எடை குறைக்கும் குறிப்புகள்: உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் பிற வாழ்க்கை முறைக் கோளாறுகளைத் தவிர்க்க ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். நமது உடலுக்கு அனைத்து சத்துகளும் கண்டிப்பாக சரியான அளவில் தேவை. அதேபோல், குறைந்த அளவு கலோரி உட்கொள்ளலும் உடலுக்கு அவசியம். நாம் நாள் முழுவதும் கலோரி நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உடல் தேவைக்கு அதிகமான கலோரிகளை சேமித்து வைக்கிறது. மேலும் நாள் முழுவதும் எவ்வளவு கலோரிகளை நாம் எடுத்துக்கொள்கிறோமோ அவ்வளவு கலோரிகளை நாம் எரிக்க வேண்டும். ஆனால் இதைச் செய்யாவிட்டால், கூடுதல் கலோரிகள் உடலில் கொழுப்பு வடிவில் சேமிக்கப்படும். இதன் காரணமாக உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகின்றது. அதே போல் உடல் பருமன் பல்வேறு வாழ்க்கை முறை கோளாறுகளை ஏற்படுத்துகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எடை இழப்புக்கு பாதாம்


உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உலர் பழங்களை, கொட்டைகளை பயன்படுத்தலாமா? இவற்றால் உடல் எடை கூடுமா? இப்படி பல சந்தேகங்கள் பொதுவாய் இருப்பதுண்டு. எடையை குறைக்க முயற்சிக்கும் போது கொட்டைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று நாம் அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறோம். ஏனெனில் கொட்டைகளில் அதிக அளவு கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளன. ஆனால் உடல் எடையை குறைக்க உதவும் சில கொட்டைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த பருப்புகளில் பாதாம் பருப்பும் முக்கியமான ஒன்றாகும். ஆம், பாதாம் எடையைக் குறைக்க உதவும். இதை சரியான வழியில் உட்கொண்டால், இது எடையைக் குறைக்கவும், தொப்பையைக் குறைக்கவும் உதவும். எடை குறைப்பதில் பாதாம் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 


எடை இழப்புக்கு பாதாம் எப்படி உதவும்?  


பாதாமில் பல வித ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே இது ஒரு சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது. நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இதில் ஏராளமாக காணப்படுகின்றன. இவை எடை இழப்புக்கு உதவும். பாதாம் சாப்பிடுவதால் வயிறு நீண்ட நேரம் நிறைந்த உணர்வுடன் இருக்கும். இது உங்கள் பசியைத் தணித்து, அதிகமாகச் சாப்பிடுவதையும் தடுக்கிறது. பாதாமில் அதிக புரதம் உள்ளது. இது தசைகளை உருவாக்க உதவுகிறது. பாதாம் பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் தொப்பை கொழுப்பை குறைக்கலாம்.


எடை இழப்புக்கு பாதாம் சாப்பிடுவது எப்படி?


ஊறவைத்த பாதாமை காலையில் சாப்பிடுங்கள்


உடல் எடையை குறைக்க, தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த பாதாமை சாப்பிடலாம். ஊறவைத்த பாதாமை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.


பாதாம் தூள்


உடல் எடையை குறைக்க பாதாம் பொடியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பாதாம் பொடியை கஞ்சி அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். இதை உட்கொள்வது உடல் எடையை குறைக்க பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமின்றி, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும், ஆற்றலும் கிடைக்கும்.


பாதாமை ஷேக் அல்லது ஸ்மூத்தியில் கலந்து சாப்பிடவும்


நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், பாதாமை ஷேக் அல்லது ஸ்மூத்தியில் கலந்து சாப்பிடலாம். சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், உடல் எடையைக் குறைக்கவும் இது உதவும்.


மேலும் படிக்க | உணவை ஆற்றலாக மாற்றி ஊக்கம் கொடுக்கும் உணவுகள் எது? முக அழகுக்கும் இதுதான் பெஸ்ட்


பாதாம் பருப்பை சிற்றுண்டியாக சாப்பிடுங்கள்


உடல் எடையை குறைக்க பாதாமை சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். பாதாமில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


பாதாம் பால் குடிக்கவும்


உடல் எடையைக் குறைக்க, காலை உணவில் பாதாம் பாலை அருந்தலாம். இதன் மூலம், உங்கள் உடலுக்கு இரட்டிப்பு ஊட்டச்சத்து கிடைக்கும் மற்றும் பசியும் கட்டுப்படுத்தப்படும்.


எடை இழப்புக்கு இந்த வழிகளில் பாதாம் பருப்பை உட்கொள்ளலாம். இருப்பினும், நீங்கள் ஏதேனும் நோய் அல்லது உடல்நல பிரச்சனையுடன் போராடிக் கொண்டிருந்தால், அதை உட்கொள்ளும் முன் கண்டிப்பாக ஒரு சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் பற்றிய பொய்யான தகவல்கள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ