எடை குறைப்பு குறிப்புகள்: இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பது கடினமான மற்றும் சவாலான பணியாக மாறியுள்ளது. இதில், சரியான உடற்பயிற்சியுடன், நீங்கள் என்ன, எப்போது சாப்பிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதனுடன், தினமும் ஒரே மாதிரியான சலிப்பான உணவைச் சாப்பிடுவதற்குப் பதிலாக, நீங்கள் சுவாரஸ்யமாகவும் சுவையாகவும் இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். நமது உணவில் சரியான அளவு நார்ச்சத்து மற்றும் புரதத்தை சேர்ப்பதால், நமது எடையை சரியாக வைத்திருக்க முடியும்.
உடல் எடையை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறர்கள். கடுமையான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள், ஜிம் செல்கிறார்கள். ஆனாலும் பலருக்கு இதனால் பெரிதாக எந்த பலனும் கிடைப்பதில்லை. ஆனால், எடையை குறைக்க இப்படித்தான் கடினமாக உழைகக் வேண்டும் என்றில்லை. சில எளிய வழிகளிலும் உடல் எடையை விரைவாக குறைக்கலாம். அப்படி ஒரு சுபலமான, சுவையான வழி பற்றி இந்த பதிவில் காணலாம். உடல் எடையை குறைக்க வளர்சிதை மாற்ற விகிதத்தை சரிசெய்ய வேண்டும். உணவு செரிமானத்தின் வேகத்தை அதிகரித்து, தசைகளுக்கு ஆற்றல் வரும் வகையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் மற்றும் குறிப்பாக காலை உணவில் சில ஆரோக்கியமான உணவுகளை சேர்க்கலாம்.
காலை உணவில் சேர்க்கக்கூடிய சில சத்தான, உடல் எடையை குறைக்கக்கூடிய ரெசிபிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்
1. எடையை குறைக்கும் ஓட்ஸ் அடை
ஓட்ஸ் அடையில் அதிக நார்ச்சத்து மற்றும் ஆரோக்கிய அம்சங்களின் தன்மை உள்ளது. அதுமட்டுமின்றி, அதிக புரதச்சத்து தரும் காய்கறிகளையும் இதில் சேர்க்கலாம். இதை சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது, கொழுப்பு செரிமானத்தின் வேகத்தையும் அதிகரிக்கிறது. இது எடை குறைக்க உதவுகிறது. இதை செய்ய, ஓட்ஸை ஊறவைத்து மிக்ஸியில் அரைக்கவும். அதில் சிறிது உப்பு, சோடா மற்றும் காய்கறிகளை கலக்கவும். இப்போது அதை பீட் செய்து 30 நிமிடங்கள் அப்படியே இருக்க விடவும். பின்னர் இதை அடைகளாக வார்க்கவும். இதன் மேல் மிளகாய்த்தூள் மற்றும் சீரகப் பொடியை தூவலாம்.
மேலும் படிக்க | ஆயுளை அதிகரிக்க இந்த வாழ்க்கைமுறை மாற்றங்கள் அவசியம்! ஹைப்பர்டென்சன் மரணங்கள் அலர்ட்
2. எடை இழப்புக்கு பாசிப்பயறு அடை
பாசிப்பயறு அடை விரைவான எடை இழப்புக்கு உதவும். இந்த உயர் புரத காலை உணவு செரிமான அமைப்புக்கும் நல்லது. இதை செய்ய பச்சை பயறை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அரைத்தால் போதும். கொத்தமல்லி இலைகள், வெங்காயம், கேரட் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி, இந்த மாவில் கலக்கவும். மேலே சிறிது உப்பு, கருப்பு மிளகு மற்றும் சிவப்பு மிளகாய் தூள் தூவி அடைகளாக வார்த்து உட்கொள்ளலாம். இதை பச்சை கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும்.
3. எடை இழப்புக்கு ராகி அடை
ராகி அதிக நார்ச்சத்து, புரதம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியமாகும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது சரியான உணவாக இருக்கும். இதை செய்ய, ராகியை அரைத்து, அதில் சிறிது உப்பு மற்றும் மசாலாப் பொருள்களைச் சேர்க்க வேண்டும். இப்போது இதை அடைகளாக செய்யலாம். தேவைப்பட்டால், இதில் பனீரை ஸ்டப்பிங் செய்ய பயன்படுத்தவும். பனீரில் மீதமுள்ள காய்கறிகளை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த உயர் புரத காலை உணவை சாப்பிடலாம்.
மேலும் படிக்க | இந்த நோய் இருந்தால் அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிடவே கூடாது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ