்கும். இது மசில் மாஸையும் மேம்படுத்தும். இதன் மூலம் இது எடை இழப்புக்கு வழிவகுக்கும். உடல் எடையை குறைக்கும் உணவில் முட்டையை சேர்த்து கொள்வது நல்லது.

6. தயிர்

தயிர் கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த குறைந்த கொழுப்பு உணவு. இது ஒரு சிறந்த புரோபயாடிக் ஆகும், இது நமது குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, எடை இழப்பை ஊக்குவிக்க உதவுகிறது. எடை இழப்புக்கு பல ஆரோக்கியன நன்மைகள் நிறைந்த தயிரை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

7. மிஸ்ட் சீட்ஸ் விதைகள்

ஆளி, சூரியகாந்தி, தர்பூசணி, முலாம்பழம், கருப்பு எள் மற்றும் பூசணி விதைகள் எடை இழப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு சிறந்த வழி ஆகும். இந்த விதைகளில் நார்ச்சத்து, வைட்டமின் ஈ, அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் உள்ளன. விதைகளில் உள்ள புரதம் பசியின்மை மற்றும் பசி ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த உதவும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நினைவாற்றல் முதல் நீரிழிவு வரை... இனி தயிர் சாதம் என யாரையும் கிண்டல் செய்யாதீங்க..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News